இடுகைகள்

வலியையா புரியப்போகிறாய்.......?

நீ .... என்னை விட்டு.... பிரிந்து சென்று.... விட்டாய்....... உனக்கும் சேர்த்து..... என் இதயம் வலிக்கும்... வலியை யார் அறிவர்......? என்னிடம்..... கொட்டிக்கிடந்த..... காதலையே உன்னால்..... புரிந்துகொள்ள முடியவில்லை....... வலியையா ..... புரியப்போகிறாய்.......? & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் பதிவு -202

மனம் குளிர்ந்தேன் ....!

மனதில் இருள் .... கருவறையில் ..... இறைவனுக்கு .... காட்டும் ஒளியில் .... மனம் குளிர்ந்தேன் ....! & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

இறை காதல் கஸல்கள்

ஐம்புலனை .... அடக்கும் ஆமையின் ... ஆற்றல் எனக்கில்லை ...(-) நான் ..... ஆறறிவு மனிதன் (+) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன் 

ஆன்மீக கஸல்

நீந்த துடிக்கும் மீன் குஞ்சு போல் .... இறை ஆசை .....(+) வறண்டிருக்கும் குளம் போல் ...... மனம் ......(-) & ஆன்மீக கஸல் கவிப்புயல் இனியவன்

சென்ரியூ

சர்க்கரை விலையேற்றம் சந்தோசப்படுகிறார் சர்க்கரை நோயாளி & சென்ரியூ

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்ககாட்சி கூடத்தில் சிறை @@@ கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் பலவர்ணங்களுடன் வெடிக்கிறது ஏழைவீட்டில் பட்டாசு & கவிப்புயல் இனியவன்

இனிய தீபாதிருநாளின்

தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... தீப காந்திகல்போல் வாழ்........ தீம் சொல்லால் பேசு.......... தீரம் கொண்டசெயல் செய்..... தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....! & இனிய இனிப்பான இனிய தீபாதிருநாளின் இனியவனின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

பட்டுப்போன எலும்போடு..... தெருத்தெருவாய் சுற்றுகிறது  செத்துப்போன கைப்பிடி @@@ மனிதன் கால்தான் வைத்தான் நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம் குளத்துமீன்கள் @@@ அழுகுரல் சத்தம் துடிப்பார் யாருமில்லை பொம்மைகுழந்தை @@@ மின்சார கம்பத்தில் சந்தோசமாய் வாழுகின்றன குருவிகூடு @@@ ஆசைகள் நிறைவேறுகிறது எல்லோருடைய வாழ்க்கையிலும் கனவு @ ஹைக்கூ கவிதைகள் கவிப்புயல் இனியவன்

உன் அழைப்புக்காய்.....!

நீ.... காதலை.... மறுத்த அந்த நொடி..... இதயம் கல்லறை...... சென்றுவிட்டது.....! மூச்சு மட்டும்....... பேச்சுக்காக இயங்குது..... தோற்றுப்போனாலும்..... தேடிக்கொண்டிருக்கிறேன்..... உன் அழைப்புக்காய்.....! எனக்காக ஒருமுறை.... வந்துவிட்டு போ...... இல்லை வந்து என்னை..... கொண்றுவிட்டு போ....! & வலிக்கும் இதயத்தின் கவிதை பதிவு -201 கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ தொடர்

பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

உன் காதல் வேண்டும் .....!

கனவிலும் ......... நினைவாலும் ...... கொல்வது  போதாதென்று ...... மௌனத்தாலும் ...... கொல்கிறாய் .......... தயவு செய்து நிஜமாய்...... கொண்றுவிடு .........! என் குறைந்த பட்ச.... கோரிக்கை நீ வேண்டும் ..... அதிக  பட்சகோரிக்கை ..... நீயே  வேண்டும் ........ முடியாதுபோனால் ........ உன் காதல் வேண்டும் .....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்  

ஆண் மரங்கள்.....

ஒரு...... முறை கண்.... சிமிட்டி விடு..... பூக்காமல் இருக்கும்..... ஆண் மரங்கள்..... பூக்கட்டும்.....! கண் ஓரத்தில்.... சிறு கண்ணீர் சிந்து.... பாலவனத்தில்...... நீர் ஊற்று வரட்டும்........! & சின்ன சின்ன காதல் வரி கவிப்புயல் இனியவன்

ஹைக்கூக்கள்

பட்டாசு வெடித்தது துர்நாற்றம் வயிற்றை குமட்டியது தீ விபத்தில் கருகிய உடல் ^ கவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்) கவிப்புயலின் ஹைக்கூக்கள் -------------------------------------------- இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி ^^^ இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாக...