இடுகைகள்

நட்பு

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................நட்பு........................!!! அமைதியான நேரத்தில் என்....... பலவீனத்தை சொன்னான் நண்பன்......! ^^^ அன்று  நட்பு இல்லையென்றால் ... அன்றே பாடையில் போயிருப்பேன் ......! ^^^ மூச்சுக்கு காற்று நண்பன் .... என் உயிருக்கு நீயே நண்பன் .....! ^^^ நான் போகும் இடமெல்லாம்.... நிழலாய் தொடர்கிறான் நண்பன் ^^^ மறந்துபோயும் கேட்கமாட்டான் மறக்க மாட்டாய்தானே என்னை என்று.....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன் 

தொழிலாளர் தினக் கவிதை

தொழிலாளர்  தினக் கவிதை ^^^^^ உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது .... உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது .... உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை .... ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை .... உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....! களைப்பில் உழைப்பின் முதுகு .... கேள்விக்குறியாய் வளைந்தது .... சளித்து ,வெறுத்து ,கொண்டனர் .... அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் .... திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....! தூங்கியவர்கள் விழித்து கொண்டனர் .... திரட்டி கொண்டனர் தம்பலத்தை ..... நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் .... நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் .... வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....! நோக்கம் நிறைவேறும்வரை ...... உக்கிரமானது சர்வதேசப் புரட்சி...... உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் .... உழைக்கும் நேரம் எட்டுமணியாக ..... உரிமையை போராடி வென்றனர்.....! போராடி வென்ற தொழிலாளர் தினம் ..... பேச்சளவில் இன்று சட்டத்திலும் ... சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ... மனத்தால் உழைப்பின் புனிதத்தை ... உணரும் நாள் என்று உதயமாகிறதோ .... அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......! @ கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாண...

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................காதல்........................!!! காதல் ஒரு வழி பாதை ...... நினைக்க தெரியும் மறக்க தெரியாது....! ----- உன்னோடு வாழவும் துடிக்கிறேன்.... மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....! ----- உதடு சிரிக்கிறது ... இதயமோ அழுகிறது ......! ----- காற்றிருந்தால்  பட்டம் பறக்கும் காதல் இருந்தால்  வாழ்க்கை சிறக்கும்....! ----- காதலில் நினைவுகள் முற்கள் கனவுகள் வாசனைமலர்கள் ....! @@@ இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்

மழை

இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து !!!.....................மழை.........................!!! வெட்டிய மரங்களின் ஓலங்கள் .... அழுது கொட்டியது அடைமழை ....!!! ||||||| வானம் கண்ணீர் வடித்தாள் - பருவ மழை வானம் கதறி அழுதாள் - அடைமழை |||||||| பருவத்துக்கு மழைபெய்தால் - வாசம் பருவம் தவறி மழைபெய்தால் -நாசம் ||||||| விவசாயியின் நண்பன் - மழை வியாபாரியின் எதிரி -மழை |||||| மனதில் என்றும் முதல் காதலும்.... முதல் மழையில் நனைந்ததும் மறையாது IIIIII இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து கவிப்புயல் இனியவன்

நான் என்ன செய்வது....?

கண்ணீர் துளிகளால்..... அழகாக்கியவளே..... கரைந்தது கண்களே..... காதல் இல்லை...........! சோகமும் கண்ணீரும்..... காதலை கரைக்காது........ காலமெல்லாம் காத்திருக்கவைக்கும்.......! உன்னை நினைப்பதற்காகவே...... இறைவன் என்னை .... படைத்துவிட்டானே ...... நான் என்ன செய்வது....? ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 02 29 .04.2017 

சரிபாதியாக்கி விடாதே

........காட்சிகள் ........கனவாகும் ........நீ ........காட்சியானாய் ........நான் !........கனவில் வாழ்கிறேன் ........நீ ........கனவாய் போனல் ........கண்ணீராய் .!.......மாறிவிடுவேன் ........கண்ணுக்குள் ........விழுந்த நீ ........காட்சியாவவே. ........இருந்துவிடு !........தூசியாக மாறிவிடாதே .........உன்னை .........சரிபாதியாக .........பார்க்கிறேன் .........நீ என்னை !.........சரிபாதியாக்கி விடாதே கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 08

காதல் சோகத்திலும் சுகம் தரும்

ஒரு நாளில் ஒரு ....... வார்த்தையாவது பேசிவிடு........ இல்லையேல் என்னை ........ கொன்ற பாவத்துக்கு...... ஆளாகிவிடுவாய்.....................! நீ பேசாமல் இருக்கும்..... ஒவ்வொரு நொடியும்..... நான் பேச்சை இழக்கும்..... நொடிகள் என்பதை..... மறந்துவிடாதே.........! ^^^ கவிப்புயல் இனியவன் காதல் சோகக் கவிதை 29 .04.2017

காதலில் தோற்ற இதயம்.....

காதலில் தோற்ற இதயம்..... மெழுகுதிரி போன்றது...... பிறர் முன்னால் சிரித்து..... தன்னை வருத்தும்.......! இதோ தெருவில் வாடிக்கிடக்கிறது...... நீ தூக்கியெறிந்த பூச்செண்டு...... பாவம் அதை நான் பறித்து.... உனக்கு தந்து அதன் இன்பதை..... பிரித்துவிட்டேன்..........! இரண்டு மலைகளுக்கு..... நடுவே வடியும் நீர்போல்..... உன் நினைவுக்கும் கனவுக்கும்..... நடுவில் நான் அழுகிறேன்.......! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 198

தரிசனத்துக்காககாத்திருக்கிறேன்

படம்
உன்னை..... ஓவியமாய் வரைய..... துரிகையை எடுக்கிறேன்.... வெட்கப்படுகிறது.... இளமை அழகைபார்த்து....! நீ கருவறையில் இருக்கும்.... தெய்வம்- திரைசேலையால்.... மறைக்கப்பட்டுருக்கிறாய்..... தரிசனத்துக்காக...... காத்திருக்கிறேன்............! நீ ஆடையை உலத்த..... கொடியில் போட்டிருப்பது.... உன் ஆடைகள் அல்ல..... மேனியின் மெல்லிய தோல்....! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05

அழகின் மந்திரவாதி நீ.....!

படம்
காதல் ..... ஒரு ஆள் கொல்லி விஷம்..... தலைக்கு ஏறினால்...... இறங்காது................! நீ..... மொட்டு அருகில் வந்தால்.... பூக்களாய் மலர்கிறது...... காய்கள் அருகே வந்தால்...... கனிகளாய் மாறுகிறது..... அழகின் மந்திரவாதி நீ.....! பிறர் வெளிச்சுவாசம்..... மற்றவர்களுக்கு நஞ்சு..... உன் வெளிச்சுவாசம்..... எனக்கு அமிர்தம்......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

உன்னை எப்போது பார்தேனோ...... அப்போதே என் இதய..... நரம்புகள் அறுந்து விட்டது.....! முள் மேல் விழுந்த.... சேலையாய் கிழிகிறேன்.... நீயோ கண்ணடியின்..... விம்பம் போல் வலிக்காமல்..... பார்த்தும் பார்க்காதது போல்..... விலகி செல்கிறாய்.........! நீ நடந்து வரும் பாதையில்.... மிதிபட்ட புல் எல்லாம்..... பூக்களாய் மலர்கிறது..........! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03 

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

இரண்டு சிகரங்கள்..... அருகருகே இருப்பது..... பொருந்துவதமற்றது..... பொருந்துகிறது....... உன் இமை அழகில்..... மட்டும் தானே அன்பே....! இப்போதுதான் புரிந்தது...... உதட்டை ஏன் இதழ்...... என்கிறார்கள்........? நீ பேசும் போது........ ரோஜாவின் ஒவ்வொரு..... இதழ்களும் விரிவதுபோல்....! நீ அசைந்து அசைந்து வருகிறாய் ..... இசைந்து இசைந்து வருகிறது...... கவிதை........... உன் ஒரு சொல் உனக்கு...... நீர் துளி எனக்கு கவிதையின்..... சமுத்திரம்...................! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன்  காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

2017 சித்திரை தமிழ் புத்தாண்டு

2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே... நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!! ^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் - ஈழதமிழ்

காதலுக்கு சொர்க்கம்......!

கண்ணை திறந்து கொண்டும்..... கண்ணை மூடிக்கொண்டும்..... கனவு காணும் அபூர்வ சக்தி..... காதலருக்கே உண்டு...............! அணைத்து கொண்டு இருப்பது....... காதலுக்கு இன்பம்.......... நினைத்து கொண்டிருப்பது....... காதலுக்கு சொர்க்கம்......! & சின்ன சின்ன கவிதைகள் 13 கவிப்புயல் இனியவன்