இடுகைகள்

காதலில் தோற்ற இதயம்.....

காதலில் தோற்ற இதயம்..... மெழுகுதிரி போன்றது...... பிறர் முன்னால் சிரித்து..... தன்னை வருத்தும்.......! இதோ தெருவில் வாடிக்கிடக்கிறது...... நீ தூக்கியெறிந்த பூச்செண்டு...... பாவம் அதை நான் பறித்து.... உனக்கு தந்து அதன் இன்பதை..... பிரித்துவிட்டேன்..........! இரண்டு மலைகளுக்கு..... நடுவே வடியும் நீர்போல்..... உன் நினைவுக்கும் கனவுக்கும்..... நடுவில் நான் அழுகிறேன்.......! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 198

தரிசனத்துக்காககாத்திருக்கிறேன்

படம்
உன்னை..... ஓவியமாய் வரைய..... துரிகையை எடுக்கிறேன்.... வெட்கப்படுகிறது.... இளமை அழகைபார்த்து....! நீ கருவறையில் இருக்கும்.... தெய்வம்- திரைசேலையால்.... மறைக்கப்பட்டுருக்கிறாய்..... தரிசனத்துக்காக...... காத்திருக்கிறேன்............! நீ ஆடையை உலத்த..... கொடியில் போட்டிருப்பது.... உன் ஆடைகள் அல்ல..... மேனியின் மெல்லிய தோல்....! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 05

அழகின் மந்திரவாதி நீ.....!

படம்
காதல் ..... ஒரு ஆள் கொல்லி விஷம்..... தலைக்கு ஏறினால்...... இறங்காது................! நீ..... மொட்டு அருகில் வந்தால்.... பூக்களாய் மலர்கிறது...... காய்கள் அருகே வந்தால்...... கனிகளாய் மாறுகிறது..... அழகின் மந்திரவாதி நீ.....! பிறர் வெளிச்சுவாசம்..... மற்றவர்களுக்கு நஞ்சு..... உன் வெளிச்சுவாசம்..... எனக்கு அமிர்தம்......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 04

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03

உன்னை எப்போது பார்தேனோ...... அப்போதே என் இதய..... நரம்புகள் அறுந்து விட்டது.....! முள் மேல் விழுந்த.... சேலையாய் கிழிகிறேன்.... நீயோ கண்ணடியின்..... விம்பம் போல் வலிக்காமல்..... பார்த்தும் பார்க்காதது போல்..... விலகி செல்கிறாய்.........! நீ நடந்து வரும் பாதையில்.... மிதிபட்ட புல் எல்லாம்..... பூக்களாய் மலர்கிறது..........! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 03 

ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

இரண்டு சிகரங்கள்..... அருகருகே இருப்பது..... பொருந்துவதமற்றது..... பொருந்துகிறது....... உன் இமை அழகில்..... மட்டும் தானே அன்பே....! இப்போதுதான் புரிந்தது...... உதட்டை ஏன் இதழ்...... என்கிறார்கள்........? நீ பேசும் போது........ ரோஜாவின் ஒவ்வொரு..... இதழ்களும் விரிவதுபோல்....! நீ அசைந்து அசைந்து வருகிறாய் ..... இசைந்து இசைந்து வருகிறது...... கவிதை........... உன் ஒரு சொல் உனக்கு...... நீர் துளி எனக்கு கவிதையின்..... சமுத்திரம்...................! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 02

ஏனடி காதலால் கொல்லுகிறாய்

உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன்  காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய் 

2017 சித்திரை தமிழ் புத்தாண்டு

2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே... நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!! ^^^ கவிப்புயல் இனியவன் மணிபல்லவம் - ஈழதமிழ்

காதலுக்கு சொர்க்கம்......!

கண்ணை திறந்து கொண்டும்..... கண்ணை மூடிக்கொண்டும்..... கனவு காணும் அபூர்வ சக்தி..... காதலருக்கே உண்டு...............! அணைத்து கொண்டு இருப்பது....... காதலுக்கு இன்பம்.......... நினைத்து கொண்டிருப்பது....... காதலுக்கு சொர்க்கம்......! & சின்ன சின்ன கவிதைகள் 13 கவிப்புயல் இனியவன்

இதயம் மட்டுமே அறியும்....!

உன் ...... கண் சொல்கிறது..... என் மேல் உள்ள காதலை..... நீ முகம் திருப்பினால்.......... மறைந்து விடாது காதல்.....! நீ கண் இமைக்கும் நேரத்தில்.... நான் காணாமல் போய்....... விடுவேனோ என்பதற்காய்...... நீ படும் வேதனையை என்...... இதயம் மட்டுமே அறியும்....! & சின்ன சின்ன கவிதைகள் 12 கவிப்புயல் இனியவன்

காதல் காவியங்களே.........!

காதலின் சின்னம்...... கல்லறையாக இருக்கிறது..... கல்லறைக்கு பின்னரும்............ காலத்தால்  நிலைத்திருப்பதால்......! நிலையில்லாத உயிருக்கு....... நிலையான இடத்தை கொடுப்பது..... காதல் காவியங்களே.........! & சின்ன சின்ன கவிதைகள் 11 கவிப்புயல் இனியவன்

காதல் தராசு ......

உன் ........ காதலுக்கு நன்றி........... என்னை விட்டு பிரிந்தாலும்............. நீ தந்த காதல் என்னோடு..... இருப்பதால் தான் நான்....... உயிரோடு இருகிறேன்.............! ஒரே ஒரு மாற்றம் ........ பனித்துளிபோல் சில்...... என்றிருந்த என் இதயத்தை..... பாலவனமாக்கிவிட்டாய்........! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 196 $ உடலால் நீ என்னை..... பிரிந்தாலும்....... இதயத்தில் பத்திரமாய்...... இருகிறாய்........... காதல் தராசு ...... சமமாக இருகிறது...... ! காதலில் சேர்ந்து..... வாழ்பவர்களும் ...... பிரிந்து வாழ்பவர்களும்..... சமமாய் இருப்பதால்.... காதல் தராசு ...... சமமாக இருகிறது...... ! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 197

அதிசயக்குழந்தை - அன்பு

அதிசயக்குழந்தை - அன்பு ------------------- அளவுக்கு மிஞ்சினால்..... அமிர்தமும் நஞ்சு......... அன்புக்கும் பொருந்தும்.....! என்னடா உளருகிறாய்.....? என்று கேட்டேன் அவனிடம்.... ஆசான் எனும் தோறணையில்...... ஆமாம் ஆசானே எதுவும்..... அளவோடு இருக்கனும்..... இல்லையேல் அதுவே நஞ்சு.........! பணத்தின் மீது அதிக அன்பு...... உடலை கெடுக்கும் உளத்தை...... மாசுபடுத்தும் அது நஞ்சுதானே........ பிள்ளைகள் மீது அதிக பாசம்..... எதிர்பார்பை கூட்டும்...... நிறைவேறாதபோது குடும்ப..... சண்டையாக மாறுகிறது........! துணைமீது அதிக காதல்...... கோழையாக்கிவிடுகிறது...... சுயசிந்தனையை இழக்க வைக்கிறது...... தன்மானத்தை இழக்கவைக்கிறது....... தனிமையாகினால் முதுமையை..... துயரமடைய வைக்கிறது.................! சமூக அக்கறை அதிகமானால்........ அதிக பதவி ஆசை வருகிறது...... பதவி வரும் போது எல்லவற்றையும்.... கண் மறைக்கிறது........! அப்போ எதையும் விரும்ப கூடாது என்கிறாயா.......? இல்லை இல்லை ஆசானே....... எல்லவற்றையும் விரும்புங்கள்..... எல்லாம் உங்களால் தான் ...... நடைபெறுகிறது என்பதை மட்டும்.... ...

கவலைபடுகிறாய்...

முகப்பருவை பார்த்து ... கவலைபடுகிறாய்... அது என் நினைவுகளின் ... அடையாளம் ....! என் இதயம் சுமை .. தாங்கி எவ்வளவு ... வேண்டுமென்றாலும் ... வலியை தா ....! & சின்ன சின்ன கவிதைகள் 10 கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வரவைகிறது ...!

நீ வார்த்தையால் .. சொன்னதை நான் ... கண்ணீரால் எழுதுகிறேன் ...! இரவின் கனவும் ... உன் நினைவுகளால் .. கண்ணீர் வரவைகிறது ...! & சின்ன சின்ன கவிதைகள் 09 கவிப்புயல் இனியவன்

பேச வைத்துவிட்டாய் .....!

போடா..... உனக்கு....... காதலிக்க கூட  .. தெரியாது என்று ... நண்பர்கள்........ இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....! & சின்ன சின்ன கவிதைகள் 08 கவிப்புயல் இனியவன்