இடுகைகள்

பேச வைத்துவிட்டாய் .....!

போடா..... உனக்கு....... காதலிக்க கூட  .. தெரியாது என்று ... நண்பர்கள்........ இழிவாக பேச ... வைத்துவிட்டாய் .....! & சின்ன சின்ன கவிதைகள் 08 கவிப்புயல் இனியவன்

இன்பம் தந்த காதலை ....!

இழந்தது ...... கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம் தந்த காதலை ....! & சின்ன சின்ன கவிதைகள் 07 கவிப்புயல் இனியவன்

என்னவளும் தான் ....!

தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலோடு இருக்கும்.... என்னவளும் தான் ....! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

நானோ சிக்கி தவிக்கிறேன் ...!

பேச்சும் மூச்சுமாய் .... இருந்த நம் காதல் ... இறுதி மூச்சை இழுத்த .. வண்ணம் இருக்கிறது ....!!! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன் & சிலந்தி வலைபோல் ... அழகாக இருக்கிறது நம் காதல் -. நானோ சிக்கி தவிக்கிறேன் ...! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

சின்ன சின்ன கவிதைகள்

என்னவளே ... நீ காலை மாலை பூக்கும் ... மலராக இருந்து விடு ... அப்போதுதான் வாடவேமாட்டாய் ...! &&& உன் .... வாழ்க்கைக்காக ... என் வாழ்க்கையை..... பறித்தவள் -நீ சந்தோசமாய் இரு .......! &&& ஒவ்வொருவனுக்கும் ... அவனவன் காதல் தான் ... ஆயுள் பாசக்கயிறு .....! & சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தாய் தந்தை கவிதைகள் 02

தந்தையின் அழகு..... முதுமையில் தெரியும்..... ஒவ்வொரு தோல் சுருக்கமும்.... ஒவ்வொரு கடின தியாகத்தை..... எடுத்து காட்டும்.......! எனக்கு நினைவுள்ளவரை..... கோயிலில் அவர் சுவாமி..... சுமந்ததே இல்லை ஆனால்..... என்னை தோளில் சுமக்காத..... நாளே இல்லை.........................! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

தாய் தந்தை கவிதைகள்

பேசமுடியாத வயதில்..... அழுகை மூலம் குழந்தையின்..... நோயையும் பசியையும்..... கண்டறியும் ஞானி தாய்......! பொதுவாக......... வெட்டினால் உறவு பிரியும்.... தொப்பில் கொடியை வெட்டிய..... பின்னரே உறவு பெருகும்.......! ^^^ கவிப்புயல் இனியவன் தாய் தந்தை கவிதைகள்

காதலை காதலித்தது தான் ....!

காதலில் காயம் வந்தாலும் காயத்தின் வலி காலத்தால் மறையாமல் இருக்க காரணம் காதலை காதலித்தது தான் ....! நீ என்னை வெறுத்து பலமாதங்கள் ஆகிவிட்டது -என்றாலும் நாம் முதல் நாளில் பெற்ற இன்பத்துடன் வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 195

என்னை காதலிக்கிறாய் .........!

நீ ............. என்னை தவிர ............ என் நண்பர்களுடன் ................ பேசுகிறாய்................ அப்படிஎன்றால் - நீ ..... என்னை காதலிக்கிறாய் .........! உன்னோடு வாழவேண்டும் ....... என்பதல்ல காதல்........... உனக்காவவே வாழுவதுதான்........... காதல்............................! நீ வாசிப்பதற்காக .......... கவிதையை பார்க்கிறாய்....... உன்னை சுவாசிப்பதால் ...... கவிதை வருகிறது.......................! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 194

அன்றே இறந்துவிட்டேன்..........!

என் இதயத்தை பந்தை..... விளையாடுவதுபோல்...... எறிந்து விளையாடுகிறாய்..... கவலைபடவில்லை..... தொலைத்து விடுவாயோ...... என்று பயப்பிடுகிறேன்........! உயிரே நீ என்னை கண்டுவிட்டு காணாததுபோல் சென்றாயே..... அன்றே இறந்துவிட்டேன்..........! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 193

உயிரையும் கொல்கிறது...... !

மெளனவிரதம் உடலுக்கும்....... உயிராற்றளுக்கும் நலம்...... உன் மெளன யுத்தம் என் ....... உடலை அழிக்கிறது............. உயிரையும் கொல்கிறது...... ! உன்னை மறக்கும் எண்ணம் எந்த நொடியிலும் இல்லை உன்னை மறந்தால் அந்த நொடி  முதல் நான் மனிதன் இல்லை .........................! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 192

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

தானும் நிம்மதியாய் வாழ்வதில்லை பிறரையும் நிம்மதியாய் வாழவிடுவதில்லை பொறாமை & ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

குப்பை தொட்டி நிரம்புதில்லை பெருக்க பெருக்க பெருகுகிறது மனக்குப்பை & ஹைக்கூ கவிப்புயல் இனியவன்

காதல் பிரமிட்

நீ...............................................01 நான்........................................02 காதல்.....................................03 கற்பனை...............................04 நினைவுகள்............................05 வாக்கு வாதம்.........................06 காதலுக்கு வலி......................07 காதல் பிரிவு...........................06 முரண்பாடு............................05 விலகல்.....................................04 சோகம்.....................................03 வலி............................................02 போ.............................................01 & கவிப்புயல் இனியவன் காதல் பிரமிட்

புதிராய் தொடர்கிறது....!!!

கண்ணால் தோன்றிய காதலுக்கு ..... கண்ணூறு பட்டு விட்டுவிடுகிறது........ கண்ணுக்கு தெரியாத காதலுக்கு .... கனவு தான் மிஞ்சியது ..... காதல் புரியாத புதிராய் தொடர்கிறது....!!! ^^^ கவிப்புயல் இனியவன் பஞ்ச வர்ணக்காதல் கவிதை 06