இடுகைகள்

காதல் வெண்பா 10

தேடினேன் நீ வரும் வழினெடுகிலும் வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால் துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி & கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா 10

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம் தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன் நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே & கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா 09

என்னவனே என் கள்வனே 08

ஆகாய எரிகல்...... கண்ணில் விழுந்தால்..... அடுத்த நாள் அதே நேரம்.... வரைக்கும் கண்ணில்..... இருந்து வலிதருமாம்.....!!! ஆகாய எரிகல்லாய்..... வந்துவிடு என்னவனே...... அப்போதாவது கண்ணுக்குள்..... இருந்துகொண்டிருப்பாயே.....!!! பாறையில் இருந்து கூழாங்கல்..... உடைப்பதுபோல் உன் கல் நெஞ்சு..... இதயத்தை உடைக்கிறேன்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 08 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

தோல்வியை ரசி வெற்றியை ருசி

முயற்சி மனிதனின்..... மூலவேர் -அதை....... விருட்ஷமாக்குவது........ பயிற்சி.......................!!! பயிற்சி போதாதெனின்...... தோல்வியென்னும்............ கிளை தோன்றும்.................. முயற்சி  தோற்பதில்லை.......!!! வெற்றியின் போது........ ஓரக்கண்ணில் வருவது........ ஆனந்த கண்ணீரல்ல.......... தோல்வி தந்த வெள்ளை நிற....... இரத்தம்...................!!! & தோல்வியை ரசி வெற்றியை ருசி கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02

நட்புக்கு வசந்த காலம்...... மழைக்காலம் தானே...... வேண்டுமென்றே நனைவதும்...... சேற்றுக்குள் உருளுவதும்...... வீட்டுக்கு வந்து அடிவாங்குவதும்..... மழைகாலம் வசந்த காலந்தானே.....!!! வடிந்தோடும் வெள்ளதில்....... பாய்ந்தோடும் காகித கப்பல்...... அப்போதுதான் படித்த குறிப்பு...... சற்றும் தாமதிக்காமல்....... கிழித்து விடும் காகித கப்பல்....... அடுத்த நாள் இருவருக்கும்..... கிழிந்த கால்சட்டைமேல்..... விழும் செமபூசை..........................!!! வாற்பேத்தையை மீன் குஞ்சென..... ஓடியோடி பிடித்து வீட்டுக்கு..... கொண்டுவருவதும் வந்த கையோடு...... அம்மா பறித்தெறிவதும்.......... கடுப்போடு கத்தி பிரழுவதும்...... இன்றுவரை நினைவில் இருக்கும்.... வசந்த காலம்...............................!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 02 கவிப்புயல் இனியவன்

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு

ஆறுவயதில் அயல் வீட்டில் - நீ பாதிவயிறு உன் வீட்டில் நிரம்பும்.... பாதி வயிறு என் வீட்டில் நிரம்பும்...... பாதி தூக்கம் உன் வீட்டில் - நான் மீதி தூக்கம் என் வீட்டில் - நீ .........!!! அப்பப்போ சண்டை....... தடியெடுத்து அடிகும் மனதைரியம்..... எனக்கும் இல்லை உனக்கும் இல்லை..... ஒரு பிடி மண்ணால் சண்டையோடும்.... மாவீரர் நாம்...........................!!! சற்று நேரம் கூட ஆகாது......... வீட்டில் கிடைத்த இனிப்போடு....... ஓடிவருவேன் உன் வீட்டுக்கு.......... பாதி கடித்த இனிப்பை....... உன்னிடம் தர பறந்து போகும்..... சண்டையின் பகை...................... நட்பென்பது எப்போதும் இனிமை.....!!! & ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 07

உன் வரவுக்காக ஏங்கி..... கண் வழியே பாதை...... அமைத்து  தெருவையே....... அமைத்து விட்டேன்.........!!! நீயோ...... வருவதாய் இல்லை......... என் தூரபார்வையில்..... கோளாறு வந்தால் - நீ தான் அதற்கு காரணம்.... வைத்தியரிடம் முறையிடுவேன்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 07 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 06

எத்தனை காலம்..... உன் நினைவுகளை..... சுமந்து கொண்டு வாழ்வது,.....? அதற்குஎல்லை இல்லையா...? வருகிறாய் பார்கிறாய்...... பேச துடிக்கிறாய்...... போசாமல் போய் விடுகிறாய்..... மது கோப்பைக்குள்........ விழுந்த புழுவாய் துடிகிறேன்.... என்னவனே என் மன்னவனே.....!!! ^^^ என்னவனே என் கள்வனே 06 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

மனம் ஆசைபடுகிறது......!!!

என் ....... குயில் குரலால்..... உன்னை அழைத்து...... கழுகு கண்ணால் ..... உன்னை கொன்று..... துடிக்க விடனும் என்று .... மனம் ஆசைபடுகிறது......!!! பாவம் - நீ நடைபிணமாய் ........... வாழ்ந்துவிடுவாய்...... என்பதற்காக உன்னை.... விட்டு விடுகிறேன்........ என்னவனே...........................!!! ^^^ என்னவனே என் கள்வனே 05 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே 04

உன் முகம் பார்க்க..... ஏங்கி ஏங்கி ஓரகண்ணால்... கண்ணீர் வர வழைத்தவனே..... உனக்கு அது சிறு துளி..... எனக்கு அது இதயத்தின்..... மொத்த வலி...................!!! வேறு வழியில்லாமல்..... இமைகளை மூடுகிறேன்....... என் ஏக்கத்தை புரிந்து..... கனவிலேனும் வருவாயா...? ^^^ என்னவனே என் கள்வனே 04 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன் 

புதைத்துவிட்டேன் உன்னில்....!!!

மழை பெய்யும் போது..... இரு கரத்தை குவித்து...... உள்ளங்கையில் மழை..... துளியை ஏந்தும்போது.... இதயத்தில் ஒரு இன்பம்.... தோன்றுமே அதேபோல்..... உன்னை யாரென்று..... தெரியாமல் இருந்த நொடியில்..... நீ என்னை திடீரென பார்த்த..... கணப்பொழுது........!!! என்னவனே என்னை..... புதைத்துவிட்டேன் உன்னில்....!!! ^^^ என்னவனே என் கள்வனே 03 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது

இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது ---------------------------------------------- வியப்பாக இருக்கிறதா....? அதிர்ச்சியாக இருக்கிறதா.....? இதுதான் உண்மை.................... இனி ஒரு மெரினா புரட்சி....... தோன்றவே தோன்றாது..............!!! மெரினா போராட்டம் ஒரு....... இயற்கை இயக்கத்தால்...... தோன்றியது........................... தலைவன் இல்லை....... தோற்றியவனும் இல்லை..... முடித்து வைத்தவனும் இல்லை....... அது இயற்கை இயக்கத்தால்..... தோன்றிய அற்புத போராட்டம்....!!! எப்படி இணந்தார்கள்.....? யார் இணைத்தார்கள்....... எப்படி இப்படி ஒரு மாபெரும்..... சக்தி திரண்டது..........? எல்லமே ஒரு விசித்திர நிகழ்வு....... எத்தனை சமூக ஊடகம்..... பங்களிப்பு செய்தாலும் ...... அதற்கும் மேலாக ஒரு சக்தி..... இயக்கியது என்றால் அதுமிகையல்ல.....!!! இன்று அதே ஊடகங்கள் இருகின்றன..... நாளையும் இருக்கத்தான் போகிறது....... எந்த காலத்திலும் மெரினாபோல்......... ஒரு போராட்டம் இனி எப்போதும்.... தோன்ற போவதுமில்லை....... தோற்றிவிகக்வும் முடியாது...... மெரினா போராட்டம் ஒரு...... இயற்கை இயக்கத்தால...

என்னை பரவசப்படுத்துகிறாய்......!!!

இலைகள் அற்ற மரகிளையில்....... ஒரு வண்ணாத்தி பூச்சியை..... கற்பனை செய்து பார்...... எத்தனை அழகோ அழகு..... அப்படிதானடா - நீ வெறுமை கொண்ட என்..... இதயத்தில் வந்தமர்ந்து...... என்னை பரவசப்படுத்துகிறாய்......!!! ^^^ என்னவனே என் கள்வனே 02 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

என்னவனே என் கள்வனே

என்னை சுற்றி ஈசல் பறக்கிறது......... மெல்லியதாய்மின்னல்...... சின்னதாய் ஒரு இடி...... மழை வரப்போகிறது....... என்னவனே உன்னில்..... இருந்து காதல் மழை..... பொழியப்போகிறது....... வனாந்தரமாய் இருந்த..... இதயத்தை சோலையாக்க..... வந்துவிடடா..............!!! ^^^ என்னவனே என் கள்வனே 01 காதல் ஒரு அடிப்படை தேவை கவிப்புயல் இனியவன்

இருவரி திருவரி கவிதை

சிரித்தது நீ ... துன்பப்படுவது நான் ...!!! @ கவிதை ஓடத்துக்கு .... நீ தான் துடுப்பு...........!!! @ பல‌முகம் இருந்தென்ன‌,,? தெரிந்த‌ முகம் நீ தான் ...!!! @ பார்த்தாலே ஆயிரம் கவிதை.... சம்மதம் சொல் அகராதி எழுதுவேன்....!!! @ நடை பழக்கினாள் தாய் ...... உடை பழக்கினாய் ....நீ....!!! @ என் மனதின் உன் பாசம் .. என் மரணம் வரை பேசும்.....!!! @ கனவிலே எல்லா ...... காதலியும் உலக அழகி........!!! @ பார்ப்பவர் கண்ணுக்கு நீ ...... தேவாங்கு எனக்கு நீ தேவதை.....!!! @ இதயத்தில் இருப்பவளே ....... துடிக்கும் ஓசையில் தூங்கி விடாதே ...!!! @ கல்லில் பாசியாக இருக்கிறேன்நீ மீனாக வந்து சாப்பிட்டுவிடு ...!!! @ எஸ் ம் எஸ் கவிதைகள் இருவரி திருவரி கவிதை & கவிப்புயல் இனியவன்