இடுகைகள்

முடிந்தால் உன் இதயத்தை.....

இப் பிறப்புக்கு ....... எனக்கு கிடைத்த ..... பாவ விமோசனம் நீ.....!!! என்னை பார்த்ததும்...... முகம் திருப்புகிறாய்........ முடிந்தால் உன் இதயத்தை..... திருப்பு...................!!! நான் விடும் மூச்சு..... உன்னை சுடும் என்று..... சந்தோசப்படவில்லை.... சுட்டு விடுமோ என்று..... பயப்பிடுகிறேன்...............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 09

நீயோ குறுங்கதை......

காதலில் நான் நாவல்... நீயோ குறுங்கதை...... என்றாலும் சுவையாக..... இருக்கதானே செய்கிறது....!!! எனக்கு தெரியும்.... நம் காதல் தோற்கும்.... என்றாலும் காதல் .... செய்தேன் நினைவோடு..... வாழ்வதற்கு...........!!! நினைவுகள் உனக்கு..... குப்பையாக இருக்கலாம்..... நான் குப்பை தொட்டியாக..... இருந்து விட்டு போகிறேன்....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 08

காதலின் காதல் .........!!!

காதலித்துப்பார் ......... பகலில் நிலாதெரியும்....... காதலில் தோற்றுப்பார் ...... இரவில் சூரியன் தெரியும் ..!!! காதலில் இதயத்தில் ..... வருவது முக்கியம் இல்லை .. நிலையாக இருப்பதே ..... காதலின் காதல் .........!!! உன்னை ........... அடையாளம் கண்டேன் ... என் அடையாளத்தை ............ தேடுகிறேன் ..!!! & கவிப்புயல் இனியவன்

நீ வெளிச்சமாக இரு போதும்.....!!!

நீ ........... என்னை .............. காதலிப்பாய் என்றால்........... நான் என்னை உருக்க தயார்............. ஆனால் உருக்கி விடாதே ...!!! காதல் ஒரு சேலை.......... அளவாக இருந்தால் அழகு......... அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!! நான் காதல் விளக்கு......... காதல் திரி காதல் நெய்...... நீ வெளிச்சமாக இரு போதும்.....!!! & கவிப்புயல் இனியவன்

வேதனைப்படுத்தாதே....!

எதற்காக ..... காதலித்தாய்.... பிரிந்தாய்...... ஏக்கத்துடன் ..... ஏமாற்றத்துடன் .... வாழ்கிறேன் ......!!! நீ எப்படியும்............ வேதனை படுத்து........ உனக்கு புரியவில்லை இதயத்தில் - நீ... உன்னையே -நீ ..... வேதனைப்படுத்தாதே....! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 190

என்னை இழக்கின்றேன் .....!!!

தேடித்தேடி ...... வார்த்தைகளை .... தொகுத்து கவிதையும் .... கடிதமும் குறுங்செய்தியும் .... அனுப்பினேன் -இப்போ .... தேடவைத்துவிட்டாய்.... வார்த்தையை அல்ல ..... என் காதலை ........? நீ உண்ணும் அழகை .... உண்ணாமல் ரசிக்கிறேன் .... உறங்கும் அழகை .... உறங்காமல் ரசிக்கிறேன் .... ரசித்து ரசித்து என்னை ... இழக்கின்றேன் .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 189

வாத்தை.போல் ஆக்கி விட்டாயே ...!!!

தோகை .................. விரித்து ஆடுகின்ற ..... மயிலைப்போல் இருந்த .... நம் காதலை - கழுத்தில் ... பிடித்து தூக்கும்- வாத்தை.... போல் ஆக்கி விட்டாயே ...!!! எல்லாவற்றையும் .... இழக்கவைத்துவிட்டாய் ... தலை வணங்குகிறேன் ..... என் காதலையும் ..... உயிரையும் விட்டு .... வைத்துவிட்டாய் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 188

கற்று கொண்டேன் ....!!!

கவிதை எழுதுகிறேன் சிரிப்பு வருகிறது அழுகையும் வருகிறது ....!!! நீ வலிதந்ததை .... நினைத்து சிரிப்பேன் .... நீ இன்பம் தந்ததை.... நினைத்துஅழுவேன் ...... காதலில் வலி நிலையானது என்பதால் சிரித்து கொண்டே ..... இருக்க கற்று கொண்டேன் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 187

இது குழந்தை தொழில் இல்லையா..?

இது குழந்தை தொழில் இல்லையா..? ------------------------------------ பட்டாசு தொழிற்சாலையில்..... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! தீப்பெட்டி தொழிற்சாலையில்....... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! செங்கல் சூளையில்.... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! சல்லி கல் உடைக்க...... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! குழந்தை தொழில் சட்டபடிகுற்றம் ..... தேவையான சட்டம்...... வரவேற்கவேண்டிய சட்டம்.....!!! சினிமாவிலும் சின்ன திரையிலும்..... பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்...... காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்.... குழந்தை தொழில் இல்லையா....? உடலில் காயம் வந்தால் தான்..... குழந்தை தொழில் குற்றமா.....? உளத்தில் காயம் வந்தால்........ குழந்தை தொழில் குற்றமில்லையா....? அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய...... செயல்களும் வார்த்தைகளும்........ குழந்தை மனசை காயப்படுத்தும்..... ஏன் இன்னும் புரியவில்லை....? புரியாமல் தெரியாமலில்லை..... பணம் பணம் பணம்............. எல்லமே பணம் செய்யும் மாயை......

விழிப்புணர்வு கவிதைகள்

படம்
சமூக தளங்கள் ........ சமூகத்தை சீர் படுத்தும் ...... தளங்களாக இருக்கவேண்டும் ..... சீரழிக்கும் தளங்களாக....... மாறிவிடக் கூடாது ......!!! இராணுவ  புரட்சி மூலம்..... ஆட்சியை மாற்ற இருந்தவர்களை..... சமூகதள தகவல் மூலம் மக்கள்..... புரட்சி வெடித்து இராணுவ புரட்சி..... தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள..... செய்தி பரிமாற்றம் உதவியதை..... யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!! தலைவன் இல்லாமல் தம் இன..... பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்..... போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு...... போராட்டம் சமூக தள பரிமாற்றம்..... உலகையே திரும்பி பார்க்கவைத்து...... உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை..... படைத்தது சமூக தள ஆயுதம்........!!! மறுபுறத்தில் வேதனையான ....... சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்......... நடைபெற்றுகொண்டிருப்பதும் ........ மறுப்பதற்கில்லை......... தனிப்பட்ட பகைமைக்கும்......... விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்...... பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!! எங்கோ நடைபெற்ற நிகழ்வை....... திரித்து கூறுதல் பொருத்தமற்ற...... ஊகங்களை மக்கள் மத்தியில்...... பரப்புதல் ஒரு...

துரோகம்கொடுமை.....!!!

காதலுக்கு இளமை......!!! அனுபவத்துக்கு ..... முதுமை.....!!! பண்பாட்டுக்கு பழமை.....!!! நட்புக்கு  ...... தோழமை......!!! முன்னேற்றத்துக்கு ..... திறமை......!!! அளவான சொத்து...... இனிமை.....!!! காதலில் தோற்றவன் ..... தனிமை......!!! நம்பிக்கை துரோகம்..... கொடுமை.....!!! வாழ்க்கையின் இன்பம் துன்பம் வழமை.....!!! & கவிப்புயல் இனியவன் 

நீ எங்கிருக்கிறாய் ...?

உன்னையே   பார்பேன்... உன்னை மட்டுமே பார்ப்பேன்...... உன் கண்களை மட்டுமே .... பார்ப்பேன்......!!! உன்னை பார்க்காமல் ..... என் கண் யாரையும் ...... பார்க்கமாட்டேன் .......!!! உயிரே சொல் தயவு செய்து சொல் நீ எங்கிருக்கிறாய் ...? & கவிப்புயல் இனியவன் 

காதலும் மெழுகு திரியும்

காதல் இதயமும் .... மெழுகு திரியும் ...... ஒன்றுதான் ......!!! தனக்காக வாழாமல் பிறருக்காக எரிகிறது மெழுகு திரி....!!! தனக்காக வாழாமல்.... உனக்காக உருகுகிறேன் ... என்கிறார்கள் காதலர் ....!!! மெழுகு திரி எண்ணெய்யால் உருகுகிறது .... காதலர் எண்ணத்தால் ..... உருகுகிறார் ........!!! & கவிப்புயல் இனியவன் 

புற்று நோயாளர் தினம்

ஏன் மனிதா என்னை ..... கொஞ்சம் கொஞ்சமாய் ... கொல்லுகிறாய் ...... கெஞ்சி கேட்டு அழுகிறது .... சிகரெட் .......!!! நீ கொஞ்சம் கொஞ்சமாய் ..... இறப்பதற்காக என்னை ..... ஒத்திகை பார்க்கிறாயா ....? உன் நுரையீரலை காட்டு .... நானே நேரடியாய் வந்து ..... கொண்று விடுகிறேன் ....!!! & இன்று புற்று நோயாளர் தினம் கவிப்புயல் இனியவன் 

என்னை விலக்குகிறாய்........!!!

காதல் செய்தேன்..... திருமணம் செய்தேன்..... பெண் தான் மாறி .... விட்டது ...............!!! தேவை என்றால் .... பேசு என்கிறாய் ..... அப்போதே புரிந்து .... விட்டது உன்னில் ..... இருந்து என்னை ..... விலக்குகிறாய்........!!! கண்ணுக்கு மட்டும் .... தான் தூர பார்வை ..... குறைபாடு இல்லை ..... இதயத்துக்கும் ...... இருப்பதை உன்னில் .... கண்டேன் ............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 07