இடுகைகள்

என்னை இழக்கின்றேன் .....!!!

தேடித்தேடி ...... வார்த்தைகளை .... தொகுத்து கவிதையும் .... கடிதமும் குறுங்செய்தியும் .... அனுப்பினேன் -இப்போ .... தேடவைத்துவிட்டாய்.... வார்த்தையை அல்ல ..... என் காதலை ........? நீ உண்ணும் அழகை .... உண்ணாமல் ரசிக்கிறேன் .... உறங்கும் அழகை .... உறங்காமல் ரசிக்கிறேன் .... ரசித்து ரசித்து என்னை ... இழக்கின்றேன் .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 189

வாத்தை.போல் ஆக்கி விட்டாயே ...!!!

தோகை .................. விரித்து ஆடுகின்ற ..... மயிலைப்போல் இருந்த .... நம் காதலை - கழுத்தில் ... பிடித்து தூக்கும்- வாத்தை.... போல் ஆக்கி விட்டாயே ...!!! எல்லாவற்றையும் .... இழக்கவைத்துவிட்டாய் ... தலை வணங்குகிறேன் ..... என் காதலையும் ..... உயிரையும் விட்டு .... வைத்துவிட்டாய் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 188

கற்று கொண்டேன் ....!!!

கவிதை எழுதுகிறேன் சிரிப்பு வருகிறது அழுகையும் வருகிறது ....!!! நீ வலிதந்ததை .... நினைத்து சிரிப்பேன் .... நீ இன்பம் தந்ததை.... நினைத்துஅழுவேன் ...... காதலில் வலி நிலையானது என்பதால் சிரித்து கொண்டே ..... இருக்க கற்று கொண்டேன் ....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 187

இது குழந்தை தொழில் இல்லையா..?

இது குழந்தை தொழில் இல்லையா..? ------------------------------------ பட்டாசு தொழிற்சாலையில்..... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! தீப்பெட்டி தொழிற்சாலையில்....... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! செங்கல் சூளையில்.... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! சல்லி கல் உடைக்க...... குழந்தை வேலை செய்தால்...... சட்ட நடவடிக்கை.........!!! குழந்தை தொழில் சட்டபடிகுற்றம் ..... தேவையான சட்டம்...... வரவேற்கவேண்டிய சட்டம்.....!!! சினிமாவிலும் சின்ன திரையிலும்..... பிஞ்சு மனத்தில் நஞ்சை விதைக்கும்...... காட்சிகளில் நடிக்கும் குழந்தைகள்.... குழந்தை தொழில் இல்லையா....? உடலில் காயம் வந்தால் தான்..... குழந்தை தொழில் குற்றமா.....? உளத்தில் காயம் வந்தால்........ குழந்தை தொழில் குற்றமில்லையா....? அளவுக்கு மீறிய வயதுக்கு மீறிய...... செயல்களும் வார்த்தைகளும்........ குழந்தை மனசை காயப்படுத்தும்..... ஏன் இன்னும் புரியவில்லை....? புரியாமல் தெரியாமலில்லை..... பணம் பணம் பணம்............. எல்லமே பணம் செய்யும் மாயை......

விழிப்புணர்வு கவிதைகள்

படம்
சமூக தளங்கள் ........ சமூகத்தை சீர் படுத்தும் ...... தளங்களாக இருக்கவேண்டும் ..... சீரழிக்கும் தளங்களாக....... மாறிவிடக் கூடாது ......!!! இராணுவ  புரட்சி மூலம்..... ஆட்சியை மாற்ற இருந்தவர்களை..... சமூகதள தகவல் மூலம் மக்கள்..... புரட்சி வெடித்து இராணுவ புரட்சி..... தோற்கடிக்கப்பட்டற்கு சமூக தள..... செய்தி பரிமாற்றம் உதவியதை..... யாரும் மறந்திடமாட்டார்கள்.........!!! தலைவன் இல்லாமல் தம் இன..... பண்பாட்டை இளைஞர் போராட்டமாய்..... போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு...... போராட்டம் சமூக தள பரிமாற்றம்..... உலகையே திரும்பி பார்க்கவைத்து...... உலக புரட்சியின் புதிய பரிமாற்றத்தை..... படைத்தது சமூக தள ஆயுதம்........!!! மறுபுறத்தில் வேதனையான ....... சகிக்க முடியாத தகவல் பரிமாற்றம்......... நடைபெற்றுகொண்டிருப்பதும் ........ மறுப்பதற்கில்லை......... தனிப்பட்ட பகைமைக்கும்......... விருப்பு வெறுப்புக்கும் சமூகதளம்...... பயன்படுவது வேதனை அளிக்கிறது.........!!! எங்கோ நடைபெற்ற நிகழ்வை....... திரித்து கூறுதல் பொருத்தமற்ற...... ஊகங்களை மக்கள் மத்தியில்...... பரப்புதல் ஒரு...

துரோகம்கொடுமை.....!!!

காதலுக்கு இளமை......!!! அனுபவத்துக்கு ..... முதுமை.....!!! பண்பாட்டுக்கு பழமை.....!!! நட்புக்கு  ...... தோழமை......!!! முன்னேற்றத்துக்கு ..... திறமை......!!! அளவான சொத்து...... இனிமை.....!!! காதலில் தோற்றவன் ..... தனிமை......!!! நம்பிக்கை துரோகம்..... கொடுமை.....!!! வாழ்க்கையின் இன்பம் துன்பம் வழமை.....!!! & கவிப்புயல் இனியவன் 

நீ எங்கிருக்கிறாய் ...?

உன்னையே   பார்பேன்... உன்னை மட்டுமே பார்ப்பேன்...... உன் கண்களை மட்டுமே .... பார்ப்பேன்......!!! உன்னை பார்க்காமல் ..... என் கண் யாரையும் ...... பார்க்கமாட்டேன் .......!!! உயிரே சொல் தயவு செய்து சொல் நீ எங்கிருக்கிறாய் ...? & கவிப்புயல் இனியவன் 

காதலும் மெழுகு திரியும்

காதல் இதயமும் .... மெழுகு திரியும் ...... ஒன்றுதான் ......!!! தனக்காக வாழாமல் பிறருக்காக எரிகிறது மெழுகு திரி....!!! தனக்காக வாழாமல்.... உனக்காக உருகுகிறேன் ... என்கிறார்கள் காதலர் ....!!! மெழுகு திரி எண்ணெய்யால் உருகுகிறது .... காதலர் எண்ணத்தால் ..... உருகுகிறார் ........!!! & கவிப்புயல் இனியவன் 

புற்று நோயாளர் தினம்

ஏன் மனிதா என்னை ..... கொஞ்சம் கொஞ்சமாய் ... கொல்லுகிறாய் ...... கெஞ்சி கேட்டு அழுகிறது .... சிகரெட் .......!!! நீ கொஞ்சம் கொஞ்சமாய் ..... இறப்பதற்காக என்னை ..... ஒத்திகை பார்க்கிறாயா ....? உன் நுரையீரலை காட்டு .... நானே நேரடியாய் வந்து ..... கொண்று விடுகிறேன் ....!!! & இன்று புற்று நோயாளர் தினம் கவிப்புயல் இனியவன் 

என்னை விலக்குகிறாய்........!!!

காதல் செய்தேன்..... திருமணம் செய்தேன்..... பெண் தான் மாறி .... விட்டது ...............!!! தேவை என்றால் .... பேசு என்கிறாய் ..... அப்போதே புரிந்து .... விட்டது உன்னில் ..... இருந்து என்னை ..... விலக்குகிறாய்........!!! கண்ணுக்கு மட்டும் .... தான் தூர பார்வை ..... குறைபாடு இல்லை ..... இதயத்துக்கும் ...... இருப்பதை உன்னில் .... கண்டேன் ............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 07

கண்ணீரை வேறுபடுத்தும் ....!!!

வீசும் காற்றில் .... மரம் அசைகிறது ..... அழகாக இருக்கிறது .... மரத்தின் வலி ..... யாருக்கு புரியும் ......!!! கல்லில் கூட ஈரம் .... இருப்பதால் பாசி ..... படர்கிறது ..... உன் இதயம் கல் கூட ..... இல்லையே .......!!! கண்ணீரில் வேறுபாடு ..... இருப்பதே இல்லை ..... மனதின் வலிதான்....... கண்ணீரை வேறுபடுத்தும் ....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

அகத்தால் பிரிவது ....

மற்றவர்களுக்கு ...... நம் காதல் தோல்வியாக ,..... தெரியலாம் ...... உனக்கும் எனக்கும் ..... புரியும் நம் காதல் ..... வலிமை .......... முகத்தல் நாம் பிரிந்து ...... வாழ்கிறோம் ...... அகத்தால் பிரிவது .... மரணத்தில் மட்டும் .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 186

முள்ளாய் குத்துகிறது.....!!!

நீ அருகில் இருக்கும்..... நொடிகள் எல்லாம் ..... என்கடிகார முற்கள் ...... நெருஞ்சி முற்கள்..... என்னை விட்டு பிரிய.... போகிறாய் என்றதும்..... முள்ளாய் குத்துகிறது.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன் 

சிந்திக்க சில வரிகள்

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும் வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும் இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!! ******* எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்..... கடல் கரைக்கு தெரியும் அலையின்..... அன்பும் அரவணைப்பும் .....!!! ******* சிந்திக்க சில வரிகள் கவிப்புயல் இனியவன் 

சின்ன சின்ன கவிதைகள்

யாருக்கு யார்.... என்பதை இறைவன்.... சொல்லியிருந்தால்... உன்னை நான்..... விலக்கிஇருப்பேன் ....!!! ***** அழகை.... நேசித்தவன் அறிவை... இழக்கிறான்...... பணத்தை ..... நேசித்தவன் பாசத்தை .... இழக்கிறான்..... குணத்தை நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!! ****** சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்