இடுகைகள்

துரோகம்கொடுமை.....!!!

காதலுக்கு இளமை......!!! அனுபவத்துக்கு ..... முதுமை.....!!! பண்பாட்டுக்கு பழமை.....!!! நட்புக்கு  ...... தோழமை......!!! முன்னேற்றத்துக்கு ..... திறமை......!!! அளவான சொத்து...... இனிமை.....!!! காதலில் தோற்றவன் ..... தனிமை......!!! நம்பிக்கை துரோகம்..... கொடுமை.....!!! வாழ்க்கையின் இன்பம் துன்பம் வழமை.....!!! & கவிப்புயல் இனியவன் 

நீ எங்கிருக்கிறாய் ...?

உன்னையே   பார்பேன்... உன்னை மட்டுமே பார்ப்பேன்...... உன் கண்களை மட்டுமே .... பார்ப்பேன்......!!! உன்னை பார்க்காமல் ..... என் கண் யாரையும் ...... பார்க்கமாட்டேன் .......!!! உயிரே சொல் தயவு செய்து சொல் நீ எங்கிருக்கிறாய் ...? & கவிப்புயல் இனியவன் 

காதலும் மெழுகு திரியும்

காதல் இதயமும் .... மெழுகு திரியும் ...... ஒன்றுதான் ......!!! தனக்காக வாழாமல் பிறருக்காக எரிகிறது மெழுகு திரி....!!! தனக்காக வாழாமல்.... உனக்காக உருகுகிறேன் ... என்கிறார்கள் காதலர் ....!!! மெழுகு திரி எண்ணெய்யால் உருகுகிறது .... காதலர் எண்ணத்தால் ..... உருகுகிறார் ........!!! & கவிப்புயல் இனியவன் 

புற்று நோயாளர் தினம்

ஏன் மனிதா என்னை ..... கொஞ்சம் கொஞ்சமாய் ... கொல்லுகிறாய் ...... கெஞ்சி கேட்டு அழுகிறது .... சிகரெட் .......!!! நீ கொஞ்சம் கொஞ்சமாய் ..... இறப்பதற்காக என்னை ..... ஒத்திகை பார்க்கிறாயா ....? உன் நுரையீரலை காட்டு .... நானே நேரடியாய் வந்து ..... கொண்று விடுகிறேன் ....!!! & இன்று புற்று நோயாளர் தினம் கவிப்புயல் இனியவன் 

என்னை விலக்குகிறாய்........!!!

காதல் செய்தேன்..... திருமணம் செய்தேன்..... பெண் தான் மாறி .... விட்டது ...............!!! தேவை என்றால் .... பேசு என்கிறாய் ..... அப்போதே புரிந்து .... விட்டது உன்னில் ..... இருந்து என்னை ..... விலக்குகிறாய்........!!! கண்ணுக்கு மட்டும் .... தான் தூர பார்வை ..... குறைபாடு இல்லை ..... இதயத்துக்கும் ...... இருப்பதை உன்னில் .... கண்டேன் ............!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 07

கண்ணீரை வேறுபடுத்தும் ....!!!

வீசும் காற்றில் .... மரம் அசைகிறது ..... அழகாக இருக்கிறது .... மரத்தின் வலி ..... யாருக்கு புரியும் ......!!! கல்லில் கூட ஈரம் .... இருப்பதால் பாசி ..... படர்கிறது ..... உன் இதயம் கல் கூட ..... இல்லையே .......!!! கண்ணீரில் வேறுபாடு ..... இருப்பதே இல்லை ..... மனதின் வலிதான்....... கண்ணீரை வேறுபடுத்தும் ....!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் மற்றுமொரு காதல் கஸல் 

அகத்தால் பிரிவது ....

மற்றவர்களுக்கு ...... நம் காதல் தோல்வியாக ,..... தெரியலாம் ...... உனக்கும் எனக்கும் ..... புரியும் நம் காதல் ..... வலிமை .......... முகத்தல் நாம் பிரிந்து ...... வாழ்கிறோம் ...... அகத்தால் பிரிவது .... மரணத்தில் மட்டும் .....!!! & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் கவிதை எண் - 186

முள்ளாய் குத்துகிறது.....!!!

நீ அருகில் இருக்கும்..... நொடிகள் எல்லாம் ..... என்கடிகார முற்கள் ...... நெருஞ்சி முற்கள்..... என்னை விட்டு பிரிய.... போகிறாய் என்றதும்..... முள்ளாய் குத்துகிறது.....!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன் 

சிந்திக்க சில வரிகள்

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும் வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும் இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!! ******* எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்..... கடல் கரைக்கு தெரியும் அலையின்..... அன்பும் அரவணைப்பும் .....!!! ******* சிந்திக்க சில வரிகள் கவிப்புயல் இனியவன் 

சின்ன சின்ன கவிதைகள்

யாருக்கு யார்.... என்பதை இறைவன்.... சொல்லியிருந்தால்... உன்னை நான்..... விலக்கிஇருப்பேன் ....!!! ***** அழகை.... நேசித்தவன் அறிவை... இழக்கிறான்...... பணத்தை ..... நேசித்தவன் பாசத்தை .... இழக்கிறான்..... குணத்தை நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!! ****** சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

ஒரு வரியில் கவிதை

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய் ******** தனிமையிலும் இனிப்பது காதல் ********* நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல் ******** கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல் ******** தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!! ******* & ஒரு வரியில் கவிதை கவிப்புயல் இனியவன் 

கைபேசி வெளிச்சத்தில் ....

கை பேசியில் ..... அரட்டை அடித்த .... இளைஞன்...... கைபேசி வெளிச்சத்தில் .... மிரட்டி வருகிறான் அடக்கு முறையினரை .....!!! & கவிப்புயல் இனியவன் 

பீட்டாவுக்கு தெரியுமா ...?

உணர்வின் வழி தெரியுமா.....? பீட்டவுக்கு......!!! உணர்வின் வலி தெரியுமா....? பீட்டவுக்கு......!!! உணர்வின் மொழி தெரியுமா.....? பீட்டவுக்கு......!!! வழி, வலி, மொழி..... தெரிந்தான் இளைஞன்...... திரண்டான்......... புறப்படான்....... போராடுகிறான்..... தமிழன்.................!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

கவிதை எழுதும் நேரம் இதுவல்ல

படம்
அடுக்கு  மொழி பேசி ....... கவிதை எழுதும் நேரம் ..... இதுவல்ல -என்றாலும் ..... அடக்க நினைப்பவனை .... அடுக்கு மொழியால் ..... சாட்டை அடி அடிக்கவே ..... அடுக்கு மொழியை ...... பயன்படுத்துகிறேன் ......!!! ஜல்லியாய் பாயும் காளையை ...... கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ...... தமிழினத்தை - கிள்ளி எறியலாம் ..... என்று தப்பு கணக்கு போடும் ..... சில்லறைகளே - நாம் கல்லறை .... என்றாலும் நிறைவேறாது ..... உங்கள் எண்ணம் ..............!!! பாய்ந்து வரும் காளைகள் ...... எங்கள் நெஞ்சின் மேல் ..... பாய் வதில்லை நாங்கள் ..... நெஞ்சுசோடு அணைக்கவே ..... பாய் கின்றான் - அடக்காதீர் .... அடக்கினால் உங்கள் நெஞ்சின் ..... பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

போதும் உங்கள் அடக்குமுறை ......

படம்
தமிழன் ஜல்லி கட்டுக்காக ....... மட்டும் இங்கு போராடவில்லை ...... தமிழனை ஒரு சில்லியாய் ..... நினைக்காதே என்பதற்கு ........ சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!! ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ...... காளைகள் கூட அடங்காமல் ...... சீறிப்பாய்ந்தன  காளையை ..... அடக்குபவன் சீறிப்பாய் வான் .... எனபதை மறந்து விடீர்களே .......??? போதும் உங்கள் அடக்குமுறை ...... இதற்கு மேல் அடக்கினால் ...... அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!! தூபமிடாதீர்கள் இளைஞரின் ...... உணர்வுகளுக்கு தீயாக மாறினால் ..... தாங்கவே மாட்டீர்கள் ...............!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்