இடுகைகள்

சிந்திக்க சில வரிகள்

இறைவனுக்கு என் எதிர்காலம் தெரியும் வாழ்க்கைக்கு என் இறத்தகாலம் தெரியும் இன்பத்தில் வாழஎன் நிகழ்காலத்துக்கு தெரியும் ....!!! ******* எவ்வளவு பெரிய அலையாக இருந்தாலும்..... கடல் கரைக்கு தெரியும் அலையின்..... அன்பும் அரவணைப்பும் .....!!! ******* சிந்திக்க சில வரிகள் கவிப்புயல் இனியவன் 

சின்ன சின்ன கவிதைகள்

யாருக்கு யார்.... என்பதை இறைவன்.... சொல்லியிருந்தால்... உன்னை நான்..... விலக்கிஇருப்பேன் ....!!! ***** அழகை.... நேசித்தவன் அறிவை... இழக்கிறான்...... பணத்தை ..... நேசித்தவன் பாசத்தை .... இழக்கிறான்..... குணத்தை நேசித்தவன் கோபுரமாகிறான்.....!!! ****** சின்ன சின்ன கவிதைகள் கவிப்புயல் இனியவன்

ஒரு வரியில் கவிதை

சிறகு இல்லாமல் பறக்க முடியும் காதல் செய் ******** தனிமையிலும் இனிப்பது காதல் ********* நினைவுகள் நாளாந்தம் சண்டையிடுவது காதல் ******** கண்ணில்விதைதூவி மனதில் வளரும் மரம்காதல் ******** தொட்டது நீ மனத்தால்  கெட்டது நான் ...!!! ******* & ஒரு வரியில் கவிதை கவிப்புயல் இனியவன் 

கைபேசி வெளிச்சத்தில் ....

கை பேசியில் ..... அரட்டை அடித்த .... இளைஞன்...... கைபேசி வெளிச்சத்தில் .... மிரட்டி வருகிறான் அடக்கு முறையினரை .....!!! & கவிப்புயல் இனியவன் 

பீட்டாவுக்கு தெரியுமா ...?

உணர்வின் வழி தெரியுமா.....? பீட்டவுக்கு......!!! உணர்வின் வலி தெரியுமா....? பீட்டவுக்கு......!!! உணர்வின் மொழி தெரியுமா.....? பீட்டவுக்கு......!!! வழி, வலி, மொழி..... தெரிந்தான் இளைஞன்...... திரண்டான்......... புறப்படான்....... போராடுகிறான்..... தமிழன்.................!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

கவிதை எழுதும் நேரம் இதுவல்ல

படம்
அடுக்கு  மொழி பேசி ....... கவிதை எழுதும் நேரம் ..... இதுவல்ல -என்றாலும் ..... அடக்க நினைப்பவனை .... அடுக்கு மொழியால் ..... சாட்டை அடி அடிக்கவே ..... அடுக்கு மொழியை ...... பயன்படுத்துகிறேன் ......!!! ஜல்லியாய் பாயும் காளையை ...... கில்லிபோல் பாய்ந்து பிடிக்கும் ...... தமிழினத்தை - கிள்ளி எறியலாம் ..... என்று தப்பு கணக்கு போடும் ..... சில்லறைகளே - நாம் கல்லறை .... என்றாலும் நிறைவேறாது ..... உங்கள் எண்ணம் ..............!!! பாய்ந்து வரும் காளைகள் ...... எங்கள் நெஞ்சின் மேல் ..... பாய் வதில்லை நாங்கள் ..... நெஞ்சுசோடு அணைக்கவே ..... பாய் கின்றான் - அடக்காதீர் .... அடக்கினால் உங்கள் நெஞ்சின் ..... பாய் வதற்கு வெகு தூரமில்லை .....!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்

போதும் உங்கள் அடக்குமுறை ......

படம்
தமிழன் ஜல்லி கட்டுக்காக ....... மட்டும் இங்கு போராடவில்லை ...... தமிழனை ஒரு சில்லியாய் ..... நினைக்காதே என்பதற்கு ........ சல்லி சல்லியாய் குவிக்கிறான் ......!!! ஜல்லி கட்டை அடகுக்குநீர்கள் ...... காளைகள் கூட அடங்காமல் ...... சீறிப்பாய்ந்தன  காளையை ..... அடக்குபவன் சீறிப்பாய் வான் .... எனபதை மறந்து விடீர்களே .......??? போதும் உங்கள் அடக்குமுறை ...... இதற்கு மேல் அடக்கினால் ...... அடங்கிவிடும் எல்லாம் கவனம் .......!!! தூபமிடாதீர்கள் இளைஞரின் ...... உணர்வுகளுக்கு தீயாக மாறினால் ..... தாங்கவே மாட்டீர்கள் ...............!!! & கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் 

படாத பாடு படும் மனம் ...!!!

நீ நட்புக்காக..... பழகுகிறாயா ...? காதலுக்கு .... பழகுகிறாயா ...? கண்டுபிடிக்க முன்.... படாத பாடு படும் மனம் ...!!! பூ பறிக்கப்படுவது...... இரண்டு சந்தர்பத்தில்.. ஒன்று இறைவனுக்கு.... மற்றையது காதலுக்கு... இரண்டுமே ஏக்கம்.... தந்து வரம்கிடைக்கும் ...!!! & இனிக்கும் இன்ப காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

சிந்திக்க வைப்பதே ஹைக்கூ

மச்சம் புசித்தால் கோயிலுக்கு போகாதே பூசகரும் பூரண சைவம் கோயிலில் மச்ச அவதார சிலை & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ ---- பண்பாடுகள் பாழாய் போகிறது கலாச்சார விழாக்களில் மக்கள் இல்லை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு & கவிப்புயல் இனியவன் சிந்திக்க வைப்பதே ஹைக்கூ ----- காலம் காலமாய் ஏமாற்றுகிறார்கள்  தாயின் கையை தட்டி விட்டது குழந்தை  நிலா சோறு  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  -------- வயல் நிலங்கள் வெடித்தது  வறட்சியால் பயிர்கள் இறப்பு  வெட்டிய மரங்களின் சாபம்  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ  ----- நிலத்தில் கோடுகள் வறுமை கோடானது  நீடிய வறட்சி  & கவிப்புயல் இனியவன்  சிந்திக்க வைப்பதே ஹைக்கூ 

சக்தியோடுஇருக்கிறேன் ....!!!

நீ என் ......  நேரே வரும் நேரமே......  எனக்கு சூரிய உதயம்....!!!  நீ என்னை விட்டு  மறையும் தூரம்  தான்  சூரிய அஸ்தமனம் ....!!!  அன்பே...........  உன்னை சக்தியாக............  பார்ப்பதால் தான்............  தினமும்..........  உன்னை கண்டவுடன்.........  சக்தியோடு...........  இருக்கிறேன் ....!!!  &  சின்ன (S) மன (M) சிதறல் (S)  கைபேசிக்கு கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

எனக்கு சூரிய உதயம்....!!!

நீ என் ......  நேரே வரும் நேரமே......  எனக்கு சூரிய உதயம்....!!!  நீ என்னை விட்டு  மறையும் தூரம்  தான்  சூரிய அஸ்தமனம் ....!!!  அன்பே...........  உன்னை சக்தியாக............  பார்ப்பதால் தான்............  தினமும்..........  உன்னை கண்டவுடன்.........  சக்தியோடு...........  இருக்கிறேன் ....!!!  &  சின்ன (S) மன (M) சிதறல் (S)  கைபேசிக்கு கவிதைகள்  கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S)

இதயத்தில் இருந்த - நீ இடம் மாறி விட்டாய்..... இதயம் வலிக்கிறது ....!!! கண்ணில் இருந்து...... இடம் மாறி விட்டாய்..... கண்ணீராய் வடிகிறாய் ...!!! ஊன் இன்றி இருந்தாலும் உன் நினைவு இன்றி இருக்க மாட்டேன்......!!! & சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

இரைதேடும் மீன் குஞ்சுபோல் ...!!!

ஓடுகின்ற நீரில் ஒட்டி நின்று இரைதேடும் மீன் குஞ்சுபோல் ...!!! நீ வரும் பாதையை.... ஒழுங்கை ஒன்றில்... ஒட்டி நின்று... ஓரக்கண்ணால்... பார்க்கிறேன் ....!!! சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன்

இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!!

இனிய பொங்கல் வாழ்த்துகள் இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு  இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......!!! இரவு பகலாய் வயலில் புரண்டு...... இதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து..... இன் முகத்தோடு அறுவடை செய்து..... இவுலகுக்கே உணவு படைக்கும்..... இறைவனுக்கு ஒப்பான உழவர்களுக்கு..... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!!

காதலில் எப்படி வேறுபடும் ...?

சுவாசிக்கும் மூச்சாய் நீ பேசும் பேச்சாய் நீ சிரிக்கும் சிரிப்பாய் நீ காணும் கனவாய் நீ விடும் கண்ணீர் நீ இத்தனையும் நீயாக அத்தனையும் நானாக காதலில் எப்படி வேறுபடும் ...? & கவிப்புயல் இனியவன்