இடுகைகள்

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

ஒரு ஜீவாத்மாவின் கவிதை ----------------- என்னை அவர்கள் மதிக்கவில்லை...... என்று கோபப்படாமல்...... அவர்கள் மதிக்கும்படி........ நான் மாறவில்லை என்று ...... கவலைப்படு - காரணத்தை..... தேடு மதிக்கப்படுவாய்.......!!! பாராட்டும் போது...... துள்ளி குதிக்கும் மனம் ....... விமர்சிக்கும் போது....... துவண்டு விழுகிறாய்....... அப்போ உன் மனத்தை ...... கடிவாளம் போட்டு .... வழிநடத்துகிறாய்.......... கடிவாளத்தை கழற்று ...... சவாரிசெய் நிச்சயம் விழுவாய்...... காயப்படுவாய்....... ஆனால் வாழ்க்கையில் ...... வெற்றி பெறுவாய்,............!!! கரையில் நின்று கடலை ...... பார்த்தால் தப்புக்கடலும்..... சமுத்திரமாய் தெரியும்....... ஆழ்கடலில் நின்று கரையை.... பார்ப்பவனுக்கு கடலும் கரையும்..... ஒன்றுதான் ......... எல்லவறையும் சமனாக....... நோக்குபவனே ....... சாதனையாளனாகிறான்.....!!! & ஒரு ஜீவாத்மாவின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஆன்மீக கவிதை

அரியும் சிவனும் சேர்ந்து.... "அரிசி" ஆனாய் ....... உடலும் உயிரும் சேர்ந்து...... கோயிலானாய்......... உணர்வும் செயலும் சேர்ந்து..... இறைவனானவனே....... என்னுள் இருப்பவனே....... எனக்குன்னை காட்டிவிடு........!!! என்னவனே....... நீ ஒளிவடிவமானவனா.....? நீ ஒலிவடிவானவனா.........? நீ தீ வடிவானவனா.........? நீ காற்று வடிவானவனா .....? நீ திண்ம வடிவானவனா......? நீ திரவடிவமானவனா ....? உன் வடிவம் என்னவென்று...... அறியாமல் என்னை பாடாய்....... படுத்துபவனே.......... நீ என்னவாகவும் இருந்துவிடு...... என்னை எப்போதும் உன்னோடு..... வைத்துகொண்டே இரு..........!!! & கவிப்புயல் இனியவன் ஆன்மீக கவிதை

இனியவனின் இனியதீபாவளி வாழ்த்து

தீப திரு நாளில் ..... தீய எண்ணங்கள் தீயாகட்டும்..... தீய செயல்கள் தீயாகட்டும்..... தீய குணங்கள் தீயாகட்டும்......!!! தீயை போல் நிமிர்ந்து நிற்ப்போம்....... தீயவற்றுக்கு தீயை மூட்டுவோம்...... தீண்டாமைக்கு தீயூட்டுவோம்......!!! தீபாவளி அன்று...... தீனி இல்லாதோருக்கு ..... தீனி போடுவோம்.... தீபத்தை ஏற்றும்போது .... ஒளிரட்டும் அகம்...... அகம் மட்டுமல்ல உள்ளகமும் ...... ஒளிரட்டும்.............!!! & இனிமையான....... இன்பமான....... இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இனியவன்

இன்னும் இதயக்கதவை .....

நீ என்னை மறந்ததை .... நினைத்து கவலைப்படவில்லை ..... நீ மறந்து விட்டாய் என்று .... பல முறை இதயத்துக்கு .... சொல்லி விட்டேன் ..... இன்னும் இதயக்கதவை ...... திறந்து காத்துக்கொண்டு .... இருக்கிறது ..............!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒருமுறை சொல்லிவிடு

எத்தனை முறை கவிதை ..... எழுதுகிறேன் சம்மதம் .... கேட்டு ............!!! கவிதைக்கு பதில் சொல்கிறாய் ...... எனக்கு எப்போது பதில் ..... சொல்வாய் ......? ஒருமுறை என்றாலும் ..... சொல்லிவிடு உன் கவிதையை .... மட்டுமல்ல உன்னையும் ..... காதலிக்கிறேன் என்று ......!!! & என்னவளே என் கவிதை 47 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

இனியது இனியது

நீ வல்லினமான சொல்......!!! மெல்லினமான செயல் ......!!! இடையினமான வலி ...........!!! @@@ கவிப்புயல் இனியவன் உலக அதிசயம் கேள் என் கண்ணுக்குள் -நீ வானவிலாய் இருக்கிறாய் ....!!! @@@ கவிப்புயல் இனியவன் இனியது இனியது தனிமை இனியது அதனிலும் இனியது உன்னால் நான் தனிமையானது @@@ கவிப்புயல் இனியவன்

மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!

ஒருமுறை என்னை காதலித்து பார் ... காதலில் நீ காணாத .... மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!! & கவிப்புயல் இனியவன் @@@ காதல் வதையாகவும் வாகையாகவும் .... இருக்கும் ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் @@@ காதல் மட்டும்தான் ... கண்ணீரில் ... பூக்கும் பூ ....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

என் பிரியமான மகராசி......!!!

முழு ...... நிலா வெளிச்சத்தில் ...... கருவானவள் .........!!! பூக்கள் மலரும் போது...... பிறந்தவள் .............!!! தென்றல் வீசியபோது ...... பேசியவள்...........!!! விண்மீன்கள் துடித்த போது..... சிரித்தவள் ...........!!! கொடி அசைந்தபோது ..... நடந்தவள் .........!!! புல் நுனியில் பனி படர்கையில் ...... பருவமடைந்தவள் .........!!! இத்தனை அழகுகொண்டவளே ..... என் பிரியமான மகராசி......!!! & கவிப்புயல் இனியவன் என் பிரியமான மகராசி காதல் கவிதை

தந்தையின் அறிவுரைகளை ....

உயிருடன் வாழும் ..... காலத்தில் தந்தையின் ..... அறிவுரைகளை ..... செவிசாய்க்க மனம் .... விரும்புவதில்லை ..... கட்டிளமை பருவம் ...... தன்முனைப்போடு ...... பேசும் ,கருதும்.......!!! தந்தையின் மறைவுக்கு ..... பின்னர் அவரின் அறிவுரை ..... மனதை கொல்லும்...... வாழ்க்கையின் ஒவ்வொரு ..... துன்பமும் வரும்போது ..... தந்தையின் அறிவுரைகளை .... ஞான கூற்றாய் தெரியும் ......!!! & குடுப்ப கவிதைகள் தந்தை  கவிதை கவிப்புயல் இனியவன்

கவிப்புயலின் குடும்ப கவிதைகள்

பிஞ்சு விரலை பஞ்சு...... போல் நினைத்து மெல்ல ..... மெல்ல அமர்த்தி சுகம் ..... காணும் உயிரே .........!!! மார்பிலே ...... போட்டுக் கொண்டே... மனம் நிறைந்து மகிழ்ந்து மனத்தால் வளர்த்த உயிரே ....!!! மளமளவென வளர்ந்தேன் .. மணமுடித்து வைத்தாள்... நான் விரும்பிய உயிரை..!! அன்னை அவள் கண் மூடியதால்... அனாதையானேன் அன்பென்னும் உறவிலிருந்து ...!!! உள்ளத்தால்  சொல்லுகிறேன்... தாயை நினைத்து கவிதை எழுதும் எந்த கவிஞனும் ...... கண்ணீரை சிந்தாமல் ....... எழுதவே முடியாது ........!!! & குடுப்ப கவிதைகள் அம்மா கவிதை கவிப்புயல் இனியவன்

எல்லாமே நட்புதான்

மழலைப் பருவத்தில் நட்பு : ------------- உனக்கு என்னைத்தெரியாது ....... என்னை உனக்கு தெரியாது........... நீயும் கையசைத்தாய் நானும் ...... கையசைத்தேன் ....... அதில் புரியாத சுகம்.........!!! குழந்தைப் பருவத்தில் நட்பு : ------------ நீயும் நானும் விளையாடுவோம் ..... கிடைத்தவற்றால் அடிபடுவோம்.... மீண்டும் சந்திப்போம் ...... பகமையென்றால் .... என்ன என்றே தெரியாத நட்பு ..!!! காளைப் பருவத்தில் நட்பு : ---------- சுற்றுவதற்கு நட்புத்தேவை ..... வீண் சண்டைக்கு நட்புத்தேவை .. இளங்கன்று பயமறியாத நட்பு ...!!! வாலிபப் பருவத்தில் நட்பு : _________ என் வலியையும் சுகத்தையும் .... சொல்லவும் கேட்கவும் ஆறுதல் .... தரவும் நட்புத்தேவை ....!!! முதிர்ந்த பின் நட்பு : ------------ வாழ்க்கையின் துன்பங்கள் ... துயரங்கள் இழப்புக்களை ... அனுபவங்களைப்பகிர்ந்து .... கொள்ளஒரு நட்பு தேவை ..! & நட்புடன் உங்கள் கவிப்புயல் இனியவன் 

காதலில்லாமல் வாழ்ந்திடாதே

காதல் ஒரு காவியம்....... காவியகதைகளில்......... சோகங்கள் உண்டு........ சோகத்தை தாங்க ......... தயாராக இரு .............!!! காதல் ஒரு சமுத்திரம்...... விழுந்தால் மூழ்குவாய்....... மூழ்காமல் இருக்க......... கற்றுக்கொள் .............!!! காதல் ஒரு கத்தரிக்காய்....... சிலவேளை புரியும் ............... சில வேளை ருசிக்கும் ........... சில வேளை கருகும் ............!!! காதல் ஒரு கானல் நீர்.... உண்மைபோல் ..... சில விடையங்கள் தெரியும் ........ ஆனால் அது முழுப்பொய்..........!!! காதல் ஒரு கண்ணாடி ........ உன்னையே நீ பார்த்து........ சிரிப்பாய் அழுவாய் ........!!! காதல் ஒரு கற்பூரம்............ காதல் வெற்றியோ தோல்வியோ............ அடைந்தால் இறுதியில் ................ ஒன்றுமே இல்லை என்று ............... உணரப்பண்ணும்.........!!! காதல் ஒரு காற்று.............. தென்றலும் உண்டு .............. புயலும் உண்டு ...............!!! காதல் ஒரு நட்பு ........... தியாகம் செய்யத்தயாராக ............ இரு நட்புதான் கலங்காமல்.......... தியாகம் செய்யும்..............!!! காதல் ஒரு கற...

நண்பா அறிவுரை கேட்பாயா ...?

நண்பா .... அறிவுரை கேட்பாயா ...? மனம் திறந்து பேசு .... மனதில் பட்டதெல்லாம் .. பேசாதே .... சிலர் புரிந்து கொள்வார்கள் ... சிலர் பிரிந்து செல்வார்கள் .... இரண்டிலும் நன்மைகளும் ..... தீமைகளும் உண்டு ..... & கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

வலிக்கிறதா

இதயத்தை ..... கிள்ளிப்பார்த்துவிட்டு ...... வலிக்கிறதா என்று கேட்டால் ... காதல் ...!!! இதயத்தை ...... கிள்ளிப்பார்காமலே ... வலிக்கிறதா என்று கேட்டால் ... நட்பு ...!!! இதயத்தில் .... இருந்துகொண்டு .... கிள்ளிக்கொண்டே .... இருந்தால் ....... மனைவி ..........!!! & கவிப்புயல் இனியவன்

முன்னோர் சொன்னது ..!!!

இயந்திர உலகில் ......... ஓடிக்கொண்டிருப்பது .. கடிகாரமில்லை ...! நீதான் பெரியமுள் - உன் ஆயுள்... சிறியமுள் -உன் உயர்வு... வினாடி முள் -உன் முயற்சி... வேக வேகமாக முயற்சி செய் .. நேரம் பொன்னானது ..... முன்னோர் சொன்னது ..!!! & சமுதாய கவிதை கவிப்புயல் இனியவன்