இடுகைகள்

ஒருதுளி நீ ....!!!

பெற்ற ..... தாயின் இழப்பு ... ஒருபுறம் கண்ணீரை .... கொண்டு வருகிறது ...!!! நீ பிரிந்து சென்ற .. வலி கண்ணீரை .. தருகிறது ...!!! இரண்டையும் இரு .. கண்களாக விரும்பினேன் .. என்பதற்காக ... என் இரண்டு கண்ணும் .. அழுகிறது ..!!! நிச்சயம் சொல்வேன் ... வரும் துளிகளில் ... ஒருதுளி நீ ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

தேடுவேன் உயிர் உள்ள வரை,....!!!

நீ உண்மையோ .... பொய்யோ.... பேசினாலும் ..... ரசிப்பேன் ......!!! எத்தனை ... முறை அடித்தாலும்... தாய்மடித் தேடும் ... பிள்ளையாய்... உன்னை மட்டுமே ... தேடுவேன்... உயிர் உள்ள வரை,....!!! நீ பார்வையில் இருந்து விலகி செல்லும் .... போதெல்லாம் .... கண்களுடன் ....... போராடுகின்றது,.. கண்ணீர் .....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ வந்துபோனகனவுகள். . !

கலைந்தே .... போனாலும்..... மறப்பதில்லை... நீ வந்துபோன.... கனவுகள். . ! நீ பிரிந்தே போனாலும்..... விழியோரம் கலையாமல்.... நீ தந்த நினைவின் .... வலிகள் ........!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

மரணத்திற்கு எது அழகு…?

கடலுக்கு எது அழகு…? அலை அழகு ,...!!! * அலைக்கு எது அழகு…? கரை அழகு ...!!! * கரைக்கு எது அழகு…..? மண் அழகு ...!!! * மண்ணுக்கு எது அழகு...? வாசம் அழகு ...!!! * வாசத்திற்கு எது அழகு…? பூ அழகு .....!!! * பூவுக்கு எது அழகு…...? பெண் அழகு ...!!! * பெண்மைக்கு எது அழகு…? தாய்மை அழகு ...!!! * தாய்மைக்கு எது அழகு…? பாசம் அழகு ...!!! * பாசத்திற்கு எது அழகு...? உயிர் அழகு ....!!! * உயிருக்கு எது அழகு..? உடல் அழகு ...!!! * உடலுக்கு எது அழகு...? வயது அழகு ...!!! * வயதிற்கு எது அழகு..? காதல் அழகு ...!!!. * காதலுக்கு எது அழகு…? கற்பு அழகு ......!!! * கற்புக்கு எது அழகு…...? வாழ்க்கை அழகு…!!! * வாழ்க்கைக்கு எது அழகு…? மரணம் அழகு….!!! * மரணத்திற்கு எது அழகு…? வாழ்வியல் அழகு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன்  

நீர் எதற்காய் துன்ப படுகிறீர்

என்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் ..........? நான் துன்ப படும் போது...... நீரும் வதைக்க படுகிறீர் ..... நான் அவமானப்படும் போது ..... நீரும் அவமான படுகிறீர் ........ என்னுள் இருப்பவனே ..... எதற்காக எனக்காய் ...... நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......? விடை தெரியாமல் ஆயிரம் ...... பிறப்புக்கள் - அதில் நானும் ..... ஒருவனே -என்னுள் இருக்கும் .... பரம் பொருளே இந்த வினாவுக்கு ..... விடைதருவீர் ..................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......?

என்னுள் இருந்து கொண்டு .... என்னை வதைப்பவனே ....... நீ வேறு நான் வேறு ..... இல்லை என்ற சித்தர் ..... கூற்றை நம்புபவன் நான் ...... அப்போதேன் என்னை ..... வதைக்கிறீர் ..........? நான் துன்ப படும் போது...... நீரும் வதைக்க படுகிறீர் ..... நான் அவமானப்படும் போது ..... நீரும் அவமான படுகிறீர் ........ என்னுள் இருப்பவனே ..... எதற்காக எனக்காய் ...... நீர் எதற்காய் துன்ப படுகிறீர் ......? விடை தெரியாமல் ஆயிரம் ...... பிறப்புக்கள் - அதில் நானும் ..... ஒருவனே -என்னுள் இருக்கும் .... பரம் பொருளே இந்த வினாவுக்கு ..... விடைதருவீர் ..................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை நினைக்காத இதயம் .....

அரியும் சிவனும் சேர்ந்து ...... அரிசியானவனே ......... உடலும்  உயிரும் சேர்ந்து ..... ஆலயமானவனே ........ உணர்வும் செயலும் சேர்ந்து ...... மறை பொருளானவனே ...... என்னுள் இருப்பவனே ..... எல்லாம் வல்லவனே ........!!! உன்னை வணங்காத மனம் ...... வேண்டாம் ........ உன்னை நினைக்காத இதயம் ..... வேண்டவே வேண்டாம் ....... உன்னை சொல்லாத சொற்கள் ..... வேண்டாம் ...........!!! நீ ஒளி வடிவானவனா ......? நீ ஒலி வடிவானவனா ......? நீ தீ வடிவானவனா ...........? நீ காற்று வடிவானவனா ....? நீ திண்மவடிவானவனா....? நீ திரவ வடிவானவனா ......? உன் ..... வடிவை மாயக்கண்ணால் ..... பார்க்கவே முடியாது ....... மனக்கண்ணால் தான் ...... பார்க்கமுடியும் .................... மனக்கண்ணால் பார்க்கும் ....... மார்க்கங்களை தந்து விடு ........!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன்

என்னை உன்னுடனேயே வைத்திரு

என்னை எப்போதும் ..... உன்னுடனேயே  வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு - உன்னை விட ..... யாரும் துணையில்லை ...... எனக்கு - மற்றவர்களில் ..... நம்பிக்கையுமில்லை ............!!! யான் பெற்ற அறிவு ...... யான் பெற்ற செல்வம் ..... யான் பெற்ற புகழ் ....... எல்லாம் உன்னிடமிருந்தே ....... கிடைத்தவை என்பதை ..... யான் நன்றாக புரிவேன் .......!!! மாயையில் மயங்காமல் இருக்க ....... போதையில் பேதலிக்காமல் இருக்க ..... ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ...... என்னை எப்போது உன்னோடு ....... வைத்திரு இறைவா ...... என்னை எப்போதும் ..... உன்னுடனேயே  வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு இறைவா ....................!!! & ஆன்மீக கவிதை கவிப்புயல் இனியவன் 

என் இதய வலி கவிதை

நெருப்பில்  கருகியிருக்கலாம்  உன் சிரிப்பில்  கருகி தவிக்கிறேன்  & ஒன்றில் நீ பேசு.... அல்லது உன் கண்.... பேசட்டும் ...... இரண்டும்.... பேசினால் நான் எப்படி பேசுவது ...? & அவளுக்கு இதயம்.... இருக்கும் இடத்தில்..... முள் கம்பிகள் .... இருக்கிறதுபோல் ........ இப்படி வலி தருகிறாள் ..? & நான் எழுதுவது உனக்கு ஒருவரி கவிதை - அது என் இதய வலி கவிதை & உன்னை அணு அணுவாக காதலிக்கிறேன் -உனக்கு அணுக்கவிதை எழுதுகிறேன்

கவிதைக்கு ஒரு கவிதை

க - பிரமன் வி - அழகு தை - அலங்காரம் பிரமனை போல் படை ..... அழகு தமிழை இணை ..... அலங்காரமாய் பிறக்கும் .... கவிதை ...........!!! கவி - குரங்கு தை - அலங்காரம் குறும்பு தனங்களுடன்...... அலங்காரம் செய்தால் .... கவிதை பிறக்கும் .....!!! க - பிரமன் விதை - நடுகை படைப்புகளை ...... நட்டு விட்டால் ...... விருட்ஷமாகும் .... கவிதை ...........!!! க - பிரமன் (வி ) தை - அலங்காரம் படைப்புகள் என்பது ..... ஏதோ ஒரு கதை அதுவே கவிதை ........ ஆகிவிடுகிறது ...........!!! & கவிப்புயல் இனியவன் தமிழோடு விளையாடு 

பஞ்ச வர்ண கவிதைகள்

எனக்கு வாழ்க்கையே ..... வெறுத்து விட்டது ...... எனக்கு வாழ்க்கையே ....... பிடிக்கவில்லை ...... என்று வாழ்க்கை வெறுத்து ..... பேசுபவர்கள் ....... வாழ கற்று கொள்ளவில்லை ...... வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள்   ..... கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!! & பஞ்ச வர்ண கவிதைகள் வர்ணம் - வாழ்க்கை கவிப்புயல் இனியவன்

நீயே செல்ஃபி எடுத்தாய் ....!!!

ஓடுகின்ற பேரூந்திலே ஓடி ஓடி  ஏறினாய் .... ஒற்றை கையால் உன்னை .... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! வேகமாய் வரும் ரயிலை ...... எதிராய் நின்று உன்னை .... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! பாழடைந்த கிணற்றுக்குள்  ...... நுனிவிரலில் நின்றுஉன்னை நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! ஊட்டி வளர்த்த தாயை .......... நினைத்துப்பார்த்தாயா ...? தூக்கி வளர்த்த தந்தையை .... நினைத்தாயா...? உன்னை ...... நீயே செல்ஃபி  எடுத்தாய் ....!!! உன்னை நாம் புகை படமாய் ...... பார்க்கிறோம் .......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

அறுதியான நம் காதல் .....!!!

நீ ... எனக்கு ... கிடைக்க போவதில்லை ..... உறுத்தியாகி விட்டது ..... அறுதியான நம் காதல் .....!!! என்னதான் ...... சொன்னாலும் ..... உன்னை கண்டவுடன் ..... பாழாய் போன மனசு ...... உன்னுடன் பேச துடிக்கிறது ..... அற்ப ஆசையுடன் ..... ஏங்குகிறது .........................!!! + கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!!

உன்னை மறப்பதற்கு ....... என்னை மறக்கவேண்டும் ..... என்னை மறப்பதற்கு ..... உன்னை மறக்க வேண்டும் ...... என்ன சொல்கிறேன் என்று ..... புரியவில்லையா ......? எனக்கும் புரியவில்லை ..... உன்னை எப்படி மறப்பது ....? முடிந்தால் ஒரு உதவி செய் ..... என்னை நீ மறக்க என்ன ..... செய்தாய் ...? சொல் உன்னை ..... மறக்க நான் முயற்சிக்கிறேன் ....!!! + கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

சமூக சிந்தனை கவிதைகள்

நல்ல பழங்களை ..... தட்டில் அடுக்கி வைத்து ..... நலிந்த பழங்களை....... கொடையாய் கொடுக்கும் ..... கலியுக தர்மவான்கள்.......!!! பகட்டுக்கு பிறந்தநாள் ..... பலவிதமான அறுசுவை ..... உணவுகள் - நாலுபேர் ....... புகழாரம் ....... விடிந்த பின் பழைய சாதம் ..... ஏழைகளுக்கு அள்ளி.... கொடுக்கும் ....... கலியுக தர்மவான்கள்.......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்