இடுகைகள்

சின்ன (S) மன (M) சிதறல் (S) 02

சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் ------------------------------------ காதல் அழகும் ... அழுக்கும் நிறைந்தது ... ஆனாலும் அழகு ...!!! ^^^^^ கண்ணுக்குள்.... கண்ணீர் மட்டுமல்ல ... இரத்தமும் இருக்கிறது ... மறந்து விடாதே ....!!! ^^^^^ என் காதல் நினைவு உன் காதல் நினைவு எப்படி தாங்கும் என் இதயம் ....!!! ^^^^^^ கவிப்புயல் இனியவன்

சின்ன (S) மன (M) சிதறல் (S)

இதயத்தை முள்ளாய் .... வைத்துக்கொண்டு ... கண்ணை மலராய் .... வீசுகிறாய் ....!!! ^^^^^ நான் விடுவது கண்ணீர் .... என்று நினைக்கத்தே .... நீ தந்த நினைவுகள் ....!!! ^^^^^ காதலில் கண்ணீர் ... வரவில்லையென்றால் ..... இன்பமில்லை .....!!! &^& சின்ன (S) மன (M) சிதறல் (S) கைபேசிக்கு கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

உலகில் யாரும் இல்லை .....!!!

மனவேறுபாடை ..... தோன்றும் போதே .... தடுக்கும் ஆற்றல் ..... எவனுக்கு வருகிறதோ ....? அவனை வெல்ல இந்த ..... உலகில் யாரும் இல்லை .....!!! மன கசப்பை நீக்கியவன் ..... முன் அனைவரும் தோல்வியை ..... சந்தித்தே ஆகவேண்டும் .....!!! + குறள் 855 + இகல் + இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 75 +

மகா துன்பம் .......!!!

துன்பத்தில் கொடிய .... துன்பம் மனத்துன்பம் ..... மனதை கொல்லும்.... மகா துன்பம் .......!!! மனத்துன்பத்தை ...... நீக்கியவன் என்னவோ ....... அதுவே அவனுக்கு .... இன்பத்தில் பெரும் ..... இன்பமாகும் .....!!! + குறள் 854 + இகல் + இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 74 + கவிப்புயல் இனியவன்

கொட்டி கிடைக்கும் புகழ் ........!!!

நீக்கு நீக்கு .... மனவேறுபாடு ...... நீக்கு ......... நீக்கவேண்டியதில் ..... இதுவே முதன்மை ....!!! நீக்கிய மனவேறுபாடை ...... நீக்கிய கணமே ........ கொட்டி கிடைக்கும் ..... புகழ் ........!!! + குறள் 853 + இகல் + இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 73 + கவிப்புயல் இனியவன்

நட்பின் சிறந்த குணம் ....!!!

நண்பா ..... நீ எனக்கு எத்தனை ..... வலிகளை துன்பங்களை .... தந்தாலும் - நீ எந்தன் .... நண்பனே ......!!! இன்பத்தை தருபவன் ..... மட்டுமே நண்பன் இல்லை ..... துன்பத்தையும் தருவான் ..... சகித்து கொண்டு அவன் .... நட்பையும் தொடர்வதே .... நட்பின் சிறந்த குணம் ....!!! + குறள் 852 + இகல் + பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 72 + கவிப்புயல் இனியவன் 

"மனவேறுபாடு "

"மனவேறுபாடு " ---------------------- மனிதனோடு ...... மட்டுமல்ல பகை ...... உயிரினங்கள் ..... எல்லாவற்றோடும் பகை .....!!! எல்லாவற்றோடும் .... ஒப்பிட்டு ,வேறுபடுத்தி .... தன்னை தானே குறைத்து .... மதிப்பிட்டு வாழ்வதே ..... "மனவேறுபாடு " என்பர் ....!!! + குறள் 851 + இகல் + இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். + திருக்குறளும் கவிதையும் - நட்பியல் + கவிதை எண் - 71

நட்பு கவிதை

இறப்பது எளிதே எனக்கு...!!! நண்பா உன்னை .. மறப்பதைக் காட்டிலும்...!!! &^& கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை ---- அடி, முடி தேடினாலும்..... அகராதியை புரட்டினாலும்..... முழுமையான அர்த்தம் ..... புரியாது ...... நட்பின் ஆழம் ............!!! &^& கவிப்புயல் இனியவன் நட்பு கவிதை

நம் காதல் ஆகிவிடும்....!!!

நீயும் காதல்...... சிறகு கொண்ட பறவை..... பருந்தல்ல...... என்னோடு பறந்து வர..... தயங்குகிறாய்.....!!! காதலில் அதிகமாக எரியாதே.... சாம்பலாகி விடுவாய் உலகம் ஊதியே மறைத்து.... விடும்............!!! காதலை .... உண் - உன் காதல்..... நம் காதல் ஆகிவிடும்....!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை 1048 கவிப்புயல் இனியவன்

அணைந்தே விட்டாயே......!!!!

காதலில் நான் ...... மூலவேர் - நீயோ..... இலை ஒரு நாள்..... உதிர்ந்து விழுவாய்........!!! நீ பனிக்கட்டியில் உருவாகிய..... கப்பல் தெரியாமல் உன்னில்...... பயணம் செய்துவிட்டேன்.......!!! என் காதல் தீபமே........ உன்னை அணைத்தேன்........ அணைந்தே விட்டாயே......!!!! &^& முள்ளில் மலரும் பூக்கள் காதல் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன்

சமாதானம் ஆவாள்...............!!!

திட்டு வாங்குவாள் ..... சிலவேளை அழுவாள் ..... சில மணி நேரம் பேசமாடடாள் ...... அவளை சமாதான படுத்துவேன் ..... சின்ன சிரிப்போடு ....... சமாதானம் ஆவாள்...............!!! நீயும் என் அப்பாவும் ...... ஒருதாண்டா என்று திட்டுவாள் ..... ஒருகணம் உறைந்து போவேன் ..... அவள் குழந்தை குணத்தில் ...... அப்பாவாக பார்க்கும் அழகு ..... தூயநட்பிலேயே காணலாம் .....!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி  ஆண் பெண் நட்பு கவிதை  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

தூயநட்பிலேயே காணலாம் .....!!!

திட்டு வாங்குவாள் ..... சிலவேளை அழுவாள் ..... சில மணி நேரம் பேசமாடடாள் ...... அவளை சமாதான படுத்துவேன் ..... சின்ன சிரிப்போடு ....... சமாதானம் ஆவாள்...............!!! நீயும் என் அப்பாவும் ...... ஒருதாண்டா என்று திட்டுவாள் ..... ஒருகணம் உறைந்து போவேன் ..... அவள் குழந்தை குணத்தில் ...... அப்பாவாக பார்க்கும் அழகு ..... தூயநட்பிலேயே காணலாம் .....!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

நான் சுதந்திர பறவை ............!!!

அத்தனை நட்புகளும் ...... ஏதோ ஒரு நலன் தான் ...... உன் நட்பை எப்படி ..... வர்ணிப்பது .........? நீ எனக்கு தாயா ......? நீ என் தலைவியா ......? நீ என் வழி நடத்துனரா .....? நீ என் இறைவியா .....? மாஜங்கள் காட்டும் ...... மாஜ உருவ கருவி -நீ உருவம் தான் மாஜம்....... உன் செயல்கள் சிற்பம் ......!!! ஒரு அடைபட்ட இதயத்தில் ..... வாழ்ந்த என்னை ....... பறந்து திரியும் சிட்டு ..... குருவியாக்கியவள் -நீ நீ என்னருகில் இருக்கும் ... காலமெல்லாம் நான் .... சுதந்திர பறவை ............!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

அழகு தமிழ் பேசும் அழகி நீ

அவன் ---------- அழகு தமிழ் பேசும் அழகி நீ அலங்காரம் இல்லாவிடினும் அழகி நீ அகங்காரம் கொண்ட அழகி நீ அகட விகடமாய் பேசும் அழகி நீ அகத்தில் முழு நிலா அழகி நீ அகம் முழுதும் நிறைந்தவளே..... அழகுக்கு மகுடமாய் இருப்பவளே..... அகோரமாக்குதடி உன் நினைவுகள்..... அக்கினியில் எரியுதடி என் இதயம்..... அணைத்துவிடு காதல் கொண்டென்னை.......!!!  அவள் --------- அச்சப்படாதே அச்சுதனே.......... அகம்பை யான் உனக்கேதான்....... அகந்தையும் இல்லை ஆணவமும் இல்லை அடர்த்தி கொண்ட நம் காதல்........ அகிலம் போற்றும் காதலடா..........!!! அடைமழைபோல் இன்பம் தருவேன்....... அந்தகாரத்தில் இன்பம் தருவேன்...... அபலை என்னை ஏமாற்றிவிடாதே...... அற்ப ஆயுளாய் ஆக்கிவிடாதே.... அன்பரசனே நீ என் இன்பரசன்.........!!! &^& அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவனின் கவிதை படைப்புகள் 04

முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!! கானா கவிதை காதலின் இன்பமும் துன்பமும் ...!!! காதல் அணுக்கவிதைகள்..!!! காதல் சிதறல்கள்கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை போராட்ட கவிதை கே இனியவனின் பல்வகை கவிதைகள் ஒரு தலைக்காதல் கவிதை கே இனியவன் ஹைக்கூகள் கே இனிவனின் குமுறல் கவிதையும் வினாவும் - விடை தாருங்கள் கே இனியவனின் புதுக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!