இடுகைகள்

அகராதி நீ என் அகராதி

அகராதி நீ என் அகராதி ..... அகரம் முதல் அந்தம் வரை..... அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ..... அழகு தமிழ் வார்த்தைகளை...... அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!! அகோராத்திரமும் உன்னை நினைத்து..... அல்லோலகல்லோலப்படுகிறேன்...... அணைக்கவும் முடியவில்லை....... அகலவும் முடியவில்லை ........ அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......? அழகு தேவதையே அகத்தரசியே & அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன் மேலும் தொடரும்

என் விழி கொண்டு ....!!!

உன்னை .... சிற்பமாக .... செதுக்கியுள்ளேன் ..... இதயத்தில் ..... உளி கொண்டு அல்ல..... என் விழி கொண்டு ....!!! டிக் டிக் டிக் .. துடிக்க மட்டும் தெரிந்த என் இதயத்திற்கு,-இப்போ திக் திக் திக் என்று .... தவிக்கவும் கற்றுத் தந்தது உன் அன்பு...!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

சின்ன கிறுக்கல்கள்

உன்னை.... தெரியாதவர்களுக்கு ...... நீ கொடுப்பது ....... நினைவு பரிசு .. உன்னை புரிந்த எனக்கு .... உன் நினைவே பரிசு... & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் ^^^ உன்னை ..... பிரிய சொல்கிறாயே ..... என்னையா ......? உயிரையா ........? உன்னை பிரிய ..... நொடிபோதும்....... உன் நினைவுகளை ..... பிரிய எத்தனை ..... ஜென்மமும் போதாது ....!!! & சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கதைக்கும் கவிதைக்கும் காதல்

அவன் -இனிமை -------- எப்படியாவது அவளின் பெயரை கண்டறிய துடித்தான் .இனிமை தண்ணி குடிக்க போவதுபோல் எல்லா இடத்திலும் அவளை தேடினான் . அவள் வேண்டுமென்றே கதவு திரைக்குப்பின்னால் நின்றாள் .தேடிப்பார்க்க இனிமை அவளை காணாமல் சுவாதிடத்துடன் .வரும்போது . வின்னியாவின் அம்மா குரல் ஒலித்தது .......!!! வின்னியா ...வின்னியா ....எங்கம்மா இருக்கிற .....? வின்னி வின்னி ....என்று கூப்பிட்டபோது  திரைக்குப்பின்னால் இருந்து வந்தாள் வின்னியா ...... ஓ பெயர் வின்னியாவா ஓகே ஓகே என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு தெரு முனைக்கு வந்தான் நண்பர்களுடன் தெருவை அலங்காரம் செய்வதற்கு ......இன்னும் விடிவதற்கு ஒரு சில மணி நேரமே இருந்தது . ஒரு சின்ன தூக்கம் கூட ஒருவரும் தூங்கவில்லை . விடிந்தால்  கல்யாணம் . தூரத்தில் இருந்து வின்னியா சைகை கொடுத்தாள். தூங்குங்க என்று பதில் சொல்ல முடியாமல் இனிமை தானும் சைகையால் நீ முதல் தூங்கு என்பதுபோல் சொன்னான் . தலையை அசைத்தபடி தூங்க சென்றாள் - வின்னியா அவள் - வின்னியா ------ தூக்கம் என்பது கண் ...... மூடுவது மட்டுமல்ல ..... மனமும் மூடவேண்டும் ......

கவலையில்லை ....!!!

கடற்கரையில் ...... பேசியதுபோல் ஆகிவிடாது .... நம் காதல் ...... தொட்டு தொட்டு ..... சென்று விடுகிறாய் .......!!! எப்படியும் வாழலாம் ..... என்றால் உன்னை ..... காதலிக்க தேவையில்லை ...... உன்னை காதலித்ததால் ..... இப்படியும் வாழுகிறேன் .... என்பதிலும் கவலையில்லை ....!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

இதயம் இருட்டாக ..... இருந்தாலும் காதல் ..... வெளிச்சமாக்கி ..... விடுகிறது ........!!! இருட்டறையில்....... தவிக்கும் குழந்தை .... வீறிட்டு அழுவதுபோல்...... நானும் அழுகிறேன் ..... இதய விளக்கை ..... நூற்றத்துக்காக ......!!! துடித்து கொண்டு .... இருந்த என் இதயத்தை .... துடி துடிக்க வைத்துவிட்டாய் .....!!! &  ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஒரு நாள்தான் ஆயுள்.... !!!

பூக்களுக்கு ..... ஒரு நாள்.. தான் ஆயுள்.... !!! அதனை ரசிக்க தெரியாத .. மனிதன் .. அதை பறித்து பூஜை செய்கிறான் ......!!! தனது ஆயுள் ... நூறு வருடங்கள் .. இருக்க வேண்டி ..!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை

தத்துவ கவிதை

இதயம் துடித்து.... கொண்டு இருந்தாலும் ... இறந்து போனது .... போலத்தான் ... வாழ்கிறேன் ..... நீ அருகில் ....... இல்லாததால் ..!!! ^ கவிப்புயல் இனியவன் பல ரசனை கவிதைகள் ^ நாம் வாழும் வரை .... நாம் யாரையும் .. மறக்கக் கூடாது... நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் .... மறக்க கூடாது......!!! & கவிப்புயல் இனியவன் தத்துவ கவிதை 

கொன்றே விடுகிறாய் ....!

நினைவுகளால் ... ஏங்க வைக்கிறாய் ...! வார்த்தைகளால் ... காயாப்படுத்துகிறாய்..! மௌனத்தால் ... கொன்றே விடுகிறாய் ....! காதலில் இத்தனை .... வலிகளா ..............? ^ கவிப்புயல் இனியவன் பல ரசனை கவிதைகள் 

கற்று கொள்ளப்போகிறேன்

இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன்

நீயும் தப்பமுடியாது .....!!!

நீ யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள்  - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன் 

தமிழோடு விளையாடு 02

வந்தேன்.....என்னை....... தந்தேன்... நினைத்தேன்.... என்னையே......மறந்தேன் ... ருசித்தேன்...... மொழியை- சுவைத்தேன் .. இழந்தேன்..... எனை...... ஒப்படைத்தேன் .. காதலித்தேன் ....உயிராக .....நேசித்தேன் .. சுவாசித்தேன்....மூச்சாக ...வாழ்ந்தேன் ... பார்த்தேன்- நீ வரவில்லை -அழுதேன்  & தமிழோடு விளையாடு 02 கவிப்புயல் இனியவன்

தமிழோடு விளையாடு

நீ படும் .......................அவமானம் உனக்கு அதுதான் ...வருமானம் உறுதியாக எடு .........தீர்மானம் வெற்றி என்பது ........அனுமானம் வாழ்க்கை என்பது ..பிரமானம் முடிவில் வாழ்வது.....தன்மானம் & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன்

என்னவளே என் கவிதை

நீ  விடும் மூச்சு காற்றில் .... என் இதயம் என்னும் ..... காதல் காற்றாடி பறக்கிறது ......!!! எப்போது உன் காதல் .... மூச்சை நிறுத்துகிறாயோ ..... அப்போது காற்றில் அறுந்த..... காற்றாடி எங்கு போய் ..... விழும் என்று யாருக்கும் .... தெரியாததுபோல் நானும் .....!!! & என்னவளே என் கவிதை 42 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன்  ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன் நினைவோடு பறப்பதை .....................!!!

நீ தலைகுனிந்து ..... போகும் போதெல்லாம் ..... என் இதயம் வெடித்து .... போகிறது ........!!! ஒருமுறை என்னை ..... நிமிர்ந்து பார் ...... என்னை சுற்றி எத்தனை ..... பட்டாம் பூசிகள் ..... உன் நினைவோடு ...... பறப்பதை .....................!!! & என்னவளே என் கவிதை 41 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^