இடுகைகள்

உன்னை நினைத்தபடி வாழ‌....!!!

உள்ளத்தில் காதல்.....! வேண்டாம் ‍போதும்..... அவஸ்தை...... தயவு செய்து இன்னும்...... கொஞ்சம் காயப்படுத்து..... உன்னை நினைத்தபடி வாழ‌....!!!  ஒவ்வொரு இமை.... சிமிட்டலும் உன்னை.... நான் இழப்பதாகவே.... வருந்துகிறேன்... கண்சிமிட்டும் ... நேரம் வராதே....!!! காதல் என்பது.... உடல் முழுவதும்.... உள்ளமாக‌ மாறும்... இயற்கை நிகழ்வு.....!!! கஸல்;137

உடைத்தது நீ

மனம் உன் பார்வையால் உடைந்து சிதறி விட்ட்து கவலைப்படவில்லை உடைத்தது நீ காதலில் மின் சுழற்சியில் வருவதுபோல் வருகிறாய் எப்போது நிரந்தரமாக‌ வரப்போகிறாய் ...? உன் அன்பு உன்னையும்..... கடந்து என்மீது பட்டதால்.... இந்தவலி.....!!! கஸல் ;136

என் இதயத்தை பார்ப்பேன்

வயலில் புற்கலாக‌ வளர்கின்றன‍ நான் பசுவாக‌ நின்று மேய்கிறேன் கண்சிமிட்டும் நேரம் பார்த்துவந்தாய் நான் புகைப்படமாக‌ உன்னை வைத்திருக்கிறேன் இதயத்தில் கண்ணில் உன்னை இனிபார்க்க‌ துடிக்க‌ மாட்டேன் என் இதயத்தை பார்ப்பேன் கஸல் ;135

சின்ன இன்பக்காதல் வரி

பூக்கள் உன்னிடம் .... கற்று கொள்ள வேண்டும் .... மென்மையாக சிரிப்பதை .....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி ^ நெருப்பில் கருகிவிடலாம் ...... உன் சிரிப்பில் கருகுவதை விட ... அதுவொன்றும் கொடுமையில்லை....!!! ^ சின்ன வலிக்காதல் வரி ^ நீ  இதயத்தில் காதலாய் .... வந்தநாளே என் வசந்த காலம் ... ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி  ^ உன்னால் காயப்படும் கூட‌..... ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் .....  ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!! ^ சின்ன வலிக்காதல் வரி  ^ இதயம்துடிக்க‌ காற்று..... தேவையில்லைகாதல் ..... வந்தவுடன் துடிக்கும் .....!!! ^ சின்ன இன்பக்காதல் வரி  ^ நீ காதல் செய்ய முனைகிறாய் .... என்னசெய்வது உனக்கு வராது ..... காதல் இறைவனின் கொடை.....!!! ^ சின்ன வலிக்காதல் வரி  & கவிப்புயல் இனியவன்

உன் இதயம் மர்மதேசம்

உன் இதயம்.... மர்மதேசம் ...... புரியாத புதிர் -நீ ....!!! நடந்துவந்தேன் வீதியால் -உன் சிரிப்பில் தடக்கி விழுந்துவிட்டேன் ....!!! காதல் கிணற்றில் .... மூச்சு திணறுகிறேன்..... காப்பாற்றுவாய் .... என்றால் அமுக்கி ... விடுகிறாய் ......!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1035

காதல் உறவாகப்போகிறாய் .....?

காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் .......!!! நான் கண்ணால் ... காதல் கோலம் .... போடுகிறேன் -நீ கண்ணீரால் ..... அழிக்கிறாய்.....!!! உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு எப்போ ...? காதல் ....... உறவாகப்போகிறாய் .....? & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1034

வெளிச்சமாக இருக்கவா ..?

உன் காதலை .. நான் பெறுவதற்கு ... விளக்காக இருக்கவா ..? வெளிச்சமாக இருக்கவா ..? விளக்காக இருந்தால் .. ஊதி நூர்கிறாய் ... வெளிச்சமாக இருந்தால் .. ஓடி ஒழிக்கிறாய் ....!!! காதல் மனத்தால் .. கட்டும் கோயில் .. சாமி யார் ..? பூசாரியார் ..? நீதான் முடிவு சொல் ...!!! கஸல் 

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!!

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!! ---- பஞ்ச வர்ணகிளியே.... தினமும் அணியும்.... ஆடைகள் உன்னை... அப்படி அழைக்க... தூண்டுதடி ...!!! பச்சை கிளிக்கு... முன்னால் வந்து விடாதே... உன் கொவ்வை இதழை... கொத்திவிட்டு சென்று.... விடும் .....!!! என்னை பொறுத்த... மட்டில் நீ ஒருகாதல்... முத்து ....!!! ஒருதுளி மழைநீர்.... சிப்பிக்குள் முத்தாகிறது.... உன் சின்ன சிரிப்பு..... என் இதயத்தில் காதல் முத்தானாய் ...!!! & கவிப்புயல் இனியவன்

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!!

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!! ---- தயவு செய்து பேசு.... பேசாமல் இருக்கும் நொடி.... இறந்து கொண்டிருக்கிறேன்.... பேசினால் நிற்கப்போகும்.... மூச்சு துடிக்கும் .....!!! மறவர்களுக்கு காதல் நமக்கு மூச்சு தான் காதல் மறந்துவிடாதே .... உயிரே உன் நினைவால் துடிக்கிறேன்......!!! கண்ணால் செய்யும் காதலை காட்டிலும் எண்ணத்தால் செய்யும் காதல் அழகு ...!!! அருகில் இருக்கும் காதலை காட்டிலும் தொலைவில் இருக்கும் காதல் அழகு ...!!! பேசிகொண்டு இருக்கும் காதலை காட்டிலும் மௌனத்தால் செய்யும் காதல் அழகோ அழகு ..... அதற்காக காதல் ..... மௌனித்து விடக்கூடாது .....!!!

நானும் காதல் அவதாரம் தான் ....!!!

நீ கண் திறந்தபோது  எரிந்தேன் நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன் நானும் காதல்  அவதாரம் தான் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ நீ வேறு நான் வேறு இல்லை உணர்வுகளும் காதலும் வேறு இல்லை வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!! ^ கவிப்புயல் இனியவன்

கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை 02

காதலித்து உன்னை சுத்தமாக்கு.... கவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு... இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ உலகில் போதை கொடூரம்   உன் கண் போதையை விட கொடூரம் காதல் ஒரு தடுமாற்றம் .....!!! ^ கவிப்புயல் இனியவன் 

கவிதைமூன்றுவரி - இரண்டுகவிதை

இதயமாக இருப்பவளே ....... இதயத்துடிப்பு வலிக்கிறதா ...? துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!! ^ கவிப்புயல் இனியவன் ^ கல்லை செதுக்கினேன் உருவம் கண்ணால் செதுக்கினேன் காதல் இதயம் வலியால் துடிக்கிறது ....!!! ^ கவிப்புயல் இனியவன்

எனக்கு ஒரு உதவிசெய் ....

என் காதல்  இனிமையானது ... இதயம் பாலாப்பழம்போல் ... முட்களால் மூடியுள்ளது ....!!! எனக்கு ஒரு உதவிசெய் .... என்னை விட்டுவிடு ... காதலை வைத்திரு ...!!! இழந்தது  கோடி கணக்கான ... சொத்தென்றால் கலங்க ... மாட்டேன் - கோடி இன்பம்  தந்த காதலை ....!!! கே இனியவன் கஸல் 

இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!

நீ என்னை விரும்மபில்லை .... என் கவிதையையும் ... விரும்பவில்லை - நீ இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!! தூரத்தில் அழகானது .... நிலா மட்டுமல்ல .... காதலில்லாமல் இருக்கும் ... என்னவளும் தான் ....!!! கவிதை எழுதி எழுதி ... ஞானியாகிவிட்டேன்.... தன்னை மறந்த நிலைதானே ... ஞானம் .....!!! கே இனியவன் கஸல்

விரும்பி தொலைத்துவிட்டேன் ....!!!

எதையுமே விரும்பாத ... உன்னை நான் விரும்பி ... தொலைத்துவிட்டேன் ....!!! கருங்கல்லில் -நீர் ... வடியும் என்பதை ... உன் காதலில் இருந்து ... நம்பிவிட்டேன் ....!!! பெண்ணை பற்றி நான் .... கவிதை எழுதியதில்லை ... உன்னை பற்றியே கவிதை ... எழுதுகிறேன் ....!!! கே இனியவன் கஸல்