இடுகைகள்

இருட்டு தான் அழகு

-------------------------------- கடல் வழிக்கால்வாய்  -------------------------------- .........இருட்டு தான் அழகு  ....... ^^^^^^^^^^^^^^^^^ எல்லோரும் வெளிசத்தை .... பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ...... காலையில் சூரிய ஒளி அழகு .... மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு ..... அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு ..... இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!! ஆலயங்களில் தீப ஒளி அழகு .... வீடுகளில் குத்து விளக்கு அழகு ..... திரை அரங்கில் வெள்ளி திரை அழகு .... ஆளுக்காள் போட்டிபோடும் .... அலங்கார விளக்குகளும் அழகு ... செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!! வெளிசத்தில் அழகுதான் அதிகம் ..... இருளில் அழகும் அதிகம் ..... இருளில்தான் அறிவும் உதயம் ..... நாம் பிறக்கமுன் கருவறை இருள் .... விதை முளைக்கமுன் விதை இருள் ..... கருவறையில் சாமி  இடமும் இருள் .... கல்லறையும் இருள் தான் .....!!! வெளிசத்தில் தான் வேறுபாடுகள் ..... வெளிசத்தில் பார்க்கும்போதே .... குட்டை  நெட்டை வேறுபாடு ..... அழகு  அசிங்கம் வேறுபாடு .... இத்தனை ஏற்றத்தாழ்வுகள் .... இருளுக்கு எல்லாம் சமத்துவம்.....! இருளில் மனிதனும் ஒன...

சிந்திக்க ஹைக்கூ க்கள்

பறப்பதாக நினைத்து பரலோகம் போகிறான் போதைக்காரன் @@@ அரசாங்க அனுமதியோடு உடலை கருக்கும் செயல் சிகரெட் @@@ பேச்சில் ஒரு வாழ்க்கை நிஜத்தில் ஒரு வாழ்க்கை அரசியல் & கவிப்புயலின் ஹைக்கூக்கள்

இணைவது இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

யார் என்ன சொன்னாலும் பிரியமாட்டேன் என்பது நட்பு ...!!! யாருடைய ஏவலுக்கு.... பிரியக்கூடியது ..... காதல் ......!!! காதலில் பிரிந்தவர்கள் இணைந்தாலும் கசப்பு தான் ...!!! நட்பில் மட்டும் தான் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!! நட்பு என்றும் புனிதமானது புனிதர்கள் மத்தியில் ....!!!

நட்பின் காவியம் ..

சாதி பார்க்காது தகுதி பார்க்காது மொழி பார்க்காது மதம் பார்க்காது .... தோன்றுவதுதான் ... நட்பு .......!!! கண்ட நொடியில்... தோன்றுவது நட்பு..... கண்ட இடத்தில் .... தோன்றுவது நட்பு ....!!! நட்பின் காவியம் .... காலத்தால் வாழ்கிறது ....!!!

அன்பை காட்டவிலையே

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு அன்பு காட்டுகிறாய் .................?  உன்னோடு இருந்தபோது இவ்வளவு அன்பை காட்டவிலையே .......? இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது ....!!! பிரிந்து இருந்து அன்பு காட்ட வேண்டாம்! நீ அருகில் இருந்து சண்டை போடு அது போதும்!!!...

இருதய மாற்று சிகிச்சையா செய்து விட்டாய்

நீ என்ன இருதய மாற்று சிகிச்சையாசெய்து விட்டாய் ..? இத்தனைகாலம் பழகி எத்தனையோ நினைவுகளை தந்துவிட்டு .. எதுவுமே இல்லததுபோல் .. தலையை குனிந்துகொண்டோ செல்லுகிராயே நீ என்ன ? இருதய மாற்று .... சிகிச்சையா செய்து விட்டாய் ?

சொல்வதாயின் சொல்லிவிடு

நீ ஓடி விளையாடுவது என் இரத்த ஓட்டத்தில் நீ ஒழித்து என் மூட்டு எலும்புகளில் நீ வீணை வாசிப்பது என் நரம்பு தொகுதியில் நீ  நடந்து திரிவதுஎன் இதய வீதியில் நீ கூதல் காய்வது என் மூச்சு காற்றில் நீ கோபப்படுவது என் வியர்வையில் தெரியும் நீ சந்தோசப் படும் போது என் உடல் சிலுக்கும் நீ தூங்கி எழுவது இதய அறையில் நீ சொல் நான் இல்லாமல் நீ வாழமுடியுமா ..? நீ இல்லாமல் நான்தான் வாழமுடியுமா ..? செலவதாயின்சொல்லி விட்டு செய் ...!

கலங்கியிருக்க மாட்டேன்....!!!

பிரிவை விட கொடுமை ..... காதலில் மௌனம் ...... மௌனத்தை விட கொடுமை .... காதலில் சந்தேகம் ....!!! உன்னை கனவில் .... மட்டும் காதலித்திருந்தால் .... கலங்கியிருக்க மாட்டேன்.... நினைவில் மட்டும் .... காதலித்திருந்தாலும் ..... கலங்கியிருக்க மாட்டேன்....!!! உன்னை உயிராய் காற்றாய் காதலித்து ..... அவஸ்தைப்படுகிறேன் .....!!!  ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை காதலித்தேன் .... !!!

படம்
எவரோடும் வாழலாம் .... என்றிருந்திருந்தால் .... காதல் தேவையில்லை ....!!! உன்னோடு மட்டுமே .... நான் வாழவேண்டும் .... உனக்காகவே நான் .... வாழவேண்டும் ..... என்பதால்  உன்னை.... காதலித்தேன் .... !!! இப்போ .... உனக்காகவும் வாழ .... முடியவில்லை ..... எனக்காக வாழவும் .... முடியவில்லை ..........!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை வந்தது .....!!!

வாளால் வெட்டும் கொடுமையை .... காட்டிலும்  கொடுமையானது .... வாயால் கொட்டும் .... வார்த்தைகள் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் & மெல்ல மெல்ல .... கிறுக்கினேன் வரிகள் .... வந்தது - உன்னை ... காதலித்தேன் -கவிதை ... வந்தது .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வடிவில் ....!!!

மனதில் உள்ள வலியை .... வார்த்தையாய் சொல்லமுன் .... கண் முந்திக்கொள்கிறது ... கண்ணீர்  வடிவில் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நினைவு எப்போதெல்லாம்

உன் நினைவு எப்போதெல்லாம் வருகிறதோ .... அப்போதெல்லாம்.... என்னை வலிமையாக்கி ... வரிகளாக்கிவிடுவேன் ... வரிகளுக்கு தான் வேதனை புரியும் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நீயோ அக்கறையில்லாமல்

உன்னை கடவுளாக .... நினைத்து கவிதை .... எழுதுகிறேன் -நீயோ .... கடவுளை வணங்க .... கோயில் போகணும் .... என்கிறாய் ......!!! நான் கவிதை .... எழுதும்போது நீ .... அருகில் இருக்கவேண்டும் .... என்று ஆசைப்படுகிறேன் .... நீயோ அக்கறையில்லாமல் .... இருக்கிறாய் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் அதிக நிராகரிப்பு ....!!!

நாணயத்துக்கு இரு பக்கம் போல் நான் தலை , நீ  பூ.....!!! புத்தகத்துக்கு பண்பு போல் நான் எழுத்து நீ வரிகள் ...!!! இதயத்துக்கு இரு அறை நான்வ லது நீ ,இடது....!!! காதல் பிரிவுக்கு காரணம் என் அதிக எதிர்பார்ப்பு .... உன் அதிக நிராகரிப்பு ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ என்னை பிரிந்தாயோ ....?

பல சோதனைகள்... சந்தித்து பல ... வேதனையையும் .... சந்தித்தேன் .... அத்தனைக்கும் தீர்வு கண்டேன் .... நீ காதல் செய்ததால் ....!!! நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று இன்றுவரை தீர்வு காணவில்லை ...!!! எல்லோரும் வெற்றி பெற்றால் -காதலை ... யார் காதலிப்பார்கள் .... என்பதற்காக நீ .... என்னை பிரிந்தாயோ ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்