இடுகைகள்

கலங்கியிருக்க மாட்டேன்....!!!

பிரிவை விட கொடுமை ..... காதலில் மௌனம் ...... மௌனத்தை விட கொடுமை .... காதலில் சந்தேகம் ....!!! உன்னை கனவில் .... மட்டும் காதலித்திருந்தால் .... கலங்கியிருக்க மாட்டேன்.... நினைவில் மட்டும் .... காதலித்திருந்தாலும் ..... கலங்கியிருக்க மாட்டேன்....!!! உன்னை உயிராய் காற்றாய் காதலித்து ..... அவஸ்தைப்படுகிறேன் .....!!!  ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை காதலித்தேன் .... !!!

படம்
எவரோடும் வாழலாம் .... என்றிருந்திருந்தால் .... காதல் தேவையில்லை ....!!! உன்னோடு மட்டுமே .... நான் வாழவேண்டும் .... உனக்காகவே நான் .... வாழவேண்டும் ..... என்பதால்  உன்னை.... காதலித்தேன் .... !!! இப்போ .... உனக்காகவும் வாழ .... முடியவில்லை ..... எனக்காக வாழவும் .... முடியவில்லை ..........!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை வந்தது .....!!!

வாளால் வெட்டும் கொடுமையை .... காட்டிலும்  கொடுமையானது .... வாயால் கொட்டும் .... வார்த்தைகள் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன் & மெல்ல மெல்ல .... கிறுக்கினேன் வரிகள் .... வந்தது - உன்னை ... காதலித்தேன் -கவிதை ... வந்தது .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

கண்ணீர் வடிவில் ....!!!

மனதில் உள்ள வலியை .... வார்த்தையாய் சொல்லமுன் .... கண் முந்திக்கொள்கிறது ... கண்ணீர்  வடிவில் ....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நினைவு எப்போதெல்லாம்

உன் நினைவு எப்போதெல்லாம் வருகிறதோ .... அப்போதெல்லாம்.... என்னை வலிமையாக்கி ... வரிகளாக்கிவிடுவேன் ... வரிகளுக்கு தான் வேதனை புரியும் .....!!! & கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் கவிப்புயல் இனியவன்

நீயோ அக்கறையில்லாமல்

உன்னை கடவுளாக .... நினைத்து கவிதை .... எழுதுகிறேன் -நீயோ .... கடவுளை வணங்க .... கோயில் போகணும் .... என்கிறாய் ......!!! நான் கவிதை .... எழுதும்போது நீ .... அருகில் இருக்கவேண்டும் .... என்று ஆசைப்படுகிறேன் .... நீயோ அக்கறையில்லாமல் .... இருக்கிறாய் .....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் அதிக நிராகரிப்பு ....!!!

நாணயத்துக்கு இரு பக்கம் போல் நான் தலை , நீ  பூ.....!!! புத்தகத்துக்கு பண்பு போல் நான் எழுத்து நீ வரிகள் ...!!! இதயத்துக்கு இரு அறை நான்வ லது நீ ,இடது....!!! காதல் பிரிவுக்கு காரணம் என் அதிக எதிர்பார்ப்பு .... உன் அதிக நிராகரிப்பு ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ என்னை பிரிந்தாயோ ....?

பல சோதனைகள்... சந்தித்து பல ... வேதனையையும் .... சந்தித்தேன் .... அத்தனைக்கும் தீர்வு கண்டேன் .... நீ காதல் செய்ததால் ....!!! நீ ஏன் என்னை பிரிந்தாய் என்று இன்றுவரை தீர்வு காணவில்லை ...!!! எல்லோரும் வெற்றி பெற்றால் -காதலை ... யார் காதலிப்பார்கள் .... என்பதற்காக நீ .... என்னை பிரிந்தாயோ ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எதற்காக இரண்டையும் தருகிறாய் .....?

வலிகள் தோன்ற தோன்ற ..... வரிகள் கண்ணீர் விடும் ..... கண்ணீர் விட விட.... காதல் கவிதைகள் தோல்வியடையும்...!!! வரிகள் இனிக்க இனிக்க இதயம் துள்ளிக்குதிக்கும் ... காதல் கவிதைகள்..... இனிமையாகும் ...!!! கண்கள் தான் இரண்டு .... இதயம் ஒன்றுதானே .... எதற்காக இரண்டையும் .... தருகிறாய் .....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன்னை காதலிக்காமல் ....

ஒருமுறை என்னை ... காதலிப்பதாய் சொல்லு .... அதற்கு அப்புறம் உன்னை ... நான் காதலிக்க மாட்டேன் .... உன்னை காதலிக்காமல் .... என் மூசசு பிரிந்து விட ... கூடாது என்பதற்காக .... அவளிடம் கேட்டேன்....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் பிரிவு ......!!!

நீ -அன்று இல்லாத வேளை -தன் விருப்பப்படி கொல்லுகிறது என் தனிமை ....!!! நீ -இன்று இருக்கும்போதே .... உயிரோடு கொல்கிறது.... உன் பிரிவு ......!!! & என் காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்

வரிகளாக்கிவிட்டேன் இன்று ....!!!

ஆயிரம் முறை வலம்வந்தேன் .... ஆயிரம் வலிகளை.... தந்தாய் அயராமல் .... காதலித்தேன் அன்று .....!!! துன்பங்களும் ..... துயரங்களும் தூசிபோல் .... ஆக்கிவிட்டாய்... வலிகள் எல்லாவற்றையும் .... வரிகளாக்கிவிட்டேன்  இன்று ....!!! & என் காதல் நேற்றும் இன்றும் கவிப்புயல் இனியவன்

என் காதல் நேற்றும் இன்றும் ....!!!

அன்று ........!!! நீ பேசவரும் வார்த்தை சொல்லுகிறது நீ பேசாமல் இருக்கும் காரணத்தை ...!!! இன்று .....!!! நீ பேசாமல் இருக்கும் ... காரணத்தை -நீ பேசிய வார்த்தைகளே .... காரணம் .....!!! & காதல் நேற்றும்  இன்றும் கவிப்புயல் இனியவன் 

கதைக்கும் கவிதைக்கும் காதல்

படம்
 அவன் ; இனிமை ---------- அழகான அமைதியான இயற்கை அழகுகள் நிறைந்த சூழலில் வாழ்கிறான் .ஒரு புறம் கடல் . வாழ்வாதாரமாக விவசாயம் . வீட்டுக்கு முதல் மகன் . அவனுக்கு கீழ் இரண்டு தங்கை ஒரு தம்பி . அன்பான அம்மா அப்பா . உறவுக்கு சூழ்ந்துள்ள உறவுகள் . தோள் கொடுக்கும் உயிர் நண்பர்கள் . படித்த படிப்புக்கு ஒரு வேலை . வேலை நேரம் மீதியில் விவசாயம் . இப்படி இன்பமான சூழலில் வாழும் " இனிமை " வாழ்க்கையில் நடக்கப்போகும் வாழ்க்கை எண்ணங்களை பகிரப்போகிறேன் அவன் வாழும் கிராமத்தில் .அவன் நண்பனின் அக்காவின் திருமணத்துக்கு வந்தாள் .முற்றிலும் நகரப்புறத்தில் பிறந்து  வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் "வின்னியா " என்ற அழகு தேவதை . அவள் வாழும் இடம் தான் நகரம் .ஆனால் வாழ்க்கை முறையில் கிராமிய காற்றும் அடிக்க தான் செய்கிறது . இந்த இரட்டை வாடை அடிக்கும் இவளுக்கும் .கிராமிய வாடை கொண்ட இவனுக்கும் எப்படி காதல் வந்தது . என்ன நடைபெறப்போகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம் . இது தொடர் பதிவுதான் என்றாலும் .ஒவ்வொரு பதிவும் முற்று பெறும் . அவள் ;வின்னியா --------- மெல்லியதாய் பூசிய ...... உதட்ட...

நீ வரும்போது நான் மலர்கிறேன் ...!!!

உனக்கென்ன -நீ கண் சிமிட்டி விட்டு ..... சென்று விட்டாய் ....!!! என் இதயம் .... இறந்து பிறந்து .... துடிக்கும் வேதனையை .... எப்படி அறிவாய் .....? & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே நீ தாவணியில் வரும் போது -தாவும் என் மனம் சேலையில் வரும் போது செத்தே போகிறேன்....!!! அதிகாலை சூரியன் வரும் போது பூக்கள் மலர்வதுபோல் நீ வரும்போது நான் மலர்கிறேன் ...!!! & கவிப்புயல் இனியவன்  தேனிலும் இனியது காதலே