நீ புரிந்து கொள் .... பிரிந்து செல் .... இரண்டும் .... கலந்த கலவை .... காதலுக்கு ..... விஷம் .....!!! நீ என்னை புரியும் .... வரை நான் உனக்கு .... பொய்யாகவே .... இருக்கும் .... புரிந்தபின் இழந்த .... காலத்தை நினைத்து .... கண்ணீர் விடுவாய் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்
உனக்கு தெரியாது உன் மௌனத்தின் வலி உனக்கு காதல் உணா்த்தும்வரை....!!! சில வேளை நீ காதலித்தால் என்று முதல் உணர்த்துவேன் மௌனத்தின் வலியை துடித்தே இறந்துவிடுவாய்...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்
குடிசை வீட்டுக்குள் பிரகாச ஒளி . கட்டணமில்லாமல் கிடைகிறது . நிலவொளி *********** பிறந்த உடனேயே எச்சில் இலை பொறுக்கிறது தொட்டி குழந்தை *********** கோயில் தீர்த்த குளம் மாமிசம் உண்டவர்கள் இறங்க தடை குளத்துக்குள் மீன் *********** & ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்
ஈரமான நாக்கில் எரிகிறது ... காதல் வார்த்தை .....!!! காதல் ஒரு பயிரிடல் பருவம் ... அறுவடை ... திருமணம் ....!!! உன் மனதில் ... வில்லனாக நான் ... தூக்கி எறிந்து விடாதே ... வலியை நீயும் .... சுமக்க வேண்டும் ...!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1023
தென்றல் காற்றாய் .... வீசிய நீ எதற்காய் கண்ணில்... தூசியை கொட்டினாய் ...? காட்டாறு வெள்ளம் -நீ கொஞ்சம் இரக்கப்படு.... சிறு படகாக உன்னில் .... மிதக்கிறேன் ....!!! எனக்கு நீ மட்டுமே ... உனக்கு நான் ...? நான் மட்டுமா ....? ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1022
காதல் கடல் போன்றது .... உண்மைதான் ... கண்ணீர் உவர்க்கிறது ....!!! நீ பேசிய நாள் ... பௌணமி ... பேசிய வார்த்தை ... அமாவாசை .....!!! காதல் ... திருமண அழைப்பிதல் ... வரும் வரை தான் .... இன்பம் .....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1020
நெருப்பாக நீ இரு .... நீராக நான் வந்து .... அணைக்கிறேன் ... காதல் .... கருகிப்போகட்டும் ......!!! என் புருவத்தில் .... ஊஞ்சல் ஆடியவலே .... இப்போ கண்ணில் ... இருந்து........ வெளியேறுகிறாள் ....!!! உச்ச கட்ட காதல் .... காட்சி முடிவுக்கு .... வந்தது ..... காட்சியை பார்ப்பவர் .... கண்களில் கண்ணீருடன் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை கவிப்புயல் இனியவன் 1019
விடிய விடிய காதல் கதை பேசினாலும் காலையில் என்னை எழுப்புவது என்னவோ உன் கைப்பேசி அழைப்பு....!!! இரவு இரவாய் ..... எழுதிய கவிதைகள் அனைத்தும் .... விற்பனைக்கு அல்ல.. உன் இதயத்தை .... காதல் பூவனமாக்க ....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை 04
நீ ..... தந்த வலியால்... உடல் முழுவதும் ... மறுத்து விட்டது ... இதயம் கொஞ்சம் ஈரமாக .. உள்ளது நீ என்னை .. புரிந்து கொள்வாய் .... விரும்பிகொள்வாய் ...!!! உன் மெளனத்தை கலைத்து வெகு தூரம் சென்று.... திரும்பிப் பார்..... உன் நினைவுகளால் .... நெருப்பாய் நான் .. எரிந்துகொண்டிருப்பதை ....!!! + இதயம் வலிக்கும் கவிதை கவிப்புயல் இனியவன்