இடுகைகள்

ஒரு நிமிட உலகம்

மரணத்தில் ஏன் அழுகிறாய்....? ----- குழந்தை பிறந்தது .... பேர் சூட்டும் விழா .... உறவினர் வந்தனர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! ஆண்டு .... ஒன்று நிறைவு .... பிறந்தநாள் வைபவம் .... கேக் வெட்டினர் .... பாட்டு பாடினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! திருமண அழைப்பு .... உறவுகள் குவிந்தன .... ஆசீர் வாதம் வழங்கினர் .... கூடி சாப்பிட்டனர் .... குதூகளித்தனர் .... கலைந்தனர் ....!!! மரண அறிவிப்பு .... உறவுகள் கூடினர் .... ஒப்பாரி வைத்தனர் ... ஓலமிட்டனர் .... சோகத்தில் நின்றனர் ....!!! எல்லா நிகழ்விலும் .... சிரித்த மனிதன் ... மரணத்தில் மட்டும் .... அழுவதேன் .....??? அடுத்து தனது மரணம் ... பயத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலமும் ... உதவிய ஓருவன் இறந்துவிட்டானே .... ஏக்கத்தால் அழுகின்றானா ....? இத்தனை காலம் அத்துணை .... இன்பத்தை தந்தவன் .... இறந்துவிட்டானே -என்ற ... வருத்தத்தால் அழுகின்றானா ....? மொத்தத்தில் மரணத்தில் அழுகை ... சுயநலத்தின் ஒன்றாய் தான் இருக்கவேண்டும் ...... பிறப்ப...

கவிதையாய் வருகிறாய் ...!!!

மோகத்தால் ... வரும் சோகத்தை .... விட்டில் பூச்சியிடம் ... கற்று கொண்டேன்....!!! என் இதயம் ... எப்போதெல்லாம் .... கலங்குகிறதோ.... அப்போதெலாம் .... கவிதையாய் வருகிறாய் ...!!! என் ஒவ்வொரு வலியும்.... உனக்கு எழுதும் .... காதல் கவிதை ....!!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 999

மறந்துபோய் நினைத்துவிட்டேன் ....!!!

இன்னும் காதலை -தா என்று கேட்கவில்லை ... வலியை தா இன்னும் ... உன்னை ஆழமாய் ... காதல் செய்ய ...!!! மறந்துபோய் .... நினைத்துவிட்டேன் .... உன்னை மறந்துவிடு ... என்று நீ சொல்லியதையும் ... மறந்து ....!!! உனக்கும் எனக்கும் .... நிறைய ஒற்றுமை .... காதல் தான் நமக்குள் ... வேறுபாடு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 998

உன் வலி இருக்கும் ...!!!

காதல் கண்ணாடியை .... உடைத்துவிட்டாய் ... உடைந்த துண்டுகளில் ... உன் முகம் ....!!! நான் உன்ன ஞாபகம் ... அதுதான் அடிக்கடி ... என்னை மறக்கிறாய் ...!!! தேன் வேண்டுமென்றால் .... தேனியிடம் வலியை.... பெற வேண்டும் ... காதல் வேண்டுமென்றால் ... உன் வலி இருக்கும் ...!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 997

என் நினைவுகள் உனக்கு ....!!!

நம் காதல் அழகு ... நிலா போல் தூரத்தில் .... இருந்து பார்க்கும்போது ....!!! குருவி தன் குஞ்சை .... பொத்தி பொத்தி .... வளர்த்தாலும் -ஒருநாள் .... உன்னைப்போல் விட்டு .... பறக்கத்தான் போகிறது....!!! காதலில் நீ காண்டாவன வெயில் .... இடை இடையே ... சிறு மழை போல் .... என் நினைவுகள் உனக்கு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 996

எனக்குள் காதல் மழை 15

நான் ஓடும்போது நெஞ்சை ... பொத்தி ஓடுகிறேன் .... மற்றவர்களுக்கு ...... வேண்டுமென்றால் .... சட்டை பையில் இருக்கும் .... பணம் விழாமல் இருக்க ... என்று ஜோசிக்கட்டும் ....!!! நீ அப்படி நினைத்துவிடாதே ... உனக்கு தெரியும் நெஞ்சில் ... இருப்பது நீ ....!!! ^ எனக்குள் காதல் மழை 15 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 14

உனக்கும் எனக்கும் ... எத்தனை வேறுபாடுகள் .... அழகால் அறிவால் பணத்தால் ... ஒரே ஒரு ஒற்றுமை .... உன்னிடமும் என்னிடமும் ... காதல் கொண்ட இதயம் ... இருக்கிறது ......!!! ^ எனக்குள் காதல் மழை 14 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 13

ஒருவரை ஒருவர் .... தெரியாமல் முட்டி .... மன்னிப்பு கேட்டு .... அதை மனதுக்குள் ... சுமந்துகொண்டு ... காதல் நினைவோடு ... வாழ்வதெல்லாம் .... சினிமாவில் தான் .... நடக்கும் ......!!! என்ன அதிசயம் .... நமக்கும் நடக்கிறதே ....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 13 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 12

உன் கண்கள் ... தானியக்கி நானே .... தொலைக்காட்சி-நீ அசைகின்றபோதேலாம் அசைகிறேன்....!!! ^ எனக்குள் காதல் மழை தூறல் 12 கவிப்புயல் இனியவன்

எனக்குள் காதல் மழை 11

கிளியிடம் கொத்தும் பயிற்சி .... எடுக்கப்போகிறேன் ... உன்னை எப்படி ... கொத்திக்கொண்டு ... செல்லலாம் ...? என்பதை அறிந்து கொள்ள....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 11 கவிப்புயல் இனியவன்

இனிய புத்தாண்டே வருக....!

படம்
இனிய புத்தாண்டே இதயங்களில் இனிய இதமான சிந்தனையை இன்பமாய் வழங்கிவிடு...! இல்லறத்தில் எல்லோரும் இன்பமாய் வாழ்ந்திடவும்... இமைப்பொழுதும்... இறைவனை நினைத்திடவும்.. இனிய புத்தாண்டே வருக....! இல்லாமையை நீக்கி... இறுமாப்புக்களையகற்றி... இழிவான செயல்களை அகற்ற... இனிய புத்தாண்டே வருக...! இயற்கையை பாதுகாப்போம்... இறைவனை துதிப்போம்.... இன்பமாய் வாழ்ந்திடுவோம்... இளமையோடு வாழ்ந்திடுவோம்...! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இனிதே வாழ்ந்திடுவோம்... இனியவனின்..... இன்பமான.... இதயமான வாழ்த்துக்கள்....!!!

காதலில் விழுந்து விட்டேன் ...!!!

காதலை ... உதட்டளவில் சொல்லி ... இதயத்தை காயப்படுத்தும் .... காதலில் விழுந்து விட்டேன் ...!!! இன்னும் ... காதல் சிறையில் நான் ... இன்றே அவளும் ... மாற வேண்டும் ..... அன்றேல் என் இதயம் ... மாறவேண்டும் .... அவள் நினைவுகள் ... முள்ளாய் குத்தினாலும் ... சுகமாய் தான் இருகிறது ...!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03 கே இனியவன்

காதல் வலியை தந்தது ....!!!

காதலை .... வழியை நானே .... வலியத்தேடி.... காதலோடு வாழ்ந்தேன் .... காதல் வலியை .... தந்தது ....!!! வலியோடு ... வாழ்ந்தாலும் ... காதலோடு வாழ்கிறேன் ... நினைவுகள் கள்ளி முள்ளாய் குத்தினாலும் .... காதல் இனித்து கொண்டே .... எப்போது இருகிறது ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02 கே இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

படம்
நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன் 

எழாமல் இருப்பதே தவறு

விழுவது ஒன்றும் .... தோல்வியல்ல ... எல்லாமே விழுந்து ... ஆகவேண்டும் ....!!! விழுந்து எழாமல் ... இருப்பதே தவறு ..... அப்படியும் விழுந்தால் ... காய்ந்து விழும் ... சருகுபோல் இருக்கணும் .... விழுந்தாலும் பிறருக்கு ... உதவுவதுபோல் ...!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன்