இடுகைகள்

எனக்குள் காதல் மழை 11

கிளியிடம் கொத்தும் பயிற்சி .... எடுக்கப்போகிறேன் ... உன்னை எப்படி ... கொத்திக்கொண்டு ... செல்லலாம் ...? என்பதை அறிந்து கொள்ள....? ^ எனக்குள் காதல் மழை தூறல் 11 கவிப்புயல் இனியவன்

இனிய புத்தாண்டே வருக....!

படம்
இனிய புத்தாண்டே இதயங்களில் இனிய இதமான சிந்தனையை இன்பமாய் வழங்கிவிடு...! இல்லறத்தில் எல்லோரும் இன்பமாய் வாழ்ந்திடவும்... இமைப்பொழுதும்... இறைவனை நினைத்திடவும்.. இனிய புத்தாண்டே வருக....! இல்லாமையை நீக்கி... இறுமாப்புக்களையகற்றி... இழிவான செயல்களை அகற்ற... இனிய புத்தாண்டே வருக...! இயற்கையை பாதுகாப்போம்... இறைவனை துதிப்போம்.... இன்பமாய் வாழ்ந்திடுவோம்... இளமையோடு வாழ்ந்திடுவோம்...! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இனிதே வாழ்ந்திடுவோம்... இனியவனின்..... இன்பமான.... இதயமான வாழ்த்துக்கள்....!!!

காதலில் விழுந்து விட்டேன் ...!!!

காதலை ... உதட்டளவில் சொல்லி ... இதயத்தை காயப்படுத்தும் .... காதலில் விழுந்து விட்டேன் ...!!! இன்னும் ... காதல் சிறையில் நான் ... இன்றே அவளும் ... மாற வேண்டும் ..... அன்றேல் என் இதயம் ... மாறவேண்டும் .... அவள் நினைவுகள் ... முள்ளாய் குத்தினாலும் ... சுகமாய் தான் இருகிறது ...!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 03 கே இனியவன்

காதல் வலியை தந்தது ....!!!

காதலை .... வழியை நானே .... வலியத்தேடி.... காதலோடு வாழ்ந்தேன் .... காதல் வலியை .... தந்தது ....!!! வலியோடு ... வாழ்ந்தாலும் ... காதலோடு வாழ்கிறேன் ... நினைவுகள் கள்ளி முள்ளாய் குத்தினாலும் .... காதல் இனித்து கொண்டே .... எப்போது இருகிறது ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி 02 கே இனியவன்

நெஞ்சுக்குள் கள்ளிச்செடி

படம்
நினைவுகள் எல்லாம் .... இனிமையில்லை ....! அழகான ரோஜாக்கு கீழ் ... ஆபத்தான முள் ....! முள்ளை கவனிப்பாய் .... யாருமில்லை ரோஜா .... அழகாக இருப்பதால் .....! நெஞ்சுக்குள் ..... கள்ளிச்செடியை வைத்து .... முகத்தில் ரோஜாவுடன் ..... வாழும் காதலர்களே .... அதிகமாக இருக்கிறார்கள் ....!!! ^ நெஞ்சுக்குள் கள்ளிச்செடி கே இனியவன் 

எழாமல் இருப்பதே தவறு

விழுவது ஒன்றும் .... தோல்வியல்ல ... எல்லாமே விழுந்து ... ஆகவேண்டும் ....!!! விழுந்து எழாமல் ... இருப்பதே தவறு ..... அப்படியும் விழுந்தால் ... காய்ந்து விழும் ... சருகுபோல் இருக்கணும் .... விழுந்தாலும் பிறருக்கு ... உதவுவதுபோல் ...!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன் 

எழுந்திரு போராடு வெற்றி

வெற்றி.... மன திருப்தியை .... கொடுக்கும் ... தோல்வி .... மன உறுதியை ... கொடுக்கும் .....!!! தோல்வியென்னும் ... அக்கினிக்குள் வெந்து .... வெற்றியென்னும் ... அன்னத்தை உண் ....!!! ^ எழுந்திரு போராடு வெற்றி கே இனியவன்

போராட்ட பெண்ணியம்

போராட்ட பெண்ணியம் ___ அடங்கியிருந்தது போதும் பெண்ணே .... குட்ட குட்ட குனிவது குற்றம் ... எத்தனை நாள் தான் .... குனிவாய்....? உனக்கு இல்லாத உரிமையை .... கேட்கவில்லையே .... உன் உரிமையை பறிக்கும் .... மேலாதிக்கத்திடம் தானே .... போராடுகிறாய் ....!!! போராடு போராடு ... உரிமை கிடைக்கும்வரை ... போராடு ....!!! ^^^ போராட்ட பெண்ணியம் கவி நாட்டியரசர் கே இனியவன

மிதவாதப் பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் --------- இந்த உலகம் ஒரு ... சக்தியால் இயங்குவதுபோல் .... ஒவ்வொருவனின் இயக்ககும் ... ஒரு பெண்ணினால் தான் .... இயங்குகிறது .....!!! பெண்மைக்கு யாரும் .... உரிமை கொடுக்கத்தேவையில்லை.... யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ... அவர்களுக்கு எல்லா உரிமையும் ... இருக்கிறது என்பதை ஏற்றால் .... பெண்ணியம் வாழ்ந்துகொண்டே .... இருக்கும் .....!!! ^^^ மிதவாதப் பெண்ணியம் கவி நாட்டியரசர் கே இனியவன 

ஏங்குகிறேன் ...!!!

உன்னோடு .... வாழவேண்டும் என்றுதான் .... காதல் செய்தேன் .... உன் மௌனம் என்னை .... கொல்கிறது....!!! உன்னோடு வாழவேண்டும் ... என்பதெல்லாம் கலைந்து.... உன்னோடு பேசினால் .. போதும் என்று ஏங்குகிறேன் ...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

செத்து துடிக்கிறது இதயம் ....!!!

நிஜமான வாழ்க்கை.... கிடைக்கவில்லை .... கற்பனையில் என்றாலும் .... வாழவிடு ....!!! வாழ்ந்தால் உன்னோடுதான் ... வாழ்வேன் அடம்பிடிகிறது ... மனசு .......!!! மடிந்தால் .... உன் நினைவோடு மடிவேன் .... செத்து துடிக்கிறது .... இதயம் ....!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

ஆறுதல் சொல்லிவிட்டு போவாயா ....?

நீ என்னை விட்டு பிரிந்து ... பலகாலங்கள் ஆகிவிட்டது ... பலமுறை என் இதயத்துக்கு ... சொல்லிவிட்டேன் .... நம்பமாட்டேன் என்கிறது ... என் இதயம் .....!!! ஒருமுறை ... நீ என் இதயத்தில் இருந்த .... இடத்துக்கு வந்து ஆறுதல் .... சொல்லிவிட்டு போவாயா ....? ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வரிகளுக்கு வலியாகிவிடும்...!!!

நீ தரும் வலிகளை... உன் முகத்துக்கு ... சொல்ல முடியவில்லை .... முடிந்தால் என் வரிகளை .... பார் வலிகள் தெரியும் ...!!! என்.... வரிகளை .... வெறும் வரிகளாக .... பார்க்காதே அந்த ... வரிகளுக்கு ...... வலியாகிவிடும்...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

எனக்கு சுகமாக இருக்கிறது .

இரவே ... விரைவாக வந்துவிடு ... உன்னில் இருந்து .... அழுவதே எனக்கு .... சுகமாக இருக்கிறது ....!!! மழையே ... விரைவாக பொழிந்துவிடு .... உன்னோடு சேர்ந்து .... அழுவதே எனக்கு ..... பாதுகாப்பாக இருக்கிறது ...!!! ^^^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

என் இதயம் இறந்து விட்டது

நான் உன்னை ஏமாற்றினால் ... என்ன செய்வாய் ... என்று விளையாட்டுக்கு .... கேட்டபோதே .... என் இதயம் இறந்து விட்டது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை