இடுகைகள்

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

தெருவின் உடல் குளிர்மையானது தாகத்தோடு காத்திருகிறது குடம் குடிநீர் வண்டி @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 15 @ வாழ்க்கை நெளிவும் சுழிவும் ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது நதிகள் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 16 @ சாதிகள் வேறுபட்டவை  கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள்  பூமாலை  @ கவிப்புயல் இனியவன்  ஹைகூக்கள் 17

அதிசயக்குழந்தை - முதுமை

அதிசயக்குழந்தை - முதுமை ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்................................................. அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா நிறுத்துங்க...  நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்...

நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி  துடிக்க துடிக்க .... மீன் ஒன்றை பிடித்தேன் .... இரண்டு உயிரை கொன்று ... அன்று இன்பமடைந்தேன் ..... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! புல்வெளிக்கு விளையாட சென்றேன்..... வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ... மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே ..... ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு .... படபடத்தது கலைத்து களைத்து .... போராட்டத்தின் மத்தியில் பிடி...

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

வெற்றியை  காட்டும் இருவிரல்கள் தலை குனியும் மற்றைய விரல்கள் விரல் நடுவில் சிகரட் $$$ நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு கலக்கத்தோடு இருக்கும் மரம் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 13

ஹைகூக்கள்

வானத்தில் கருமேக கூட்டம் வெறுப்போடு பார்கிறார் நடைபாதை வியாபாரி @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 11

மூன்றுவரி கவிதைகள் 

ஞாபங்கள் புற்றாய் வளரும் ..... கற்பனைகள் பட்டமாய் பறக்கும்  ... கவிதை அருவியாய் பாயும் -காதல் ...!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### நான்  உன்னை நேசித்தேன் .... நீ என்னை நேசித்திருந்தால் .... ஒருதுளி கண்ணீர் வந்திருக்கும் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன் #### பேசாமல் இருந்தபோது இன்பமானாய் .... பேசி பிரிந்த போது துன்பம் தந்தாய் .... இருநிலையிலும் கவிஞனானேன் ....!!! + மூன்றுவரி கவிதைகள் கவிப்புயல் இனியவன்

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம்

தினமும் இதனை பாடுங்கள் அனுகூலம் நிச்சயம் ------------------------------------------------------------------------ வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் ...............மிகநல்ல வீணை தடவி ...................... மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் ...............உளமே புகுந்த அதனால் .................... ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி ...............சனிபாம்பி ரண்டும் உடனே .............. ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல .............அடியா ரவர்க்கு மிகவே .................... அனைத்து கிரக தோஷங்களும் நிச்சயம் நீங்கும் எல்லா கிரகங்களும் எப்போதும் நன்மையே புரியும் நம்புங்கள் நல்லதே நடக்கும் 

காதல் செவ்வந்தியே

காதல் செவ்வந்தியே ....!!! ----- செவ்வந்திபோல் ... செவ்வாயை கொண்டவளே .... கருங்கூந்தலின் வாசனைக்கு ... நிகராகுமோ செவ்வந்தி ...? கொத்து கொத்தாய் ... பூக்கும் செவ்வந்தியே .... என்னவளை கொத்தி .... கொண்டு சென்று விடாதே ...!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 04

காதல் அள்ளியே

காதல் அள்ளியே ----- ஆருயிர் அழகு அள்ளியே .... உன்னை கிள்ளி .... காதல் கள்ளியிடம் ... கொடுக்க என் மனம் துள்ளி குதிக்குதடி ....!!! அள்ளியே .... உன்னை அள்ளி வந்து ... என் இதய கள்ளியிடம் ... கொடுக்கபோகிறேன்... அவள் என்னை கிள்ளி ... நகைக்கும் அழகை பார் ...!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 04

தாங்கி கொள்ளவே முடியாது ....!!!

என்னை அவமானபடுத்து .... பரவாயில்லை ....!!! நீ அவமானபட்டுடாதே ... அந்த அவமானத்தை ... நிச்சயம் என்னால் .... தாங்கி கொள்ளவே ... முடியாது ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -57 கவிப்புயல் இனியவன்

எனக்கு கிடைத்த பரிசு

உன்னை உண்மையாக காதலித்த ... எனக்கு கிடைத்த மிக ... உன் வலிகளையும்.... சேர்த்து சுமப்பதே ....!!! காதல் தோன்றும் போது சுகம்  ... துவண்டு விழும் போதுதான் .... பாரிய சுமை ......!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -56 கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள்

நீ என்னை நினைத்து .... கொண்டிருகிறாய் ..... என் இதயம் சிரித்து .... கொண்டிருக்கிறது ....!!! நேரில் பார்க்க ... உனக்கு முடியவில்லை ... என்னை நினைவில் .... வரவழைத்துவிடு .... நிச்சயம் உன்னை பார்ப்பேன் காதலால் .... நிச்சயம் முடியும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -55 கவிப்புயல் இனியவன்

உன்னதத்தை உணர்வேன் ...!!!

கடந்தகால .... வலிகளை மறக்கவே .... உன்னை விரும்பினேன் ... மீண்டும் பழைய  வழியை .... காட்டி விடாதே ....!!! அன்பே .... ஒருநாளைக்கு ஒருமுறை .... ஒரே ஒருமுறை என்னோடு .... பேசிவிடு அன்று நான் .... உயிரோடு இருப்பதன் ... உன்னதத்தை உணர்வேன் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் -54 கவிப்புயல் இனியவன்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

மகளீர் நிகழ்ச்சி படபிடிப்பு   மகளீருக்கு மட்டும் அனுமதி  தொலைகாட்சியில் ஒளிபரப்பு ^ சிந்தித்து  சிரிக்க சென்ரியூ 01 கவிப்புயல் இனியவன்  ^^^ சுவாமி தரிசனம்  நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர்  ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ 02 கவிப்புயல் இனியவன்  ^^^ காதலர் மனமுறிவு மணிக்கணக்கில் வாக்குவாதம்  தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி  ^ சிந்தித்து சிரிக்க சென்ரியூ 03 கவிப்புயல் இனியவன்

காதல் மல்லிகையே ....!!!

காதல் மல்லிகையே ....!!! --- உன்னை பற்றிய.... எண்ணங்கள் எப்போதும் ... மல்லிகையின் மணம்.....! நினைக்கும் போதெல்லாம் .... நறுமணமாய் இருகிறாய் ....!!! உன்னையே நீ உன் கூந்தலில் சூடுகிறாய்.... உன் கூந்தலாய் மாற ... துடிக்கிறது இதயம் ....!!! ^ பூக்களால் காதல் செய்கிறேன் கவிப்புயல் இனியவன் 03