இடுகைகள்

காயப்படுத்தவும் மாட்டேன்

தண்ணீருக்கும் நனைக்குத்தெரியும்... கண்ணீருக்கும் .... நனைக்குத்தெரியும்... காரணங்கள் ஒன்றல்ல ...!!! தீக்கும் எரிக்கதெரியும்.... சூரியனுக்கும் எரிக்கதெரியும்.. ஆறுதல் செய்ய தெரியாது .... கவலை படாதே உன்னை .... காயப்படுத்தவும் மாட்டேன்....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

கலங்காத கண்கள் ..

பிரியாத நினைவு.... கலையாத கனவு .... வலிக்காத வலிகள் ... கலங்காத கண்கள் ....!!! தீராத காதல்.... அழியாத அன்பு.... விலகாத  நட்பு.... உயிரான பண்பு.... எல்லாம் உன்னின் ... காண வேண்டும் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

அதிகாலை எழுந்து .... அம்மணமான உடையுடன் .... அம்மாவின் கையை பிடித்தபடி ..... வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,, எல்லாம் சுற்றி திரிந்து .... அக்கா அண்ணா பள்ளி செல்லும் .... போது நானும் போகணும்.... என்று கத்தியழுத அந்த காலம் .... வாழ்வின் " தங்க காலம்  "......!!! பச்சைஅரிசிசோறு வேகும்போது .... அவிந்தது பாதி அவியாதது பாதி .... கஞ்சிக்கு கத்தும் போது .... பொறடாவாரேன் என்று சின்ன .... அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர .... பாதி வாய்க்குள்ளும் மீதி ... வயிற்றில் ஊற்றியும் குடித்த .... அந்த காலம் .... வாழ்வின் " பொற்காலம்  "......!!! பாடசாலையில் சேர்ந்தபோது ..... புத்தகத்தையும் என்னையும் ... தூக்கிகொண்டு சென்ற அம்மா .... சேலையின் தலைப்பை என் தலை .... மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ... வேக வேக வீட்டுக்கு வந்து .... உணவும் ஊட்டிய தாயின் பாசம் .... அந்த காலம் .... வாழ்வின் " வைரம் தந்தகாலம்  "......!!! போட்டி பரீட்சையில் என்னோடு ... கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ... நண்பர்களின் உறுதுணையுடன் .... போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து .... பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி...

அதிசயக்குழந்தை - எண்ணம்

அதிசயக்குழந்தை - எண்ணம் ------------ எண்ணும் எழுத்தும் .... கண்ணெனத்தகும் ....!!! அதிசய குழந்தை  வாய்க்குள் உச்சரித்து ... கொண்டிருந்தான் ...!!! என்னடா  புது பழமொழியோ ...? இல்லை ஆசானே .... எதுவுமே புதியது இல்லை .... எல்லாமே முன்னோர் சொன்ன .... பொதுமை மொழிகள் .... அதிலிருந்தே இனிமேல் ... எல்லோரும் எடுக்க வேண்டும் .... இது எனது இது நான் சொன்னது .... என்று யாரும் உரிமை .... கொண்டாடுவதில் பயனில்லை ...!!! எண்ணமே ஒருவனின் உருவம் .... எண்ணமே ஒருவனின் வாழ்க்கை.... எண்ணமே ஒருவனின்முடிவும் .... அடுத்து சொன்னான் குழந்தை ...... சொர்க்கமும் நகரமும் .... ஒருவனுடைய எண்ணமே ..... துயில் எழும்பும் போது .... நல்ல சிந்தனையுடன் எழுபவன் .... அன்று முழுதும் சொர்க்கத்தில் .... வாழ்கிறான் ......!!! நேற்றைய பகையை ... முன்னைய இழப்பை .... பொறாமையை துயில் .... எழும்போது நினைப்பவன் அன்று முழுதும் நரகத்தில் .... வாழ்கிறான் ......!!! குப்பத்தில் இருப்பவனை ... கோபுரத்துக்கும் ,கோபுரத்தில் ... இருப்பவனை குப்பத்துக்கும் .... மாற்றுவது தலையெழுத்தல்ல .... அவரவர் எண்ணமே எண்ணமே....!!! ^ அதிசயக்குழந்தை  வசனக...

மின் மினிக் கவிதைகள்

உயிரே .... நீ என்னோடு பேசு .... இல்லை பேசாமல் இரு ... காதலோடு இரு .... அன்பே பேசாவிட்டாலும் .... என் இதயத்தில் இரு ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் கவிப்புயல் இனியவன்

என்னவளின் காதல் டயரி 16

உன் ..... இதயத்தில் பெரிய .... காயத்தை ஏற்படுத்தி விட்டேன் .... எப்படி தாங்குவாய் இதயனே,,,,? காலம் எம்மை பிரிகிறது .... காதல் எம்மை கொல்கிறது.... எனக்கு ஒரே ஆசை .... இந்த டயரி எழுதி முடியும் ... நாளில் நானும் ..........? இதயனே -நீ அடிக்கடி பாடும் பாடல் ... " உன்னை நான் பிரிந்தால் .... உனக்கு உன் இறப்பேன் ".... * * * வலிக்குதடா அந்த வரிகள்....!!! ^ என்னவளின் காதல் டயரி என்னவளின் பக்கம்- 16 கவிப்புயல் இனியவன்

நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் 04

ஆதவனுக்கு இரண்டு அண்ணன் இரண்டு அக்கா ஒரு ... தங்கை .......!!! எல்லோருக்கும் சின்ன ... வயது படிக்கும் வயது ..... கூலிக்கு போக முடியாத ..... சின்ன வயது என்றாலும் .... அருகில் உள்ள காட்டுக்கு .... சென்று சுண்டம் கத்தரி .... பறித்து சந்தையில் விற்று .... அதில் வரும் காசில் அரிசி .... அன்றைய வயிற்றை ... நிரப்பும் ....!!! ஆதவனின் நோய் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது - தந்தை சாமி ... ஆதவனுடன் போராடும் சக்தியை.... இழந்து போராடுகிறார் .....!!! அதிர்ச்சி தகவல் ஒன்றை .... சாமியிடம் சொன்னார் டாக்டர் .....!!! ^^^ தொடரும் இவன் போராட்டம் ^^^ வாருங்கள் இவனின் வாழ்கையை கேட்போம் .... ^^^ நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கிறேன் வசனக்கவிதை 04 ^^^ கவிப்புயல் இனியவன்

கனவாய் கலைந்து போன காதல் 06

பூவழகன் ..... திகைத்து நின்றான் .... தானோ அன்றாடம் சாப்பாடுக்கு .... திண்டாடும் வறுமை இளவரசன் .... அவளோ காரில் வரும் வசதி ... கொண்ட பண  இளவரசி ..... இது நமக்கு சரிவராது ..... ஒதுங்கினான் - பூவழகன்....!!! வகுப்பறைக்கு வந்தாள் இளவரசி ..... எல்லோரும் அவளை சூழ்ந்தனர் ...... தங்கள் பெயரை சொல்லி அறிமுகம் .... எல்லோருக்கும் கை கொடுத்து .... பழகும் திறந்த மனம் - பரந்த மனசு .... பூவழகனோ ஆவலுடன் இருந்தும் .... பேசவில்லை ....!!! பூவழகன் இதயமோ அவள் .... மீது சுற்றி திரிய - கூச்சமும் .... பொறாமையும் மனம் முழுதும் ... ஏக்கத்துடன் காத்திருக்க இருக்க .... நாளும் முடிவுக்கு நெருங்குகிறது ...!!! எப்போது என்னோடு பேசுவாள் ...? என்ன பேசப்போகிறாள் ....? பூவழகனின் தவறான ஏக்கம் .... புதிய மாணவியுடன் ... பூவழகன் தான் பேசவேண்டும் .... தெரிந்தும் அவள் பேசட்டும் முதலில் ... என்று ஆணழகன் என்ற நினைப்பில் ... காத்திருந்தான் பூவழகன் ......!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் 06 வசனக்கவிதை....!!! ^^^ கவிப்பு...

கனவாய் கலைந்து போன காதல் 05

காலை நேரம் .... பட்டாம் பூச்சிகளும் ... வண்டுகளும் அலையாய் ... வருவதுபோல் பெண் .... பிள்ளைகளும் ஆண் ..... வந்தவண்ணமே .... பாடசாலையில் ....!!! கனவோடு காத்திருக்கும் ... இரவு முழுதும் தூக்கத்தை ... கெடுத்த அந்த பட்டாம் பூச்சி .... சில மணித்தியாலத்தில் .... வந்து விடுவாள் .....!!! காதல் இது தான் ..... முகம் தெரியாது .... பெயர் தெரியாது .... குணம் தெரியாது .... ஆனால் அவளை .... பார்க்கவேண்டும் ... என்று மனம் துடிக்கும் ....! காத்திருந்த அந்த நேரம் ... வந்தது காரில் இருந்து .... இறங்கினால் பூவரசனின் .... கனவு தேவதை ....!!! ^^^ தொடர்ந்து வருவான் ... இவன் கதை கூட உங்கள் ... கதையாக இருக்கலாம் .... கனவாய் கலைந்து போன காதல் வசனக்கவிதை....!!! ^^^ கவிப்புயல் இனியவன்

காதல் வலி

காதல் வலி ********************** சந்திக்கும் நேரம் சறுக்கினால் சண்டை சற்று நேரம் ஊமையாகி என்னை உறையவைப்பாய் முள் வினாடி கம்பி கடிகாரத்தில் ஓடுவதுபோல் உனக்கும் விளங்கும் காதல் வலி....!!!

காதல் வாழ்க்கை

காதல் வாழ்க்கை ********************* தினம் தோறும் தனியே உணவு அருந்தியதில்லை தனியே உறங்கியதில்லை தனியே வெளியே செல்லவில்லை இதல்லாம் நடக்கிறது என் கற்பனையில் .........!

காதல் மலர்வு

காதல் மலர்வு *********************** காதல் இறைவன் இணைப்பு ..! விதியும் மதியும் ..... ஏற்படும் பிணைப்பு மீண்டும் ஒரு முறை வந்தது அந்த வசந்தம் இம் முறை விளையாட்டு அல்ல உறுதி ...! ^ மலர்ந்தது காதல் 

காதல் ஏக்கம்

காதல் ஏக்கம் ****************** மீண்டும் எப்போது சந்திப்போம் மீண்டும் ..? நேற்று நடந்தது விபத்தா ? விளையாட்டா ? தினம் தினம் ஏங்கி ஏங்கி நாட்கள் கூட வருடம் போல் நகர்ந்தது ............! ^ காதல் ஏக்கத்தோடு ....!!

காதல் அரும்பு

காதல் அரும்பு ************************ கூட்டத்தில் நெரிந்து... கொண்டு கூத்தாடி ... போல்நின்றேன் -நீ ... பார்த்த பார்வையில் ... உறைந்து போனேன் -..... அந்த கணமே.... அரும்பியது காதல் ... மொட்டு உன் மீது .... ^ ஊமை காதல் ....!!!

அழகாய் இருகிறாய் ...!!!

நீ சிப்பிக்குள் இருக்கும் ... முத்தைப்போல் என் இதய அறைக்குள் .. அழகாய் இருகிறாய் ...!!! சிறு மழைதுளி தான் முத்தாக மாறும் உன் ஓரக்கண் பார்வையால் இதயத்துக்குள் முத்தானாய் .......................!!! முத்துக்குழிப்பது எவ்வளவு கடினமோ ... அதைவிட கடினம் உன்னை அறிந்து கொள்வது ..?