இடுகைகள்

அதிசயக்குழந்தை - உறக்கம்

அதிசயக்குழந்தை - உறக்கம் -------- ஏய் குழந்தாய் நேரமாகி விட்டது உறங்கவில்லையா ....? உறக்கம் என்றால் என்ன ....? நானே சொல்கிறேன் ஆசானே ....!!! மூளை ஓய்வெடுப்பது உறக்கம் .... மூளை செயல் இழப்பது மரணம் .... கண்ணை மூடுவது உறக்கமில்லை.... கண் மூடுவது என்பது சாதாரண ... விடயமும் இல்லை மிக கடின வேலை....!!! அப்படியென்ன கடினம் என்று கேட்டேன் ...? வெறும் கண்ணை மூடுவது ஒன்றும் ... கடினமில்லை .இரண்டு இமையும் இணைத்தால் போது அது கண் மூடல் ... என்றுதான் எல்லோரும் நினைக்கிறோம் .... தவறு கண்மூடினால் ஒன்றுமே .... தெரியாமல் இருப்பது மட்டுமல்ல .... ஒன்றுமே நினைக்காமல் இருப்பதே .... உண்மை கண் மூடல் .....!!! புருவத்தின் மத்தியில் நினைவை கொண்டுவந்து கண்மூடி உள்ளே ... பாருங்கள் உங்களை நீங்கள் .... அறிவீர்கள் உங்களின் அத்துணை ... குணமும் படமாய் ஓடும் ..... என்று அந்த படமெல்லாம் ஓடி ... கலைத்து வெறும் திரை கண் முன் ... வருகிறதோ அன்றே நீங்கள் .... உண்மையான கண் மூடல் அனுபவத்தை பெற்றுள்ளீர்கள் .... வாழ்நாளில் என்றொ ஒரு நாள் ... இப்படி கண்மூடிபாருங்கள் .... சொர்க்கம் தெரியும் என...

காயங்கள் மட்டுமே மாறுகிறது

மஞ்சள் நிறத்தில் ... காதல் செய்தேன் ... குங்குமம் என்னை ... பிரித்து விட்டது ...!!! வற்றி போகும் நதியில் ... முத்து குளிக்க சொல்கிறாய் .... செத்து மிதக்கிறேன் மீனாய் ...!!! எல்லோர் காதல் வலியும்.... ஒன்றுதான் -காயங்கள்... மட்டுமே மாறுகிறது ...!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 945

என்னையே நினைப்பதில்லை....!!!

என் மூளையை ... பரிசோதிக்க வேண்டும் ... என்னையே நினைப்பதில்லை....!!! என் கண்ணீர்த்துளிகள் .... உனக்கு முத்துகள் ... மாலையாய் கோர்கிறாய் ...!!! சின்ன துவாரத்தை ... அடைக்காமல் விட்டேன் ... இதயத்தை விட்டு ... வெளியேறிவிட்டாய் ....!!!   ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 944

உனக்கும் எனக்கும் இடைவெளி

உன்னை காதலிக்கவேண்டும் என்பதற்காகவே காணாமல் போனவன் ...!!! காதலித்தபோதுதான்.... உன் சுயரூபம் கண்டேன் ... தவிக்க விடவே காதல் .... செய்திருகிறாய்....!!! உனக்கும் எனக்கும் இடைவெளி ... ஒன்றால் மட்டுமே .... இணையும் -காதல் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 943

நீ தண்ணீராய்

நீ தண்ணீராய் .... இருந்தால் போதாது ... தாகத்தையும்..... தீர்க்க வேண்டும் ...!!! பிறர் துன்பத்தில் கண் கலங்கும் நீ என் துன்பத்தில் பங்குகொள் ......!!! நீ காதல் மலராகவும் ... துரத்தி குத்தும் .... தேனி வண்டாகவும் ... இருகிறாய் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 942

கண்ணீரால் பேசுகிறாய்

உன் உணர்வுகளையும் என் உணர்வுகளையும் தொலைத்து பெற்றதே காதல் ....!!! நீ கண்ணீரால் பேசுகிறாய் நான் கவிதையாய் எழுதுகிறேன் ....!!! ஒருதலை காதல் வலி இருதலை காதல் வலி இக்கரைக்கு அக்கறை பச்சை .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 941

முடிந்தால் காதலையே விடுங்கள்

காதலோடு இருங்கள் காலமெல்லாம் இன்பம் ... காதலியோடு இருந்தால் .... காலமெல்லாம் ......? காதல் வெற்றி பெற.... விட்டு கொடுங்கள் ... முடிந்தால் காதலையே ... விட்டு விடுங்கள் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் ( சோக துளிகள்) கவிப்புயல் இனியவன்

அழியாது -முதல் காதல்

உலகில் எந்த அழிவு .... வந்தாலும் அழியவே ... அழியாது -முதல் காதல் ....!!! எத்தனை அழகை கண் ... பார்த்தாலும் முதல் காதலின் அழகை வெல்ல ... இல்லவே இல்லை அழகு ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் ( சோக துளிகள்) கவிப்புயல் இனியவன்

நான் காதலிப்பேன்

நீ என்னை காதலிக்காவிட்டாலும் ... நான் காதலிப்பேன் ஏன் தெரியுமா ...? உன்னை காதலித்த ... முதல் ஆள் நானான ... இருக்கவேண்டும் ....!!! உனக்காக காத்திருப்பதே .... காதல் சுமமாக இருப்பதால் .... நீ காதலிக்கா விட்டாலும் .... காத்திருப்பேன் ...!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 35

நீ அணைக்கும் அழகை

உன்னை பார்க்க .... எந்தளவு ஆசையோ ... அதை விட ஆசை -நீ தூங்கும் அழகை பார்க்க .... தலையணையை -நீ அணைக்கும் அழகை ....!!! நான் ஒரு கனவு கண்டேன் ... என்று நீ தலையை .... சொறிந்தபடி கூறும் ... அந்த மந்தியழகும்.... ஒரு அழகுதான் ....!!! ++ கவிப்புயல் இனியவன் என்னவளே என் கவிதை 34

இரண்டையும் செய்தாய்

காதலில் தான் பொய்யும் அழகு களவும் அழகு ... என் வீட்டுக்கு முதல் ... முதலில் வந்தபோது ... இரண்டையும் செய்தாய் ....!!! இதயனே.... உன் அருகில் பேருந்தில் ... இருக்கும் பாக்கியத்தை ... பெற்ற அன்று உன்னோடு .... வாழ்துவிட்ட இன்பம் .... இன்றும் அந்த பேருந்தை ... திட்டுகிறேன் விரைவாக .... ஓடியதுக்கு ....!!! ^ என்னவளின் காதல் டயரியிலிருந்து என்னவளின் பக்கம்- 15

கண்ணீருக்கு தெரியவில்லை

என்னவனே உன்னோடு வாழ்ந்த நாள் மிக சொற்பம் உன் நினைவோடு வாழ்ந்த நாள் அதிகம் என்பதை என் டயரி சொல்லும் பார் ....!!! இடை இடையே ... எழுத்துகள் அழிந்திருக்கும் ... என்னசெய்வது கண்ணீருக்கு ... தெரியவில்லை ....!!! ^ என்னவளின் காதல் டயரியிலிருந்து என்னவளின் பக்கம்- 14

காதல் கவிதை பிரியாது

நீயும் நானும் பிரிந்து போகலாம் என் காதல் கவிதை பிரியாது -உன் நினைவுகள் என்னோடு வாழ்வதால் ஆழத்தில் இருக்கும் திமிங்கிலம் அடிக்கடி மேலே வந்து சுவாசிப்பதுபோல் உன்னை நான் பார்க்க ஏங்குகிறேன் இதயமே .. நான் உன்னால் காயப்ப இதயம் உனக்கு ஏன் இதற்கு மேல் இதயம் ...??? + கே இனியவன் - கஸல் 115

உனக்கு காதல் வரி

உன்னிடம் நான் தப்புவதென்றால் ... வேறு வழியே இல்லை காதல் செய்தே ஆகணும் ...!!! என் கவிதை வரிகள் உனக்கு காதல் வரி எனக்கு காலன் வரி ...!!! என் சோகத்தை கேட்டு சோகமே அழுகிறது நீ சுமகாய் வாழ்கிறாய் இதயத்தில் ....!!!  + கே இனியவன் - கஸல் 114

என் இதயக்கதவு

இதயத்துக்கு அருகில் வரும் போது கதவை சாத்துகிறாய் -நான் கதவை பலமாக ... தட்டுகிறேன் ....!!! இன்று போய் நாளை வா என்று சொல்ல நான் ராவணனும் அல்ல.... நீ ராமனுமல்ல....!!! என் இதயக்கதவு மட்டுமல்ல வீட்டு வாசல் கதவும் திறந்திருக்கிறது....!!! + கே இனியவன் - கஸல் 113