இடுகைகள்

பொங்கல் கவிதை

தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன்  தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே ....  தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை

பொங்கல் காதல் கஸல்

பொங்கல் காதல் கஸல்  ----- பொங்கி வழிந்தது  காதல் நினைவுகள்  கருகிப்போனது ... உன் வார்த்தையால் ... காதல் ....!!! கரும்பின் நுனியும் ... அடியும் ஒரே சுவையில்ல ... உன் காதல் பாதையும்  என் காதல் பாதையும் ... ஒன்றில்லை  பார்வைக்கு காதலும்  கரும்பும் ஒன்றுதான் ...!!! தலை  குனிந்து நிற்கும் .... நெற் கதிர்போல் ..... என்னைகண்டு தலை .... குனிகிறாய் ..... நெல்லுக்கு அழகு .... உனக்கு இழுக்கு ....!!! ^ கவிப்புயல் இனியவன்  பொங்கல் காதல் கஸல் 

பொங்கல் லிமரைக்கூ

பொங்கல் லிமரைக்கூ ----------- அறுவடையின் இன்பம் பொங்கல் கடன் பட்ட விவசாயிக்கு சஞ்சலம் நெல் விலை வீழ்ச்சியோ தொங்கல் ^^^ முக்கல் வைத்து பொங்கல் ஊதி ஊதி இழைத்து உடம்பு பச்சை விறகால் சிக்கல் ^^^ கவிப்புயல் இனியவன் பொங்கல் லிமரைக்கூ

பொங்கல் சென்ரியூ

பொங்கல் சென்ரியூ  ----- எறும்புக்கு கொண்டாட்டம்  சக்கரை நோயாளிக்கு திண்டாட்டம்  பொங்கல்  ^^^ நெல் கதிர் ராணிக்கு  சூரிய ராஜாவுக்கும் திருமணம்  பொங்கல்  ^^^ சக்கரை நோயாளிக்கு  எச்சரிக்கை வைத்தியர்  பொங்கல்  ^^^ கவிப்புயல் இனியவன்  பொங்கல் சென்ரியூ

பொங்கல் ஹைக்கூ

பொங்கல் ஹைக்கூ  -------- சேற்றை மிதித்து  சோற்றை தருபவன் நாள்  பொங்கல்  ^^^ பச்சரிசி பல் அழகி  பால்வடியும் முகஅழகி  பொங்கல் ^^^ மும்மாரி பொழிந்து  மூவேளை உணவுதரும் நாள்  பொங்கல்  ^^^ கவிப்புயல் இனியவன்  பொங்கல் வாழ்த்துகள் 

நிலாவை தூக்கி எறிய .....

நிலாவை தூக்கி எறிய ... ஒன்றும் பிரம்மசாரியல்ல .... நிலவையே நினைத்து... வாழ கன்னி ....... ராசிக்காரணுமில்லை....!!! நிலவு இன்பமானது நிலாவை நிலாவாக ... நிதானத்துடன் நிலாவை ... ரசித்தால் -நிலவு குளிர்ச்சியானது .....!!! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ... நிலாவை அளவுக்கு மீறி ... ரசித்தால் குளிரும் நிலா ..... சுடாது - சுட்டெரிக்கும் ......!!!

நட்புக்கு பொய்

காதலுக்கு பொய் ... துன்பத்தை  ஏற்படுத்தும் ... நட்புக்கு பொய் ... இன்பத்தை ஏற்படுத்தும் ... உண்மையாக இருந்தாலும் ... பொய் தானே என்றுவிட்டு போவான் நண்பன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

நண்பணின் நினைவுகள்

நான் எப்போதுமே தனியே .... வாழ்ந்ததில்லை .... நண்பணின் நினைவுகள் ... எப்படி தனியே வாழவிடும் ....? தனியே எங்கும் போனதுமில்லை .... நிழலாக நண்பன் வந்துகொண்டே இருக்கிறான் ...!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

நட்பு என்னும் விதை

நட்பு என்னும் விதையை ... எங்கு தூவினாலும் .... வளரும் .... நட்புக்கு வரண்ட ... பிரதேசம் என்று ஒன்று ... இல்லவே இல்லை ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

அவனுக்காக

காத்திருப்பேன் விழித்திருப்பேன் ... பொறுத்திருப்பேன் .... தனித்திருப்பேன் ... அவனுக்காக .... உயிரும் துறப்பேன் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கலங்க விடவில்லை நண்பன்

இத்தனை காலமும் என் துன்பத்துக்காக .... நான் கண்கலங்கியதே... இல்லை .....!!! கலங்க விடவில்லை ... என் நண்பன் .... ஒருமுறை அவன் துன்பத்துக்காக கண் ... கலங்கினேன் ... எத்தனை வலிகளை... தாங்கியிருகிறான்... எனக்காக .... வலிக்குதடா நண்பா .....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் நட்பு கவிதை கவிப்புயல் இனியவன்

கவிதை எப்படி வரும் ,,,?

உனக்கு எழுத கவிதை வராது .... என்கிறாய் - எனக்கு .... கவிதையாய் - நீ இருப்பதால் உனக்கு ... கவிதை எப்படி வரும் ,,,? ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

மொழியே காதல்

நீ பேசிய ... மொழியே காதல் ...... பொது மொழி .... நீ கொஞ்சிப்பேசினால் .... இலக்கணம் ..... கோபப்பட்டால் .... காவியம் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

இந்த அடைமழை ....!!!

இத்தனை அடைமழை .... பொழிந்துமா உன் இதயம் .... ஈரமாக வில்லை ....? எத்தனை காதலை .... இணைத்து வைத்துள்ளது ... இந்த அடைமழை ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்

நிரந்தர வசிப்பிடம் காதல் .

உன்னிடம் என்னை பற்றி சொல்ல ... என்ன இருக்கிறது ...? என் பிறப்பிடம் காதல் ... நிரந்தர வசிப்பிடம் காதல் ... தற்போதைய முகவரி ... உன் மீது வைத்த காதல் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் (காதல் கவிதை) கவிப்புயல் இனியவன்