இடுகைகள்

காதல் லிமரைக்கூ

முற்களின் நடுவே  ரோஜா இரத்தம் கையில் வடிய பறித்து கொடுத்தார் காதலியின் ராஜா ^^^ மாப்பிளைக்கும் பணம் காலமாய் காதல் செய்தவரின்   மாறியது குணம் ^^^ கவிப்புயல் இனியவன் காதல் லிமரைக்கூ

காதல் சென்ரியூ

பெண் பார்க்கும் படலம்  இன்ப துன்ப அதிர்ச்சி  நண்பனின் காதலி  ^^^ திருமண வீட்டில்  இழவு செய்தி  மணப்பெண் ஓட்டம்  ^^^ காதல் தோல்வி  தாடி வளர்ப்பு  சலூன் காரன் புலம்பல்  ^^^ பொய் சொன்னால்  மெய் மறக்கும்  காதல்  ^^^ கவிப்புயல் இனியவன்  காதல் சென்ரியூ

அதிசயக்குழந்தை - பூதம்

அதிசயக்குழந்தை - பூதம்  ------- ஒட்டு துணிகூட இல்லாமல் ... பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் .... புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு .... விளையாடிகொண்டிருந்தான் .... அதிசயக்குழந்தை ....... டேய் எழுந்திரு என்று அதட்டினேன் ... எதற்கு என்று கேட்டான் அவன் ....!!! மண்ணுக்குள் விளையாடுகிறாயே .... உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே ... என்றேன் .... நீங்க மட்டும் அழுகில்லையோ...? என்றான் அவன் - மேலும் சொன்னான் .... ஆசானுக்கு  நான் சொல்வதா ...? ஊழ்வினை உடம்பே அழுக்குதான் .... பஞ்ச பூத கூட்டுத்தானே உடம்பு ....!!! மனத்தின் அழுக்கை நீக்க கண்ணீரால் (தண்ணீர் ) கழுவுகிறீர்கள் .... உடலின் அழுக்கை நீக்கவும் ... தண்ணீரால் கழுவுகிறீர்கள் .... கோபப்படும் போது " நெருப்பாய்" கொதிக்குறீங்க .. உள்ளத்தை துளைக்கும்  சொல்லை ... காற்றோடு கலக்கிறீங்க .... உங்களின் அசுத்தம் ஆகாயத்தையும் ... அசுத்தமாக்கும் போது நான் இந்த மண்ணில் புரளுவது மட்டும் உங்களுக்கு அழுக்காய் தெரிகிறதோ ....? என்றான் - அதியக்குழந்தை.....!!! போதும் போதும் உன் வியாக்கியானம் .. என்று கூறிக்கொண்டு ஒரு சி...

அதிசயக்குழந்தை

அதிசய குழந்தை அவன் ... ஆசான் நான் ... என்னைவிட அவனே முன்னுக்கு " அ " நான் "ஆ " இந்த குழந்தை இப்படியெல்லாம் .... பேசுமா....?  சிந்திக்குமா ...? நம்ப முடியவில்லை என்போர் ... இந்த கவிதையை மூடிவிட்டு போகலாம் ....!!! இந்த குழந்தை என்னதான் சொல்லப்போகிறது என்பதை ... பார்க்க விரும்புவோர் .... பொறுமையோடு காத்திருந்து .... தொடராக வரும் வசனக்கவிதையை .... பாருங்கள் .....!!! அதிசயக்குழந்தை .... எப்படி இருப்பான் ...? ஆசான் நேரான சிந்தனையில் ... பேசினால் அவன் எதிர் சிந்தனையில் பேசுவான் . ஆசான் எதிர் சிந்தனையில் பேசினால் அவன் நேர் நித்தனையில் ... பேசுவான் - ஆனால் அர்த்தம் இருக்கும் ....!!! ஆன்மீகம் பேசுவான் அரசியில் பேசுவான் இல்லறம் பேசுவான் எல்லாமே பேசுவான் இலக்கண தமிழில் உரைப்பான் இந்தாங்கோ என்று பேச்சு தமிழிலும் பேசுவான் .... கசப்ப்னான உண்மைகளை உரைப்பான் ... இனிப்பான பொய்களையும் சொல்வான் ... மொத்தத்தில் அதிசய குழந்தை இடையிடையே அதிர்ச்சியை .... தருவான் என்பது மட்டும் உண்மை ....!!! ^ அதிசயக்குழந்தை    வசனக்கவிதை கவிப்புயல் இனியவன் 

அரசியல் சென்ரியூ கள்

அரசியல் சென்ரியூ கள் பரிணாம வளர்ச்சி உண்மை அடிக்கடி தாவுகிறார்   கட்சி தலைவர்   ^ தேர் திருவிழா   தேர்தல் திருவிழா   ஜாக்கிரதை   ^ அழையாத விருந்தாளி   தேர்தல் காலத்தில்   அரசியல் தவைவர்   ^ திறந்த வீட்டுக்குள் அது பூர்ந்ததுபோல்   வோட்டு கேட்டு வீட்டுக்குள்   வேட்பாளர்   ^ தேர்தலுக்குமுன் நியதி   தேர்தலுக்கு பின் மறதி தேர்தல் வாக்குறுதி   ^ கவிப்புயல் இனியவன்   அரசியல் சென்ரியூ  

சமூக அவல சென்ரியூ கள்

சமூக அவல சென்ரியூ கள்  குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்  டாக்டர் அறிவுரை  பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது  ^ நேர அட்டவனனைப்படி  சிறையில் அடைக்கப்படுகிறார்கள் பள்ளி மாணவர்கள்  ^ உயிரை கொன்று  அலங்கரிக்கப்படுகிறது  பட்டுப்புடவை  ^ நகரத்தில் கட்டண கழிப்பிடம்  கட்டணமின்றி தூங்கலாம்  நடைபாதை  ^ பகலிரவு ஆட்டம்  இரவு சூதாட்டம்  பகல் கிரிகட் ஆட்டம்  ^ கவிப்புயல் இனியவன்  சமூக அவலம்  சென்ரியூ 

கவிப்புயல் இனியவன் சென்ரியூ

பணம் பாதாளம் வரை பாயும் பாதாள அறைக்குள் பணம் ^^^ பணம் பத்தும் செய்யும் கடன் கொடாதவன் கையில் பத்து ^^^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ

காதல் தாழமுக்கம் ....!!!

கண் அசைத்து ... காதல் வானவில் ... ஆனாய்.... இதயம் கருகி ..... இருளானேன் ....!!! நீ சேற்றில் மலர்ந்த மலர் - நான் பூசாரி மலரை .... உதிரப்பண்ணுகிறேன்....!!! நீ ஓடம் நான் துடுப்பு ... காதல் தாழமுக்கம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 937

காதல் கண்ணீர் கஸல் ......!!!

நான் மரபு - திருக்குறள்... நீ நவீனம் - ஹைக்கூ ... நம் காதல் கண்ணீர்.... கஸல் ......!!! எழுதுகிறேன் ... எழுத்து கருவி மறுக்கிறது .... எழுத்து பிழை -நீ ......!!! நினைவுகள் நரகம் .... கவிதை சொர்க்கம் ..... காதலில் சொர்க்கத்தில் .... மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 936

இனியவன் ஹைக்கூ 02

தாடி வளர்த்த தாத்தா பிடித்திழுக்கும் பேரன். ஆலம் விழுது ----- தன்னை அழித்தாலும் இறுதிவரை மூச்சுதரும் மரம் ----- நவரசத்தை காட்டும் சலனமுள்ள சடப்பொருள் தொலைக்காட்சிபெட்டி ---- கருவில் கலையாமல் தெருவில் கலையும் குழந்தை தொழில் ------ தான் நடனமாடி பிறரை வாழவைக்கும் பேனா 

இனியவன் ஹைக்கூ 01

சில்லென்று வீசும் சிறுமழைத் தூறல் நிலத்துக்கு முத்தம் ****************** காதுகளை கௌவும் காற்றின் ஆவிகள் இசை ********************* சிந்தனை கதவை திறக்கும் சாவி அறிவு ******************** இருட்டு குடிசை விரட்டும்பேய் ஒளி ********************* உயிரின் கதவை இறுக்கும் பூட்டு. சாவு ******************* வீணாய்ப்போகிறது மழை. குறுக்கும் நெடுக்குமாய் வெள்ளம்

இனியவன் ஹைபுன் 06

நாளைக்கு பரீச்சையடா சந்திரா ..இப்படி நின்னு விளையாடுறியே ..நல்லா படிச்சுட்டையோ . இல்லையட சுந்தரா ...எங்க மாமா பிள்ளைகள் வெளியூரிலிருந்து திடீரென வந்திருக்கிறாங்க அதுதான் விளையாடுறன்  அப்படியா நாடும் வரட்டா ...? வாடா உங்க அம்மா பேசாட்டி நல்ல விளையாடு வா சூப்பர இருக்கும்  விளடுவம் வாடா .. விளையாடிக்கொண்டிருக்கும் போது மாமாவின்  மகனுக்கும் சுந்தரனுக்கும் வாக்கு வாதம் வந்து  அடிதடியில முடிங்சுது ..அப்போது மாமாவின் மகன் சொன்னான் சந்திரா ..இவன் விளையாடினால் நான் வரமாட்டன் ..இவனை அனுப்பு ... முடியாது மச்சி ..அவன் என் உயிர் நண்பன் ..நானும் அவனும் தான் ஒன்றா பள்ளிக்குடம் போவம் விளையாடுவம் ஒன்னாகூட சாப்பிடுவம் தூங்குவம் ...இப்படியிருக்க இன்னையோட நீ போயிடுவ ...அவன் தான் எப்பவுமோ ... என்று சொன்னதும் மச்சி கோவித்து கொண்டு போட்ட்டான் ... சந்திரா சொன்னதை கேட்டு ஓரக்கண்ணில் கண்ணீருடன் நின்றான் சுந்தரன் ... டேய் என்னடா ..சின்னபில்லைமாதிரி அழுற .. என்று கட்டிப்பிடித்தான் சந்திரன் .... உயிருக்கு உயிர்  அன்னைக்கு நிகர்  நட்பு

இனியவன் ஹைபுன் 05

ஏண்டீ மீனாஷ்சி காலையில என்ன இருக்கு ..வேலைக்கு போகணும் எதண்டாலும்.. தாவன் திண்டுட்டு போட்டுவாரன் ..ஆமா மகராசா சாமான்களையெல்லாம் வாங்கி தருவாறு  காலையில்லை சாப்பிட சீ போ..கசுமாரம்..போய் நாலு துட்டு கொண்டுவா உனக்கு ஆக்கிப் போடுறன் ...இத்தனையும் வாங்கி காட்டினார் சுப்பு ... அன்றாடம் சாப்பாடே அவனுக்கு லடாய் தான் பணம் துட்டு இதுதான் .. காலம் ஓடியாது ..கும்பிட போன தெய்வம் குறுக்க வந்ததுபோல் ஒருநாள் அதிஷ்ட லாப  சீட்டில் பல இலசம் ரூபா விழுந்தது ...திடீர் பணக்காரன் ஆனார் சுப்பு .. சந்தித்தார் பிரச்சனையை மூத்த மகள்...வீட்டோடு வந்துவிட்டாள் புருசன விட்டு  இரண்டாவது மகள் மூத்த மகளுடன் ஒரே நாய் கடி பூனா கடி சண்ட .. அப்பாவின் சொத்துக்கு வந்திட்டியா ..? என்று சண்ட..மற்ற பக்கத்தில் மீனாஷ்சி .. வயதுக்கு மீறிய டாம்பீகம் ...எடுவை கதை ... எல்லாதுன்பத்தையும் தாங்க முடியாத சுப்பு சந்நியாசம் போய்விடார்  இல்லாவிட்டாலும் பிரச்சனை  இருந்தாலும் பிரச்சனை  பணம்

இனியவன் ஹைபுன் 04

டேய் ..உன்பெயெரையே மறந்துட்டண்டா..தூங்கு மூஞ்சி எண்டுதான் வருது .. உங்க அம்மா கூட அப்படிதானே கூப்பிடுவா ...!!! அதுசரி இப்ப என்ன செய்கிறாய் என்று சுகம் விசாரித்தா தூரத்து சொந்தமானா சுதனின் ஆன்ரி .. நல்ல சுகம் ஆன்ரி...இப்பவெல்லாம் நான் தூங்கு மூஞ்சி இல்லை   அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழும்பிடுவன் ...வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களை சோம்பலாலும் நேரத்தின் முக்கியத்துவத்தை புரியாமலும்  இழந்திட்டேன் ஆன்ரி ...என்று நேரத்தை உணர்ந்தேனோ அன்றிலிருந்து எல்லா வெற்றியும் என்னை தேடிவந்தது வருகிறது .. இப்போ நல்ல வேலையில் இருக்கிறேன்  ஆப்பீசில சூப்பர் மான் என்றுதான் கூப்பிடுவாங்க ...என்று சொன்னவுடன் ஆன்ரி வாயை அடைத்து விட்டா ...!!! நேரத்தை வீணாக்குபவன் மனிதனே இல்லை உயிர்போல் திரும்பி வராது பொன்னுக்கு சமன் நேரம் 

இனியவன் ஹைபுன் 03

டேய் கெதியா வாடா ஸ்கூல் பெல் அடிக்கபோது முதல் பாடம் கணிதமாட ...சேர் பொல்லாதவர் லேற்றா போனா அடிப்பாற்றா அந்த மனுஷன் பொல்லாதது என்று சொன்ன படி கோபாலும் விமலும் ஓடி வந்தனர் ...ஒருமாதிரி ஸ்கூல் பெல் அடிக்க முதல் வகுப்பறைக்குள் சென்று விட்டனர் .கணித ஆசிரியர் பெரிய தடியோடு வகுப்பிற்குள் வந்தார் ......... பாசங்களா ....ஹோம் வொர்க் எல்லாம் செய்தாச்சா செய்யாதவன் எழும்பு ...? யாரும் எழும்பவில்லை அப்படி பயமும் பக்தியும் அவர்மீது ...!!! விமலுக்கு கிட்டே வந்து நின்றார் அவனின் உடல் நடுங்கியதை பார்த்து ஏண்டா விமல் நடுங்கிறாய் ...? ஹோம் வொர்க் செய்யல்லயா ...? இல்லைசார் செய்திட்டன் அப்பா ஏண்டா நடுங்க்கிற ...? கோபால் சொன்னான் சார் அவன் காலை சாப்பிடேள்ள அவங்க அப்பாவுக்கு சுகமில்லை வேலைக்கு போக இல்ல அதால சமைக்கவில்லை .. என்று சொல்ல ..வாடா என்று அவனை கூட்டி சென்று தான் அறையில் உள்ள பாக்கில் தான் கொண்டுவந்த சாப்பாட்டை கொடுத்தார் ...விமல் தயக்கத்துடன் சாப்பிட அவன் தலையை தடவி தனது கடந்த காலத்தை நினைத்து பார்த்தார் ..... கடினமான மனிதர்கள் மத்தியில் தான் இரக்கமும் அதிகம் .....!!! கண்டிப்பில் தந்த...