இடுகைகள்

மழையாக என்னை நனைத்துவிடு

என்னை குப்பை ... என்கிறாய் .... அப்போ கூட்டி அள்ளி ... எடுத்துவிடு என்னை ....!!! ஒவ்வொரு..... திருமணத்துக்கு ..... பின்னாலும் ஒரு கண்ணீர் கதை திரைப்படமாய் .... ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!! காதல் ஓட்டை வீட்டில் .... இருக்கிறேன் .... மழையாக வந்து என்னை .... நனைத்துவிடு .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 934

எனக்கு நேராகவே இரு ....!!!

சூரியன் கிழக்கே .... தோன்றி மேற்கே .... மறையுமாம் .... நீயும் முகத்தில் .... தோன்றி -அகத்தில் ... மறைந்தாய் ....!!! நீ ஒரு விலாங்கு மீன் எனக்கு தலையையும் ... குடும்பத்துக்கு .... வாலையும் காட்டுகிறாய் ....!!! நீ கலங்கரை விளக்கம் .... நான் கப்பல் .... உன் உதவியில்லாமல் .... கரைசேர முடியாது ..... விட்டு விலகி விடாதே .... எனக்கு நேராகவே இரு ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 933

கவிப்புயல் இனியவன் கஸல் - 932

காதலில் மேதை ... ஆனவனும் உண்டு .... போதையானவனும் உண்டு .... நீ என்னை பேதையாக்கி  விட்டாய் .....!!!! காதல் தேன் கூட்டை ... கட்டியதும் நீ  கல்லெறிந்ததும் நீ  காதல் தேன் போல் .... வழிந்தோடுகிறது .....!!! பொருள் காணாமல் ... போனால் களவு .... மனம் காணாமல் ... போனால் காதலாம் ....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 932

மௌனம் காதலை வெட்டும் .....!!!

இதயத்தின் ஈரம்  வற்றி துடிக்கும்  மீன் ஆனேன் ....!!! வைரம்  கண்ணாடியை .... வெட்டும் ... மௌனம் காதலை ... வெட்டும் .....!!! நீ......  எப்போதும்...  மென்மையானவள்....  கண்ணீர்  மென்மையானது  உன்னைப்போல் .....!!! ^ கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் - 931

நினைத்து சந்தோசப்படு.....!!!

நினைத்து சந்தோசப்படு.....!!! ------ சாண் ஏற முழம் சறுக்கிறது .... கவலையை விடு ..... சாண் ஏறுகிறாயே ,,,,, நினைத்து சந்தோசப்படு.....!!! முயற்சி எடுத்தால் ... முதல் வருவது தோல்விதான் .... அடுத்துவருவதும் தோல்விதான் தோல்வி உன்னோடு போராடுகிறது .... நீயா நானா என்று போராடுகிறது .... தோல்வி வென்றால் நீ .... தோற்கிறாய் ........!!! ^ கவிப்புயல் இனியவன் 

தோல்விக்கு ஒரு தோல்விகொடு ...!!!

இருக்கும் போது தூற்றுவதும் ..... இறந்த பின் புகழ்வதும் .... மனித இயல்பு ...... !!! கடந்த வருடத்தை ..... வெறுப்பதும் .... புதிய வருடத்தை .... வரவேற்பதும் வழமை ....!!! வருடங்கள் மாறிக்கொண்டே .... போவது போல் வாழ்கையும் .... மாறிக்கொண்டே போகும் ..... இழந்தவற்றை இழப்பாக .... நினைந்தால் சென்றவருடம் .... கொடுமையானது ..... இழந்தவற்றை அனுபவமாக .... நினைத்தால் சென்றவருடம் .... வாழ்கை உரம் .....!!! வரப்போவதை இன்பமாக .... நினைத்தால் புதுவருடம் .... சுமை ...... வரப்போவது துன்பமாக .... நினைத்தால் புதுவருடம் .... சுமை ...... எதிர் பார்ப்புகளே ..... வாழ்க்கை சுமைக்கு வழி ....!!! கடந்த வருடத்தில் சாதனைகள் .... சோதனைகள் .... இன்பங்கள் துன்பங்கள் .... அனைத்தையும் மறந்துவிடு .... புது வருடத்தின் எதிர்பார்புகளை .... முற்றாகக நீக்கிவிடு .....!!! நிறைவேறாத ஆசையின் வெளிப்பாடே ... கோபம் ...... நிறைவேறிய ஆசையின் வெளிப்பாடே ... பேராசை ...... கோபத்தினதும்.... பேராசையினதும் ...... வெளிப்பாடே பெரும் துன்பம் ....!!! இந்த புத்தாண்டை ... புத்துயிராண்டாக மாற்று ..... மு...

காட்சிப்பிழைகள்

படம்
காட்சிப்பிழைகள் -  கே இனியவன் காட்சிப்பிழைகள்....................( காதல் காட்சிப்பிழைகள்)  காதல்  ஒரு மந்திர கோல் .....  இரண்டு இதயங்களை ....  ஒன்றாக்கி விடும் ....!!!  நெற்றியில் ...  குங்கும பொட்டு.....?  அப்பாடா - சாமி ....  கும்பிட்டு வருகிறாள் ....!!!  தேவனிடம் ....  பாவ மன்னிப்புக்கேட்கிறாள் ....  என்னிடமும் கேட்பாள் .....!!!  ^^^  கனவு  நிஜத்தில் நிறைவேறாத ...  ஆசைகளை நிறைவேற்றும் ....  நீர்க்குமிழி .....!!!  திடுக்கிட்டு எழுந்தாள் ....  தாலியை கண்ணில் வணங்கி...  என்னை பார்த்தாள் ....!!!  இன்னும்  சற்று தூங்கியிருந்தால் ....  சொர்கத்தை.........  பார்த்திருப்பேன்....!!!  ^^^  நீ என்னை ....  காதலிக்கும் வரை ...  உதடு அசைவெல்லாம் ...  என் பெயர் தான் ....!!!  அவள்  தந்த புத்தகத்துக்குள் ......  மடித்த காகித துண்டு ....  இன்ப அதிர்ச்சி ....  படித்துப்பார்த்தேன் ...  அட வெறும்  பாட சிறு குறிப்புகள் ....!!!...

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!  ------- அழிவை ஏற்படுத்தாமல் ..... அன்பை பெருக்கிட..வருக வருக ....!!! ஆக்ரோயத்தை காட்டாமல் ..... ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!! இழப்புகளை ஏற்படுத்தாமல் .... இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!! ஈனச்செயல் புரியாமல் .... ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!! உலகை உலுப்பாமல்.... உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!! ஊனங்களை ஏற்படுத்தாமல் .... ஊர் செழிக்க ..வருக வருக .....!!! எதிரிகளை தோற்றுவிக்காமல் .... எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!!  ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் .... ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!! ஐயத்தை தோற்றுவிக்காமல் ...... ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஒற்றர் வேலைகள் பார்க்காமல் .... ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!! ஓலமிட மக்களை வைக்காமல் ..... ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!! ஔடத்தை பாவிக்காமல் ..... ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ..... ....வருக வருக ....!!! ^ கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!!

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ் கவிதைகள்  ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ^^^ மொழிக்கவிதை  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்  மாணவர்களுக்கு உதவும் கவிதை

பேச்சுத்தமிழ் கவிதைகள்

சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! பேச்சுத்தமிழ்   கவிதைகள் ---------------------------------------------- வெத்தலைய வாய்நிறைய போட்டு .... வீராப்பாய் வெறும் வார்த்தைபேசி .... ஒத்தரூபா காசுகூட இல்லாமல் .... சுத்தி திரியிறாயே சித்தப்பு .... இது தப்பெண்னு தெரியல்லையோ .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ஊராருக்கு ஞாயம் சொல்லி ... நாட்டாமை என்ற பெற்றெடுக்கும் .... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு ..... உன் வீட்டு ஞாயத்தை எந்த .... நாட்டாமை சொல்லப்போறாறோ ...? சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! வேட்டியை மட்டும் மடிச்சுகட்டி .... வெள்ளத்துரைபோல் நடிப்பு காட்டி .... வேசம் கலைந்தால் வெளுத்துபோகும்.... சித்தப்பு - இது தப்பு -சித்தப்பு .....!!! ^^^ மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் மாணவர்களுக்கு உதவும் கவிதை 

அடுக்கிடுக்குத் தொடர்கவிதை

அடுக்கிடுக்குத் தொடர்கவிதை  காதல் கவிதை  --------------------------------------------------- கன்னங்கரிய முடியழகி...... செக்கச் சிவந்த உடலழகி..... சின்னஞ்சிறிய கண்ழகி ..... பென்னம் பெரிய பின்னலழகி ....!!! வெட்டவெளி பாதையிலே .... தன்னந்தனியே வந்தவளே ... நடுநடுங்க வைக்கிறாயே .....  பதைபதைத்து போனானே ,,,,,,!!! பென்னம் பெரிய ஆசையுடன் ..... தன்னந்தனியே தவிக்கிறேன் .... பச்சைப்பசேரென ஒரு பதிலை .... திக்குத்திணற சொல்வாயோ ....? ^^^ மொழிக்கவிதை  கவிப்புயல் இனியவன்  யாழ்ப்பாணம்  மாணவர்களுக்கு உதவும் கவிதை 

அடுக்கு தொடர் கவிதைகள்

புத்தாண்டு கவிதை அடுக்கு தொடர் கவிதை ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக  இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக  வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... ஐயோ ஐயோ தாங்காது மனம் ஐயோ....!!! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே... நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!! ^^^ மொழிக்கவிதை கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம் மாணவர்களுக்கு உதவும் கவிதை

இதுவே காதல் தண்டனை ...!!!

உன்னை மன்னித்து விடுவேன்..... என்னை மன்னிக்கவே மாட்டேன்.... காதலுக்காய் அனைத்தையும் ..... இழந்த என்னை மன்னிக்கேன்  ..... இதுவே  காதல் தண்டனை ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 35

உன் நினைவுகளே ஆறுதல்

நீ அமைதியாக இருந்து ... எனக்கு சமாதி கட்டுகிறாய் .... நான் சமாதியாக இருந்தே .... அமைதி குலைகிறேன்..... உன் நினைவுகளே ஆறுதல் .....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 34

ஐந்து வரி கவிதைகள் ......!!!

கண்ணீர்த்துளிகள் உனக்கு .... முத்துக்களாய் தெரிகிறது ..... கண்கள் ஆழ்கடலாய் தெரிகிறது .... எதற்காக இதயத்தை பறிக்கிறாய் .... நானே உனக்கு சிறந்த காதலன் ....!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 33