இடுகைகள்

நீயும் நானும் நிச்சயம் சேர்வோம் ....!!!

நினைத்துக்கொண்டே .... இருக்க இனிக்கும் காதல் ... உன்னை நினைத்ததும் .... கண்ணீரும் இனிக்கிறது ....!!! நிலாவில் பேசுவது .... காதலுக்கு அழகு ... எதற்காக நண்பகலில் .... பேச ஆசைப்படுகிறாய் ....? வானமும் பூமியும் .... என்று இணைகிறதோ ... அன்று நீயும் நானும் ... நிச்சயம் சேர்வோம் ....!!! ^  கவி நாட்டியரசர்  கவிப்புயல் இனியவன் யாழ்ப்பாணம்  தொடர் பதிவு கஸல் - 925

அடுத்த நொடியில் இறந்து விடுகிறான்

விஷத்தை அருந்தியவன் அடுத்த நொடியில் இறந்து விடுகிறான் ...!!! காதலில் தோற்றவன் .... உயிரோடு இருந்தும் ... இறந்தவன் தான் ....!!! காதலில் வென்றவன் ... கொஞ்சம் கொஞ்சமாய் ... செத்துகொண்டிருப்பவன் ...!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

தரையில் விழுந்த மீனும்

உன்னை நினைத்து  சுட்டுக்கொண்ட காயங்கள்  நீ என்னிடம் விட்டுச்சென்ற  நினைவுகள் ஏற்படுத்திய காயங்களின் வலியே அதிகம்…!!! தரையில் விழுந்த மீனும்  தண்ணீரில் தாழ்ந்த மானும் துடிக்கும் துடிப்பை உணர்ந்து  கொள்கிறது உன்னை தவறவிட்ட என் இதயம்….!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ தோற்றது இன்னொருவனுக்கு

உலகில்...... வென்றவர்கள் ... பட்டியலை விட ... தோற்றவர்கள் .... தோற்று கொண்டிருப்பவர்கள் ... பட்டியலே அதிகம் ....!!! தோல்வி என்பது ... வெற்றியின் கருவறை ..... உரு பெற்றவுடன் தான் ... பிறப்பு வருவதுபோல் .... தோல்விகள் நிறைந்ததே .... வெற்றி ....!!! ஒன்றை நினைவில் வை ... நீ தோற்றது - இன்னொருவனுக்கு .... அனுபவம் ..... அவனுக்கு வெற்றியின் வெளிச்சம் ...!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

தீக்குச்சியின் கெதிதான் ....!!!

தலை முழுக்க நச்சு ..... நல்ல சிந்தனையே இல்லை .... கெட்டவருடன் ஒன்று சேர்ந்து .... சாம்பலாகிறது .... தீக்குச்சி .....!!! மனிதா சிந்தனையை .... சீராக்கு - நல்லவர்களுடன் ... ஒன்று சேர் .... இல்லையேல் உன் கெதியும்  ... தீக்குச்சியின் கெதிதான் ....!!! தீக்குச்சி தானாக எரிவதில்லை.... இன்னொரு கெட்டதுடன்.... சேர்ந்தே எரிகிறது .... ஒருவன் கெடுவது தற்செயல் .... கெட்டவனோடு சேர்வது .... அதர்மம் ......!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

முயன்றால் முடியாதென்றொன்றில்லை

இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும்  எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்

நீ கவலை படாதே

நீ கவலை படாதே .... எனக்கு கவலை வாழ்கை .... உனக்கும் சேர்த்து கவலைப்படுகிறேன்.... இன்பத்துக்கு மட்டுமல்ல ....!!! நம் இருவரின் காதல் .... முகத்தால் வந்திருந்தால்.... முகத்தை சுழித்துவிட்டு .... போயிருப்பேன் -அகத்தால்.... வந்து தொலைந்து .... விட்டதே ....!!! & .............காதல் சோக கவிதை................. ..............கவி நாட்டியரசர்.................. .........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13 உனக்கும் எனக்கும் ... திருமணம் நடக்காமல் .... விடுவதற்கு வாய்ப்புக்கள் .... அதிகரித்து கொண்டே... செல்கிறது .....!!! உன் அருகில் வரும் ... வாய்ப்பும் நழுவுகிறது .... உன் பெயருக்கு அருகில் ... வாய்ப்பும் நழுவுகிறது .... ஆசையை நிறைவேற்றுகிறேன் ... டயறியில் என் பெயருக்கு ... அருகில் உன் முதலெழுத்து....  போடுகிறேன் ....!!! & ....என்னவளின் காதல் டயறியிலிருந்து.... ..............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

பஞ்சாமிர்தம் - 03

குரு குலத்தில் பிறந்தவர்... மாமிசத்தை துறந்தவர் .... வரைகிறார் மீன் படம் .... தொழிலே தெய்வம் ....!!! ^ சின்ன எல்லை சண்டை ... இருவீட்டார் கடும் சண்டை .... இருவீட்டு நாய்களும் .... தெருவில் கொஞ்சி .... விளையாட்டு ....! மனிதனுக்கு ஆறு அறிவாம் ...!!! ^ ஊர் முழுக்க திருமணம் .... செய்து வைக்கிறார் .... தன் மகளுக்கு இன்னும் ... வரன் தேடுகிறார் ....! வரதச்சனை கொடுமை ....!!! & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்............... ...............யாழ்ப்பாணம்......................

உயிர் பெறுகின்றன

நீ  வாங்கும் ஒவ்வொரு .... பொருட்களும் .... நீ வாங்கியவுடன் ... உயிர் பெறுகிறது .... உன் கையை முத்தமிடவே .... உயிர் பெறுகின்றன் ....!!! நீ  பாவித்து தூக்கியெறிந்த .... பொருளொன்று என்னிடம் ... முறையிட்டுகொண்டிருகிறது ...!!! ^ ........என்னவளே என் கவிதை......... .............கவி நாட்டியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்.............  .............யாழ்ப்பாணம்.....................

பொம்மையை கண்டவுடன்

பொம்மையை கண்டவுடன் .... நிலத்தில் விழுந்து அழுதேன் ... உடனே கிடைத்தது ....!!! உயிருள்ள பொம்மை .... உன்னை கண்டவுடன் .... அடம் பிடித்து அழுகிறது ... இதயம் உன்னோடு .... பேசும் படி .....!!! & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்.....................

உன்னை படைத்தான் இறைவன் ...?

உன்வரவுக்காக ..... காத்திருக்கும் .... நொடியில் கூட உன்னை ... பற்றிய கவிதைகள் .... வரைந்துகொண்டே ... இருக்கிறேன் ....!!! நீ  பேசும் காலம் வரும் வரை .... கவிதையில் ஒரு அகராதி .... எழுதிவிடுவேன் ..... என்னை படைப்பளியாக்கவா ...? உன்னை படைத்தான் இறைவன் ...? & ........என்னவளே என் கவிதை......... .............கவி நாடியரசர் ................... .......கவிப்புயல் இனியவன்............. .............யாழ்ப்பாணம்.....................

கவி நாட்டியரசர்

படம்

பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை

எப்போது தோற்பவன் .... நகைசுவை நடிகன் ... எப்போதும் வெல்பவன் ... கதா நாயகன் .... வென்று தோற்பவன் ... வில்லன் .... வாழ்கையும் இதுதான் ...!!! ^^^ மிருக வதை சட்டத்தை .... கடுமையாக எதிர்த்தார் ... எங்க தலைவர் .... வெள்ளை குதிரைமேல் ... வீர வாள் ஏந்தியபடி ....!!! ^^^ எல்லோரையும் சிரிக்கவைக்கும் .... அவருக்கு சிரிக்க அனுமதியில்லை ... சிரித்தால் தொழில் பறிக்கப்படும் ... நகைசுவை நடிகன் ....!!! ^^^ & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................

பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்

பல்லிக்கு  வால் பிடிப்பது - பிடிக்காது .... வால் அறுந்தாலும் வாழும் ... வால் பிடிக்காதே மனிதா ...!!! ^^^ ஓடி ஓடி உழைக்கணும்... முகிலைப்போல் .... ஊருக்கே கொடுக்கணும் ... முகிலைப்போல்.....!!! ^^^ கெட்டிக்காரமகனையும் .... கெட்டு போன மகனையும் .... ஒன்றாகவே பார்க்கும் குணம் .... அம்மா ........!!! ^^^ தண்ணீருக்காக போராடினோம் .... கண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ... வெள்ள காடு ....!!! ^^^ தனியே வாழ்ந்தபோது ... தன் அறையை கூட்டாதவன் ... கல்யாணம் செய்தபின் ... வீடு கூட்டுவான் ....!!! & .....பஞ்சாமிர்தம் பல்வகை கவிதை... ...............கவி நாட்டியரசர்.................. ........கவிப்புயல் இனியவன்...............  ...............யாழ்ப்பாணம்......................