இடுகைகள்

காதல் ஹைக்கூகள்

காதல் ஹைக்கூகள்  தொலைவில் நின்றாள் அருகில் வந்தாள் தொலைந்துபோனேன்  @@@ உதடு அசைந்தால் காதுக்கு இன்பம்  விழி அசைந்தால் கண்ணுக்கு இன்பம்  என்னவள்  @@@ மூச்சு கொதிக்கிறது  இதயம் வலிக்கிறது  அவள் மௌனம்  @@@ எதுவும் செய்வேன்  எதுவும் செய்யமாட்டேன் என்னவளுக்காக  @@@ இறந்தபின் சிறந்த தானம்  காதலின் தொடக்க ஸ்தானம்  கண்

அம்மா ஹைக்கூக்கள்

அம்மா ஹைக்கூக்கள்  ------ இன்பத்தின் சொல்  இடரின் சொல்  ------அம்மா ----- @@@ நுனிநாக்கில் ஆங்கிலம்  இடறிவிழுந்ததும் தமிழ்  ------ அம்மா ------- @@@ உயிரோடு இருந்தாலும் தெய்வம்  இறந்த பின்னரும் தெய்வம்  ---- அம்மா ------- @@@ பிறப்புக்கு முன் சுமக்கும்  பிறப்புக்கு பின் சுமக்கும்  -----அம்மா ------- @@@ அ - அகிலத்தின் பிரம ஒளி அ - உயிரெழுத்தின் ஆரம்ப ஒளி  ----- அ - அம்மா உயிரின் ஆத்மா ஒளி ----- + கே இனியவன் ஹைக்கூகள்

இனியவன் ஹைக்கூகள் 02

நாம் பிரிந்து வாழ்கிறோம்  இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள்  தண்டவாளம்  @@ எரிகிறேன்  சாம்பலாகமாடேன் மெழுகுதிரி  @@ கண்ணீர் வருகிறது  கவிதை வருகிறது  வலி  @@ பறக்கிறது பட்டமில்லை  கற்பனை  + கே இனியவன் ஹைக்கூகள்

கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்

ஒப்பாரி வீட்டிலும் அழகு  ஒன்றுகூடலிலும் அழகு  -------மலர் மாலை--------- @@@ தொண்டனுக்கு பிழைப்பு தலைவனுக்கு உழைப்பு -------தேர்தல் ----------- @@@ உடல் முழுதும் நெருப்பு த்துளை வருத்தினாலும் இன்பம் தருகிறது -------புல்லாங்குழல் ------- @@@ இன்பமென நினைத்து  இன்பத்தை இழக்கிறான்  -----குடிகாரன் ----- @@@ வானம் திரவமாய் தரும் தங்கம்  நிலம் தங்கமாய் மாற்றும் திரவம்  -----பருவ மழை ------

இரு வரிக்கவிதை

உனக்காக இருக்கவா ....? உனக்காக இறக்கவா - உன் முடிவு ...!!! @@ காதல் இருவழியில் இன்பத்தை தந்து .... ஒரு வழியில் துன்பத்தை தருகிறது ....!!! @@ காதலில் நினைவுகள் முற்கள் .... கனவுகள் மலர்கள் ....!!! @@ இரு வலியை சுமக்கும் இதயத்தில் .... ஒரு வலியை எப்போது சுமப்பாய் ...? @@ உன்னை இழந்த பின்னரே புரிந்தது .... இழப்பின் வழியும் வலியும்....!!! + கவிப்புயல் இனியவன் இரு வரிக்கவிதை

பேசாமல் இருந்தால்

ஒருநாள் .... பேசாமல் இருந்தால் கூட .... பைத்தியம் பிடித்துவிடும்.... தயவு செய்து பேசிவிடு ..... என்று கெஞ்சினால் அன்று ....!!! + இன்று .... எப்போதும் பேசிக்கொண்டு ... இருக்காதே பைத்தியம்போல் ... என்கிறாள் - என்னை பைத்தியமாக்கியவள் .....!!!  @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு

காதல் ஒன்று கவிதை இரண்டு

காதல்  எதிர் பார்ப்புகள் இல்லாதது  இருந்தாலும்உன்னிடம் .... நான் எதிர்பார்த்ததை .... காட்டிலும் அதிகமாக ... இருக்கிறது ..? காதல் ......!!! + எதிர்பார்ப்புக்கள் .... அதிகமானதால் .... தொலைந்து போனது ... என் காதல் ..... எதிர்பார்ப்பு அதிகமானால் ... எதிர்விளைவானது ...!!! @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு 

நீயும் மாறுவாய்

உன்னைப்போல் .... பிறக்கவேண்டும் ... இதயத்தை கல்லாக ... மாற்றி வைக்கும் .... உன்னத பிறப்பாக  .... பிறக்கவேண்டும் ...!!! அடிமேல் அடியடித்தால் ... கருங்கல்லும் குழியும் .... நீ என்ன விதிவிலக்கா ...? நீயும் மாறுவாய் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

நம்பிக்கை ஊட்டுகிறது இதயம்

உன் வரவுக்காய் ..... நீ வரும் தெருவில் ... கால் வலிக்க ...... காத்திருக்கிறேன் .... கண்டும் காணாமல் .... போகிறாய் ....!!! போகட்டும் விடு.... என்கிறது இதயம் ....! கண்கள் தன்னை .... அழுகின்றன ...... அதற்கு நம்பிக்கை .... நம்பிக்கை ஊட்டுகிறது .... இதயம்....! கலங்காதே சிந்திப்பாள் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

என் மூச்சு நிற்கவும்

அன்று நீ சொன்ன .... ஒரே ஒரு .... வார்த்தைதான் .... நான் இன்றுவரை .... மூச்சோடு இருக்க ... காரணம் ....!!! இன்று நீ சொல்ல இருக்கும் ஒரே ஒரு .... வார்த்தைதான் .... என் மூச்சு நிற்கவும் ... காரணம் மறந்துவிடாதே ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

கனவுகளை கண்ணீர் ஆக்குகிறாய்

நினைவுகளை .... வியர்வையாகும் - நீ கனவுகளை கண்ணீர் .... ஆக்குகிறாய் ....!!! நான் விண் சென்றபின் .... நீ மண்ணில் வாழ்வதும் .... நீ விண் சென்றபின் ..... நான் மண்ணில் வாழ்வதும் ... என்றுமே நிகழ போவதில்லை ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

இதயத்தை கிழிக்காதே

என் கவிதையை கிழிப்பதும் ... இதயத்தை கிழிப்பதும் ... ஒன்றுதான் அன்பே ....!!! உனக்கு .... என் கவிதைகள் .... ரசிப்பதற்காக இருக்கும் ... எனக்கோ ஒவ்வொரு வரியும் .... உன்னோடு வாழ்ந்து கொண்டும் .... உனக்காக இறந்துகொண்டும் .... இருக்கும் வாழ்க்கை வரிகள் ....!!! + கே இனியவன் காதல் சோக கவிதை

அவள் தந்த நினைவு

அவள் தந்த நினைவு .... பரிசுகள் ஒவ்வொன்றும் .... இதயத்தின் அருங்காட்சி .... பொக்கிஷங்கள்...... அவளின் ஒவ்வொரு வார்த்தையும் .... ஒவ்வொரு கவிதைகள் ....!!! + எனக்கு கல்லறை .... கட்டதேவையில்லை .... என் இதயமே கல்லறை .... ஆகிவிட்டது ....!!! எனக்கு கல் வெட்டு ... அடிக்கதேவையில்லை .... என் கவிதைகளே .... கல் வெட்டுக்களாகிவிட்டன ...!!! @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு

காதல் ஒன்று கவிதை இரண்டு

உன்னை .... காதல் செய்த நாளே .... காதலில் கருத்தரித்த நாள் .... என்னை .... காதலித்த நாளே .... காதலின் பிறந்த நாள் ....!!! + உன்னை ..... மறக்கும் நாள் வரின் .... என்னை இழக்கும் நாள் .... தொடங்கும் ..... உன்னை .... இழக்கும் நாள் தோன்றின் .... என் ......... மரிக்கும் நாள் தோன்றும் ....!!! @ கவிப்புயல் இனியவன்  காதல் ஒன்று கவிதை இரண்டு 

காதலையும் விட்டுவிட்டேன்

என்னவள் கோபப்பட்டாள்... என் கோபத்தை விட்டேன் .... என்னவள் ஆசைபட்டாள்.... என் ஆசைகளை விட்டேன் .... காதலையும் விட்டுவிட்டேன் ...!!! + கவிப்புயல் இனியவன் ஐந்து வரி கவிதைகள் ......!!! கவிதை எண் 32