இடுகைகள்

வலம்புரி நாளிதழில் என் கவிதை

படம்
அம்மா கவிதை அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....  அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....  அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....  அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....  அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!  என்று தொடரும் இந்த கவிதை   சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை  ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் . மிக்க நன்றி .  இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி  கே இனியவன் Enlarge this image

அத்தியாயம் தந்தது நீ......

என் இதயத்தில் காதல் என்னும் அத்தியாயம் தந்தது நீ..... என் வாழ்க்கை என்னும் பாடத்தில் வலிகள் நிறைந்த கண்ணீரை தந்ததும் நீ தான்....!

நிச்சயம் வெற்றி

நிச்சயம் வெற்றி  மனிதா.....................................!!! "வெற்றி"  பெற வேன்டும் என்றால் .... அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....!!! "சாதனை"  செய்ய வேண்டுமென்றால் ,,,,, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....!!! "உலகம் உன்னை திரும்பி பார்க்க " அதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....!!! இவை கடினம் தான் ,,,,, ஆனால் நான் அவதானித்த சாதனையாளர் .... வெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் .... இதையே நான் அவதானித்தேன் ,,,,,!!! நீங்களும் அவதானித்து பாருங்கள் ..... அனுபவித்தும் பாருங்கள் ....!!!

கவிதையில் பலதும் பத்தும்

"ர " சொல்லுகிறது ...  நீ என்னைப்போல் முன்னோக்கி காலை வைத்தால் வளர்ச்சி  "நக ர ம் "  பினோக்கி காலை வைத்தால் வீழ்ச்சி  "ந ர கம் " @@@@ தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை   முயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால் முடிவுகள் இனிமையானவை . .முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்  ''இருந்தாலென்ன ''''செத்தாலென்ன '' முயற்சி தோற்றதே இல்லை முயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே

வார்த்தை கனக்கிறது

தனிமை என்பதே இல்லை .... நினைவுகள்இரு(ற)க்கும் வரை,,,,, நீ பேசிய அன்பின் வார்த்தையையும் சிரித்த சிரிப்பும் என் உயிரோடு .... கலந்துவிட்டன ....!!! வந்து போகின்ற நினைவலைகளில் நீ சொன்ன பொய்யான வார்த்தைதான் கனக்கிறது மனதை ....!!! கடைசி வரை சேர்ந்தே வாழ்வோம், சேர்ந்தே சாவோம் என்று,,,,!!!            

'குட்டி மேல் குட்டி'!

புத்தகத்தின் நடுவில் புதைத்து வைத்த மயிலிறகு குட்டி போடவில்லை இன்னும்... இறகு கொடுத்த உன் நினைவோ 'குட்டி மேல் குட்டி'!

காதலர் சிரிப்பின் அர்த்தம் ....!!!

சிரிப்பு ஆயுளுக்கு .... நல்லதென்றாய்..... இப்போதான் புரிகிறது .... காதலர் சிரிப்பின் ... அர்த்தம் ....!!! எல்லா பார்வைக்கும் .... பின்னால் ஒரு காதல் .... இருக்கும் - உன் பார்வைக்கு .... பின்னால் கவலை இருக்கிறது ....!!! நான் காதல் விதைகள்..... விதைத்தேன் - காதல் பயிரே என்னவளே .... முளைகிறாயில்லை....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 855

காதலையே தரவில்லையே ....!!!

ஆரம்பத்தில் ... உனக்காய் உயிரையே .... தருவேன் என்றாய்..... இன்னும் காதலையே .... தரவில்லையே ....!!! காதலில் எல்லோரும் .... ஒன்றுதான் தவிக்கவிட்டு ..... வேடிக்கை பார்ப்பதில் .....!!! என் காதல் பசிக்கு .... நீ வெறும் சோளன் பொரி.... காற்றடித்தால் பறந்தும்.... விடுகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 854

என் நினைப்பே தப்பு

இறைவா எனக்கு .... பாச கயிறை தந்துவிடு .... அவள் கழுத்தில் -தாலி கயிற்றை பார்க்கமுன் ....!!! நான் மட்டும் நினைக்கும் .... காதலில் நீ என்ன செய்கிறாய் ....? என் நினைப்பே தப்புதானே ....!!! நீ பாவமன்னிப்பு கேட்டபின் என்னை காதலிதிருகிறாய் ... கவலையில்லாமல் இருகிறாய் ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 853

உனக்கும் சேர்த்து அழுகிறேன் .....!!!

நீயும் கண்ணீரும் ... உடன் பிறப்புகள் .... அதுவும் இரட்டை .... பிறவிகள் .....!!! நானும் தெரு சுற்றி .... உன்னை தொலைத்து  .... தேடி அலைகிறேன் ....!!! தயவு செய்தது .... கண் கலங்காதே .... உனக்கும் சேர்த்து .... காதலித்த நான் .... உனக்கும் சேர்த்து .... அழுகிறேன் .....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 852

எப்படி காதல் வரும் ....?

நீ எல்லோருக்கும் .... பாசமானவள் ..... எனக்கோ -நீ வேஷமானவள்....!!! ஒற்றை பாதையால் .... சென்றே பழகியவன் .... எப்படி காதல்  வரும் ....? நீ இல்லையென்றால் .... எனகென்ன ...? என்னோடு உன் காதல் .... இருக்கிறது ....!!! + கவிப்புயல் இனியவன் ஈழத்து கவிஞன் தொடர் பதிவு கஸல் - 851

கூத்து தமிழனின் பாரம்பரியம் .....

கூ டு துறந்து போனால் ..... கூ ச்சலிட்டு பயனில்லை .... கூ ட்டுறவு வாழ்கை முறையில் .... கூ ச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!! கூ டா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு ..... கூ ட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் ..... கூ டி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் ..... கூ டி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!! கூ த்தாடி பிழைப்பது குற்றமில்லை ..... கூ த்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் ..... கூ த்து தமிழனின் பாரம்பரியம் ..... கூ ட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!! கூ க்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் ..... கூ னல் முதுமையில் வந்தே தீரும் ..... கூ ந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் ..... கூ ட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!

உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!!

உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!! நல்லவேளை ..... உன்னை ஒருதலையாக .... காதலித்தேன் ..... நீ காதலனோடு வந்து .... நலம் விசாரித்தபோது ..... உதடு சிரித்தது .... இதயம் கண்ணீர் விட்டது ....!!! போகட்டும் விட்டுவிடு ..... எனக்கென்ன தோல்வியென்ன ....? புதிதா ...? நல்லவேளை உயிரே .... உனக்கு வேதனையில்லை ... அதுபோதும் என் காதலுக்கு ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 05

ஒருதலை காதலருக்கு .....!!!

ஒருதலை காதலருக்கு .....!!! எங்கிருந்தாலும் வாழ்க .... இது காதல் தோல்வியால் .... வரும் வார்த்தை .....!!! ஒருதலை காதலருக்கு ..... எங்கிருந்தாலும் வாழ்க ..... இதயத்தில் நிரந்தரமாய் .... எழுதபட்டிருக்கும் வாசகம் ..... இணையமாட்டோம் என்பது .... நிச்சய நிகழ்வுதானே ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 04

உன் புகைப்படத்தோடு பேசுகிறேன்

உன் புகைப்படத்தோடு பேசுகிறேன் எல்லோரும் காதலியோடு .... போசுவார்கள் ..உண்பார்கள் .... சுற்றி திரிவார்கள் .......!!! நான் .... உன் புகைப்படத்தோடு .... பேசுகிறேன்..சுற்றி திரிகிறேன் ..... ஒருதலை காதல் என்றால் ... ஒரு இதயம் தானே .... வலியை தாங்கவேண்டும் ....!!! + ஒருதலை காதல் உறவுகளுக்காய் .... கவிப்புயல் இனியவன் தரும் . கவி மழை தொடர் 03