க ண்ணில் காந்த சக்தியுடன் .... க டமையை மூச்சாய் கொண்டு.... க திரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ... க ண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!! க ட்டளை செய்துவிட்டு நீ மட்டும் .... க டப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே ..... க ண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே .... க ண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!! க ரும்புபோல் பேச்சில் இனிமையும் ....... க திரவன் போல் மனதில் ஒளிமையும் ......... க ற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் ....... க ல்வியும் உடையவனே மாமனிதன் .......!!! க ம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் ..... க ண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை .... க ருணை என்பது உதவியல்ல ,அன்பு ...... க டவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!