இடுகைகள்

தப்பு .....

விட்டு கொடுத்து வாழ்வதே .... நல்ல வாழ்க்கை என்றால் .... தப்பு ..... காதலை விட்டு கொடுத்தவன் .... எங்கே நல்லவாழ்க்கை ... வாழுகிறான் ...? + காதல் சிதறல் கே இனியவன்

உன் பிரிவுக்கு நன்றி ..

என் இதயம் ... எத்துனை துயரங்களை ... சுமக்கிறது  உயிரே .... கண்ணில் இருந்து கண்ணீர் ... வரவில்லை .... இதயத்திலிருந்து வருகிறது ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் சிதறல் கே இனியவன்

உன் பிரிவுக்கு நன்றி .... இத்தனை வரிகளை நீ தானே .... தந்தாய் .... உடல் மண்ணில் மறையும் .... நாள்வரை உன் எண்ணம் ... மனதில் இருக்கும் .... + காதல் சிதறல் கே இனியவன்

காலை வணக்கம்

இன்று  இனிமையாககவும் ... இன் முகத்துடனும் .... இடங்களை வசப்படுத்துவோம் ... இனிமையான காலை வணக்கம்  இனியவனின் ... இனிமையான வாழ்த்துக்கள் ....!!!

கண்ணீரை நிரப்புகிறது ....

எத்தனை கவிதை எழுதினாலும் ... முடியவில்லை நிறுத்த ... உலகில் பெரிய தொடர் கதை .... உன்னை பற்றிய கவிதை ....!!! ஒரு நினைவை மறக்கிறேன்.... மறு நினைவு கவிதையாய் ... கண்ணீரை நிரப்புகிறது ....  + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

காதலில் பெரிய வலி ....!!!

போதுமடி ..... என் இதயத்தை .... மிதித்துக்கொண்டு திரிவது .... எத்தனைமுறை அதுதாங்கும்... என் இதயம் ஈரமுள்ளத்தால் .... உன் வலிகளை தாங்கிக்கொண்டு ... வாழ்கிறது ....!!! காதல் பிரிவு ஒன்றும் .... பெரிய வலியில்லை.... என்னை தெரியாததுபோல் .... நீ நடந்துகொள்வதுதான் .... காதலில் பெரிய வலி ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

அக்கறையில்லை ....!!!

உனக்கு இரு வழிதான் உண்டு ... என்னை காதலிப்பது ... என்னை கொல்லவைப்பது....!!! உன் புன்னகை ... என் அனைத்து உறவையும் ... எதிரியாக்கி விட்டது ....!!! நான் இக்கரை ... நீ அக்கரை அதுதான் நீ காதலில் .. அக்கறையில்லை ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;805

உன் நினைவுகள் ....!!!

உன்னை காதலித்து ... வெய்யிலில் பூத்த பூ ... ஆகிவிட்டேன் .....!!! உன்னை காதலித்த நாள் .... ஆத்மா என்னை விட்டு .... போய்விட்ட நாள் ....!!! இருண்டிருக்கும் ... இதயத்தின் சிறிய ஒளி .... உன் நினைவுகள் ....!!! + கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ;804

தத்துவ சிதறல்கள்

வாழ்ந்து காட்டியவர்களும் .... வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ... வாழ்கை தத்துவம் கூறலாம் ..... வாய் சொல்லுக்கு தத்துவம் ..... வாழ்வுக்கு எடுபடாது ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

எண்ணம் ....

எண்ணத்தால் நிறைவேறாதது .... எதுவுமே இல்லை ..... எண்ணமே வாழ்க்கை ....!!! வெற்றிய தருவதும் எண்ணம் .... வேதனையை தருவதும் எண்ணம் .... + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

நான் பலமுறை ...

நான் பலமுறை ... பலகாரணங்களுக்காக .... விழுந்தவன் ....!!! அதுதான் இன்று .... நிமிர்ந்து நிற்க .... காரணமானது ....!!!

தத்துவ சிதறல்கள்

பிறரிடம் வருந்தாதே .... உன்னை வருத்து வெற்றி ... நிச்சயம் ....!!! தன்னை வருத்தாதவன் ... வருத்ததோடுதான் .... வாழ்வான் ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள் 

என் கவிதையை பாருங்கள் ....!!!

கணித அறிவுள்ளவர்களே .... என் வீட்டு கதவை தட்டுங்கள் ... அறிஞர் பைதகரஸ்  சொன்னது ...!!! காதல் உள்ளவர்களே ... என் கவிதையை பாருங்கள் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

மறைந்து விட்டாயே ....!!!

நான் உன்னை ... உயிர் என்று நினைத்தேன் ... நீ நிழலாக இருந்திருகிறாய்.... என்னை விட வெளிச்சமானது ... உன் கண்ணில் பட்டதால் ... மறைந்து விட்டாயே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காத்திருந்தேன் ....

மலரோடு வருவாய் ... காத்திருந்தேன் .... எண்ணங்களோடு ... பூத்திருந்தேன் .... மாலையோடு..... வந்திருகிறாய்......!!! + காதல் சிதறல் கே இனியவன்