ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
--------------------------------------------------
மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)

கவிப்புயலின் ஹைக்கூக்கள்
--------------------------------------------

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை
கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு
அடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.



^^^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்


" குடும்ப தலைவர் மரணம் " வழமையான ஒரு நிகழ்வு "ஒன்பது பிள்ளைகளும் ஓலம் " இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. " "கருத்தடை செய்த நாய் சாபம் " தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.

மேலும் தொடரும்.........................
இதோ சில விதிகள்.
------------------------------
ஒரே வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள்.
மூன்று வரியில் 17 சொற்கள் 5 - 7 - 5 என்ற வரிசையில்.
சொற்கள் எண்ணிக்கையில்லாமல் மூன்று வரிகள் - நடு வரி மட்டும் சற்று நீளம்.
மூன்று வரிகள் மேலிருந்து கீழாக.
ஒரே மூச்சில் சொல்லக் கூடியவை.
மூன்று வரிகளையும் ஒன்றாய்ச் சேர்த்தால் ஒரே வாக்கியமாக இல்லாதிருத்தல்.
வாசிக்கும் போது நிறுத்தம் முதல் வரியின் கடைசியில் அல்லது இரண்டாம் வரியின் கடைசியில். ஆனால் இரண்டிலும் ஒரே சமயத்தில் கிடையாது.
எப்பொழுதும் நிகழ்காலத்தில் எழுதுதல்.
உவமைகளை உபயோகிக்காதிருத்தல்.
தெளிவான காட்சிகளையே உபயோகித்தல்.
ஜென் கற்று, வார்த்தைகளால் சொல்ல முடியாத காட்சிகளை விவரித்தல்.
உலகியல் காட்சிகளை அப்படியே கூறுதல்.
இயற்கை காட்சிகளை மட்டுமே உபயோகித்தல் (மனிதர்கள் இல்லாமல்).
எதுகை மோனை இல்லாமல் எழுதுதல்.

நன்றி : களஞ்சியம் தளம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்